கவலைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனால், எந்தக் கவலையும் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை. குறையும்; அதிகமாகும்; லேசாகும்; மறக்கும்; நீங்கும்… இப்படி ஒவ்வொரு காலத்தில் அவை மாறிக் கொண்டே போகும். அப்படிப்பட்ட கவலையை ‘வொர்ரி ட்ரீ எக்ஸர்ஸைஸ்’ மூலம் எப்படிப் பிரிக்கலாம். அதை ஆராய்ந்து கவலைகளை எப்படி நீக்கலாம் எனப் பார்க்கலாம்...
உங்களது கவலை அனுமானமா அல்லது நடைமுறையா?
உங்களால் கவலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது ஒரு கற்பனையான கவலை.
நீங்கள் கவலையைக் கட்டுப்படுத்தினால் அல்லது கட்டுப்படுத்த முடிந்தால், அது ஒரு நடைமுறை கவலை.
கவலையில் இரண்டு வகைகள் உள்ளன.
அனுமானக் கவலை (Hypothetical Worry)
நடைமுறைக் கவலை (Practical Worry)
முதலில் அனுமானக் கவலை (Hypothetical Worry) பற்றிப் பார்ப்போம். அனுமான கவலைகள் இதுவரை நடக்காத ஒரு விஷயத்துக்காகக் கவலைப்படுவது… ஆனால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியது.
கேள்விகள், நடக்காத, பயத்தால், சந்தேகங்களால், சாத்தியமில்லாத, தொலைதூர, எதிர்கால நிகழ்வுகள் பற்றிக் கவலைப்படுவது.
கற்பனையான கவலைகள் பெரும்பாலும் ‘சங்கிலியில் பிணைக்கப்படுகின்றன’. ஒன்றோடு ஒன்று எனப் பின்னிக்கொண்டு எண்ண ஓட்டங்களை அலையவிட்டுக் கவலைப்படுவார்கள்.
எடுத்துக்காட்டாக: கையில் சொறியோ அரிப்போ இருக்கலாம். ஆனால் இது ஸ்கின் கேன்சராக இருக்குமோ எனக் கவலைப்படுவது…
சாதாரணக் காய்ச்சலாக இருக்கலாம் இது மூளைக்காய்ச்சலா எனப் பயந்து கவலைப்படுவது…
என் செல்ல நாய்க்குட்டி வளர்ந்து பெரிதாகி இறந்துவிட்டால்... எனக் கவலை. ஆனால், நாய்க்குட்டி உயிரோடுதான் இருக்கும் விளையாடிக்கொண்டிருக்கும்.
வீட்டில் யாராவது வந்து திருடிவிட்டால் எனக் கவலை…
இப்படி நடக்காத நிகழ்வுகளை, நடந்துவிட்டால் என்ன ஆகும் எனக் கவலைப்படுவது, அனுமான கவலை.
இதற்குத் தீர்வு… கற்பனையை நிறுத்துங்கள். உங்களது கற்பனையை வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம். விளையாட்டு, செடி வளர்த்தல், ஓவியம், இசை, செல்ல பிராணிகள், சுவையான உணவைச் சமைப்பது, உண்பது…
உண்மையான நிகழ்வுகளின் கவலைகள்… தற்போது உங்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சனைகள்… அதற்கு நீங்கள் தீர்வு தேடியாக வேண்டும்.
ஒரு உண்மையான நிகழ்வு கவலைக்குப் பதிலளிக்கும் விதமாக, அவற்றைத் தீர்க்க முயற்சிப்பதற்கான உத்திகளை நாம் செயல்படுத்தலாம். எனவே, அந்தப் பிரச்சனை அதிகமாகத் தூண்டபடாமல் இருக்கும். அல்லது மேலும் பெரிதாகப் பாதிக்காமல் இருக்கும். இப்படிச் செய்வதால் சில கவலைகளைக் கூட உடனடியாகவே தணிக்கலாம்.
உதாரணமாக: உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்த பிறகு, அது தொடர்பான சண்டைக்குப் பிறகு, உடனடியாக அவர்களிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம் அல்லது வாதத்தின் காரணத்தைத் தீர்க்க முயற்சிப்பதன் மூலம் அதனால் ஏற்படும் கவலையைக் குறைக்கலாம்.
ஒரு பொருள் தொலைந்து விட்டதனால் கவலையா, அது கிடைக்க வழி தேடலாம். கிடைக்காது எனத் தோன்றினால், கவலையை விட்டொழிக்கலாம். கிடைக்காது எனத் தெரிந்தும் கவலைப்படுவதில் பயனில்லை.
இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் வழி இருக்கிறதா, வழி இல்லையா எனக் கேள்வி கேட்டு கவலைகளை ஒழிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust