ஒசிதா இஹேம் : மீம்களிள் பிரலபமான நைஜீரியச் சிறுவன் - இந்த சிறுவனின் வயது என்ன தெரியுமா ?

யார் இந்த சிறுவன் ஓசிதா இஹேம் ? எதனால் இந்த சிறுவன் பிரபலமடைந்தான் ? இவருடைய பின்னணி என்ன என்பதை விவரிக்கும் கட்டுரை
ஒசிதா இஹேம்

ஒசிதா இஹேம்

Facebook

2019க்கு பிந்தயை காலகட்டத்தில் இரண்டு சிறு பையன்களின் குறுகிய வீடியோக்கள் பிரபலமாயின. அந்த இருவரும் சுருட்டு புகைப்பது, பெரியவர்களை கேலி செய்வது, பெண்களைக் கவருவது போன்ற சிறுவர்கள் செய்ய முடியாத பெரிய விசயங்களைச் செய்யும் வீடியோக்கள் பிரபலமாகின. முதலில் டவிட்டரில் ஆரம்பித்தது இந்த டிரெண்ட். ஆனால் அந்த சிறுவர்கள் யார் என்பத உலகிற்கு தெரிவியவில்லை.

osita iheme and chinedu ikedieze

osita iheme and chinedu ikedieze

Facebook

ஒசிதா இஹேம்

கொரோனா வைரஸ் பரவல் : தமிழகத்தின் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு - விரிவான தகவல்

நைஜீரிய காமிக் திரைப்பட இரட்டையர்கள்

ஆனால் நைஜீரிய திரைப்படத் துறையை அறிந்தவர்களுக்கு அந்த சிறுவர்களைப்பற்றி நன்கு தெரியும். இந்த வைரல் வீடியோக்களில் உள்ள சிறுவர்கள் நைஜீரிய காமிக் திரைப்பட இரட்டையர்களான ஓசிதா இஹேம் மற்றும் சினேடு இகெடீஸ். அவர்களின் சிறிய உருவத்தை வைத்து பலரும் அவர்களை சிறுவர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் இருவரும் வளர்ந்த ஆண்கள். இஹேமேவின் வயது 37 மற்றும் இகெடீஸ் வயது 41 ஆகும்.

நைஜீரியா நகைச்சுவை வேடங்களில் அவர்கள் இருவரும் மிகவும் விரும்பப்பட்டவர்கள் ஆவார். மேலும் அவர்கள் “அகி மற்றும் பாவ்பாவ்” என்ற பெயரில் கீழ் குறும்புக்கார குழந்தைகளாக நடித்த்தன் மூலம் புகழ் பெற்றனர்.

Memes

Memes

Twitter

பிரேசிலைச் சேர்ந்த நிக்கோல்

@nollywoodroll என்ற ட்விட்டர் கணக்கின் பின்னணியில் உள்ள பிரேசிலைச் சேர்ந்த நிக்கோல் என்ற பெண், இஹெமே மற்றும் இகெடீஸ்- இன் மீம்-ஸ்டார் அந்தஸ்துக்குப் பெரிதும் காரணமாவார். ஜனவரி முதல் 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அவரது டிவிட்டர் கணக்கு,தான் நைஜீரிய இரட்டையர்களின் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக்கியது. அந்த நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் நடித்த படங்களில் இருந்து துணுக்குகளை இடுகையிட ஒரு கணக்கை உருவாக்க முடிவு செய்தார். "கிளிப்புகள் எவ்வளவு தூரம் செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை! நிறைய பேர் இந்த உள்ளடக்கத்தை ரசிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, மேலும் இந்த நடிகர்களை உலகெங்கும் அறிமுகப்படுத்தியதற்கு பலரும் எனக்கு நன்றி சொன்னார்கள்." என்கிறார் பிரேசில் பெண்மணி.

