உடலுறவின்போது ஆணுக்கு ஏற்படும் உச்சக்கட்டம் என்கிற க்ளைமாக்ஸ் தருணத்தை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம்? விந்து வெளியேற்றம் நடந்தவுடன் ஆண் பரவசம் அடைந்துவிட்டதாக நாம் நம்புகிறோம்.
பரவச இன்பம் என்பது அவ்வளவு எளிமையானதா? நிச்சயமாக அப்படி அல்ல. உண்மையில் ஆண் உச்சியை அடையும் தருணம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையே.
விந்துவெளியேற்றல் மட்டுமே பரவசத்துகான குறியீடு அல்ல. ஆண் உறுப்பு, ஹார்மோன்கள், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து, திறம்படச் செயல்பட்டால்தான், அந்த ஆண்இந்த உச்சநிலையை அடைய முடியும்.
சரி… ஆண் உச்சநிலையை அடையும் வழிமுறை எது?
டெஸ்டோஸ்டிரோன் மூலம் பாலியல் ஆசை தூண்டப்படுவதுதான் ஆணின் ஆர்கஸத்துக்கான அடிப்படை.
வெற்றிகரமான உச்சக்கட்டத்தை ஓர் ஆண் அடைவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அடிப்படையில் ஆண் உறுப்பு பஞ்சுபோன்ற திசுக்களாக மெத்தென்றுதான் இருக்கிறது. அதனுள் தமனிகளால் 50 மடங்கு வேகத்தில் ரத்தவோட்டத்தைச் செலுத்தும்போதுதான் ஆண்குறி நிமிர்ந்து சல்யூட் அடிக்கிறது.
ஆண் உடல் உச்சக்கட்டத்துக்கு தயாரான உடன், தசைகளில் இறுக்கம் - குறிப்பாக இடுப்பு எலும்பில் ஏற்படும். அதன் பின் 30 விநாடிகள் முதல் 2 நிமிடங்கள்வரை ஆணின் உச்சக்கட்ட இன்பம் நீடிக்கும். இந்தக் கட்டத்தில் ஆணின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 150 முதல் 175 வரை அதிகரிக்கும்.
மேற்கண்ட தசை இறுக்கம் மற்றும் இதய படபடப்புக்குப் பிறகு, சிறுநீர்க் குழாயில் தயாராகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் விந்து வெளியேற்றப் பணி தொடங்கப்படுகிறது. உடனே நரம்புகள் மூலமாக மூளைக்கு இன்பக் குறியீடுகள் அனுப்பப்படுகின்றன.
இந்த இன்பப் பரிமாற்றம் மற்றும் விந்துவெளியேற்றலுக்குப் பிறகு, ஆண்குறி அதன் விறைப்புத்தன்மையை இழக்கத் தொடங்குகிறது.
பொதுவாக, ஆண்கள் அடுத்த விறைப்புத்தன்மையை அடைவதற்கு ஒரு கால இடைவெளி தேவை. 20-களில் இருக்கிற இளைஞனால் 15 நிமிடங்களிலேயே அடுத்த விறைப்புத்தன்மையை அடைய முடியும். முதிய ஆண்களுக்கு, இது 10 முதல் 20 மணி நேரம் வரைகூட ஆகலாம். உலக அளவில் சராசரி மறு விறைப்புக் காலம் என்பது அரை மணி நேரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust