காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11

காதலை பெருக்கும், காமம் பெருக்கும் உணவுகள் சிலவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்
காம உணர்வை பெருக்கும் உணவுகள்

காம உணர்வை பெருக்கும் உணவுகள்

Pexels

காதலை பெருக்கும், காமம் பெருக்கும் உணவுகள் சிலவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம். கீரைகள் என்றால் பொதுவாகப் பலரும் விரும்பாத உணவு. ஆனால், சில கீரைகள் காமத்துக்கும் காதல் உணர்வுகளுக்கும் உதவ கூடியவை. சிறுகீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரையைக் காதல் உணவுகள் என்கிறது சித்த மருத்துவம்.

மேலும், கீரைகள் நரம்புகளைப் பலப்படுத்தும். காம உறவுகளுக்கு உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. கீரையில் தேவையான கனிமங்களும் உப்புக்களும் அதிகம். கருவை உருவாக்க உதவும் சத்துக்கள் இதில் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் சிலரால் உடலுறவில் பெரிதாக ஈடுபட முடியாது. அவர்களுக்குக் கீரைகள் உதவும். தேவையான பலத்தைக் கொடுக்கும்.

Pregnancy

Pregnancy

Facebook

உடலும் உள்ளமும் காதலுக்கும் காமத்துக்கும் தயாராகுவதில் உணவுப்பழக்கமும் முக்கியமாகிறது

கருத்தரிக்கத் திட்டமிட்டால் வெண்டைக்காய், கீரைகளைப் பெண்கள் சாப்பிட்டு வரலாம். தேவையான ஃபோலிக் அமில விட்டமின்கள் கிடைக்கும். ஆண்கள், பாதாம் பருப்பு, சாரைப்பருப்பு சாப்பிட்டு வரலாம். பொதுவாக இரவில் வாழைப்பழம் சாப்பிட்டாலும் தாம்பத்திய வாழ்வுக்கு உதவும். பெண்கள் கற்றாழை ஜூஸ் குடித்து வர தாம்பத்திய வாழ்வுக்குத் தேவையான பலத்தைத் தரும்.

குறைவான விந்தணுக்கள் கொண்ட ஆணுக்கு, முருங்கைக்காய், வெண்டைக்காய் அவசியம். பெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியத்துக்கு வெண்பூசணி, வெண்டை, டபுள் பீன்ஸ், சுரை, கேரட், பீட்ரூட், சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை ஆகியவை நல்லது. மேலும் இது தாம்பத்திய வாழ்விற்கான உணவுகள்.

உடலும் உள்ளமும் காதலுக்கும் காமத்துக்கும் தயாராகுவதில் உணவுப்பழக்கமும் முக்கியமாகிறது. அதில் உணவுத் தேர்வும் அவசியமாகிறது. மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி ஆகியவை காமம் கூட்டும் திறன் உள்ளதாகச் சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. காதலுக்கு வசப்படவும் நீண்ட நேர உறவை நீடிக்கச் செய்யவும் உதவுகின்றன.

காம உணர்வை பெருக்கும் உணவுகள்

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

Strawberry

Strawberry

Facebook

நீடித்த காதலும் காமமும்

பேரீச்சைப்பழங்கள் அரபு நாட்டின் காதல் சின்னங்கள். நெடுங்காலமாக அரபு நாட்டில் பேரீச்சையைக் காதல் உணவாகவே பயன்படுத்தி வரும் பழக்கம் உள்ளது. சித்த மருத்துவச் சில லேகியங்களில் பேரீச்சைக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. ஸ்டாபெர்ரி பழங்களையும் காதல் பெருக்கும் கனி என்கிறது நவீன அறிவியல். பெண்களுக்கும் இது உதவும். ஸ்டாபெர்ரிக்கு உள்ள அதே சத்துகளும் குணங்களும் நம் ஊர் நாவல் பழத்துக்கும் உண்டு. எனவே இருபாலினரும் ஸ்டாபெர்ரி கிடைக்காவிட்டாலும் வருத்தப்பட தேவையில்லை. நாவல் பழத்திலே அத்தனை பலன்களையும் பெறலாம். காதல் விட்டமின்கள் உள்ள உணவுகளான பேரீச்சை, காய்ந்த திராட்சை, அத்தியை அவ்வபோது சாப்பிடலாம்.

