Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

ஒவ்வொரு நபரும் மெதுவாகவும் படிப்படியாகவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் சில எளிய நடைமுறைகளும், தொடர் பயிற்சிகளும் இருக்கின்றன.
கோவிட்-19
கோவிட்-19NewsSense

கொரோனா என்ற ஒன்று எப்போது வந்ததோ, அப்போதிலிருந்து சாதாரண மக்களிலிருந்து கோடீஸ்வரர்கள் வரை ஏதாவது ஒரு வகையில் நிலைகுலைந்து தான் போயிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைவரும் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள். இதுபோல மனிதனின் கைமீறிய விசயங்களின் போது உண்டாகும் மன அழுத்தத்தைச் சமாளிப்பது எளிதல்ல.

இருப்பினும், ஒவ்வொரு நபரும் மெதுவாகவும் படிப்படியாகவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் சில எளிய நடைமுறைகளும், தொடர் பயிற்சிகளும் இருக்கின்றன.

கோவிட்-19
கேரளா ஷவர்மா : சிறுமியை கொன்ற ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன? - Explained
  • ஒவ்வொரு சூழ்நிலையிலும் மோசமான விஷயத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் நினைக்கும் போது கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. உங்கள் மனம் அமைதியாக இருக்க உதவும் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள்.

  • தினமும் தியானம் செய்வதன் மூலம் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அது உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாவதிலிருந்து காப்பாற்றும்.

  • உங்களிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இருக்கிற பொருட்களை மதிப்பது முக்கியம். நமக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நன்றியுடன் இருப்பது நேர்மறையான அணுகுமுறையை வைத்திருக்க உதவுகிறது.

கோவிட்-19
பிரபலாகி வரும் மணக்கும் மல்லிகை அரிசி : Jasmine Rice சாப்பிடலாமா? | Nalam 360
  • நிறையத் தூங்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நன்றாக உறங்கும் நாட்களில் உறக்கத்தைக் கண்காணித்துப் பதிவு செய்து கொள்ளவும்.

  • தவிர்க்கமுடியாத சூழலில் ஏதேனும் மன நெருக்கடிக்கு ஆளாகும்பட்சத்தில், மனதிற்குள்ளாகவே பின்னோக்கி எண்ணுவதைச் செய்யுங்கள். அது அந்த சூழலை அமைதியாக எதிர்கொள்ள உதவும்.

  • நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உடலுக்குள் நல்ல ஹார்மோன்கள் சுரக்கிறது. இதுவும் கூட மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

கோவிட்-19
Covid : கோவிட் தொடர்பான சீனாவின் கொள்கையில் என்ன மாற்றம்? | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com