வாழ்நாள் சாதனையாளர்

வாழ்நாள் சாதனையாளர்

Facebook

2007 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுபோர்ன் ஃப்ளைஸ் திரைப்படத்தின் காட்சி மிகவும் பிரபலமான மீம்களில் ஒன்றாகும். இது ஒரு கெட்டுப்போன இளைஞன் (இஹேம் நடித்தது) தனது பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதைப் பற்றிய நகைச்சுவைப் படமாகும். மேலும் தனக்காக சில பொறுப்பைகளை ஏற்று, ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புகிறான். இந்தப்படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகள், மில்லியன் கணக்கான ட்விட்டர் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இஹேம் ஒரு நாற்காலியில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்து, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் உணர முயற்சிக்கிறார். ஏதோ சரியாக நடக்கவில்லை என்பதை அவரது முகத்தின் தோற்றம் காட்டுகிறது, ஆனால் ஏன் என்று அவருக்கு புரியவில்லை. இந்தக் காட்சியும் அவரது புகழ் பெற்ற மீம்களாக மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்டது.

இதுபோன்று பல படங்களின் காட்சிகள், பாத்தரங்கள் மூலம் இஹேம் மீம்கள் உலகில் புகழ் பெற்றார்.

ஒசித்தா இஹமே, நைஜிரியாவில் 1982, பிப்ரவரி, 20-ல் பிறந்தவர். அவர் நிறுவிய இன்ஸ்பயர்டு மூவ்மெண்ட் எனும் பவுண்டேசன் மூலம் இளம் நைஜீரியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் மனதை ஊக்கப்படுத்தவம், அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் விதமாக செயல்படுகிறார். 2007-ம் ஆண்டில் அவர் ஆப்பிரிக்க திரைப்பட அகாடமியிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

2011-ம் ஆண்டில் அதிபர் குட்லக் ஜொனாதன் மூலம் ஒசிதா இஹேம் ஃபெடரல் ரிப்ப்ளிக் உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார்.

Nollywood

Nollywood

Facebook

ஆரம்பகால வாழ்க்கை

ஒசிதா இஹேம் நைஜீரியாவின் இமோ மாநிலத்தின் எம்பை டோலியைச் சேர்ந்தவர். இஹேம் அபியா மாநிலத்தில் வளர்ந்தார். இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி-இல் படித்து எம்பிஏ பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். இருப்பினும் அவரது பணி திரைப்பட நடிகராக மாறியது. ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்தார்.

அவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஒசிதா இஹேம் பெரும்பாலும் ஒரு குழந்தையின் பாத்திரத்தில்தான் அதிகம் நடித்தார். 2003 ஆம் ஆண்டில், அகி நா உக்வா என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் சினேடு இகெடீஸுடன் இணைந்து நடித்தபோது அவர் புகழ் பெற்றார். அவர் தனது பல படங்களில் குழந்தை வேடத்தில் நடித்துள்ளார், ஆனால் பின்னர் மிகவும் முதிர்ந்த பாத்திரங்களை ஏற்றுக் கொண்டார். பின்னர், இந்த இருவரும், எல்லா காலத்திலும் மிகவும் வேடிக்கையான நோலிவுட் நகைச்சுவை ஜோடிகளில் ஒன்றாக பலர் கருதுகின்றனர்.

ஒசிதா இஹேமே ரோட்டரி சர்வதேச சங்கத்தின் தூதுவராக நியிமிக்கப்பட்டார். இன்ஸ்பயர்டு 101 எனும் புத்தகத்தில் ஆசிரியரும் ஆவார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த ஒசிதா இஹேமே நைஜிரிய திரையுலகின் மிகவும் பிரபலமான முகங்களில் ஒன்றாகும். திரையில் அவரது தோழனாக நடிக்கும் சினேடு இகெடீஸைப் போலவே இஹேமும் சிறிய உருவத்தைக் கொண்டவர். ஒரு சிறுவனைப் போலவே காணப்படுவார். மற்ற நடிகர்களிடமிருந்து அவரது உடலைமைப்பு வேறுபடுத்திக் காண்பித்த்து.

அவர் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து பன்முகப்படுத்தப்பட்ட நடிகராக தனது திரை வாழ்வில் பரிணமித்துள்ளார். இது நைஜீரியத் திரைப்படத் துறை மற்றும் அதன் ரசிகர்களிடையே அவருக்கு மரியாதையைப் பெற்றுள்ளது. அவர் 2018 இல் அவர் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com