அளவோடு சாப்பிடுக்கின்ற நாட்டுக்கோழி கறியும் லோப்ஸ்டர் மீன் துண்டுகளும் காதலைத் தூண்டும். நீடித்த காதலும் காமமும் வேண்டுமெனில் சமைத்த உணவுகளில் அளவான காரமும் உப்பும் அவசியம்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

Twitter

‘உள்ளக்களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு’ என்கிறார் வள்ளுவர்

அதாவது ‘மது தராத போதையும் இன்பமும் மகிழ்வும் காதலுக்கு உண்டு’ என்பதுதான் இதன் விளக்கம். காதலை பெற உணவுகளே உதவும் மது அல்ல. மது அருந்தும் பழக்கம், காதலின் மென்மையைப் போக்கும். காமத்தின் ஆளுமையைச் சிதைக்கும். இது உடனடியாகவும் நிரந்தரமாகவும்கூட நடைபெறலாம்.

பால் சேர்க்காத காபி, காதல் பானம் என்கிறார்கள். அதுபோல சாக்லேட்டையும் காதலை தூண்டும் காதல் உணவு என்கின்றனர். அதற்குக் காரணம் கோகோவின் காதல் தூண்டும் சக்திதான். நரம்பு தூண்டும் சக்தி கோகோவில் உள்ளது. கருத்தரிப்புக்கு எதெல்லாம் உதவுமோ அதெல்லாம் காதலும் காமமும் தரும் உணவுகள்தான். அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் பெரிதும் பயன் தருபவை.

உணவுகளிலே பெரும்பாலும் காதலுக்கும் காமத்துக்கும் சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். எனவே யாரும் போலியான நிபுணர்களிடமிருந்து சிகிச்சை என்ற பெயரில் எந்த லேகிய வைத்தியமெல்லாம் செய்துகொள்ளத் தேவையில்லை. உண்மையிலே, உடலுக்குச் சிகிச்சை தேவையெனில் தகுதியான மருத்துவர்களிடம் மட்டும் சிகிச்சைக்குச் செல்வது நல்லது.

உயிர் அணுக்களைப் பெருக்கும் லிஸ்ட் இவைதான். மாதுளை பழமோ மாதுளை சாறோ அவ்வப்போது அருந்துவது. முருங்கைக்கீரை சூப் மிகவும் நல்லது விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும். மாப்பிள்ளை சம்பா சோறு, குதிரைவாலி சோறு, முருங்கைக்காய், பாசிப்பருப்பு சாம்பார், நாட்டு வெண்டை பொரியல், தூதுவளை ரசம், உணவில் சேர்ப்பதும் பயன் தரும்.

வாரம் ஒருமுறை நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் உணவுகள். உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு மிக அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் பருப்பு மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள். திணையிலும் கம்பிலும் நாம் எப்போதும் சாப்பிடுகிற டிபன் வகைகளைகூட செய்து சாப்பிடலாம்.

Drumstick

Drumstick

Twitter

ஆரோக்கியம் இருந்தால் காம உறவிலும் முழுமையான இன்பத்தைப் பெற முடியும்

காலை உணவுகள் கொஞ்சம் பாரம்பரியமாக இருப்பது நல்லது. மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம். இவையெல்லாம் விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் தன்மை கொண்டவை. தாம்பத்திய வாழ்வுக்குப் பலம் சேர்க்கும். பலவீனமானவர்களைப் பலப்படுத்தும்.

5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பசும்பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும். இதெல்லாம் கருத்தரிப்புக்கு பெண்களுக்கும் உதவும். ஆண்களின் விந்தணுக்களைக் கூட்டவும் செய்யும். காதலுக்கும் காமத்துக்கும் உதவும் உணவுகளாகவும் இருக்கின்றன.

ஆரோக்கியம் இருந்தால் காம உறவிலும் முழுமையான இன்பத்தைப் பெற முடியும். குழந்தைக்குத் திட்டமிடுவோருக்கும் இதே விதிதான். அதிக நேரம் கலவியில் ஈடுபட விரும்புவோரும் உடலை பராமரிப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியமான செயல். புணர்ச்சி நேரம் குறுகிய காலம் வரைதான் உள்ளது எனப் புலம்புபவர்கள் மேற்சொன்ன உணவு முறை பழக்கத்தால் உடலை பலப்படுத்தலாம். கலவியின் நேரம் கூடுதலாக, மேற்சொன்ன உணவுகள் பயன்படும். அடுத்து கலவியின் நேரம் தொடர்பான வகைகளைப் பற்றிப் பார்ப்ப்போம்.

முந்தைய பகுதியைப் படிக்க

காம உணர்வை பெருக்கும் உணவுகள்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com