Summer Health Tips: வெயிலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் - பாதுகாப்பது எப்படி?

வெயில் தரும் நோய்களிலிருந்து நம் குழந்தைகளைக் காக்க அவர்களுக்காக ஸ்பெஷல் கேர் எடுப்பது பெற்றோர்களின் கடமை. சூரியனின் தீவிர தக்குதலில் இருந்து நம் வீட்டு பிஞ்சுகளைக் காக்க சில எளிய வழிமுறைகளைக் கடைப் பிடிக்கலாம்.
குழந்தைகள்
குழந்தைகள்Twitter

இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஏப்ரல் மாதம் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெயில் பதிவாகியிருக்கிறது. நம் ஊரிலும் அதற்குச் சளைக்காமல் வெயில் சுட்டெரிக்கிறது. பைக்கில் தண்ணீர் ஊற்றி உட்காருவது முதல் உடல் சூட்டுக்கு இளநீர் சாப்பிடுவது வரை சம்மரை சமாளிக்கப் பெரியவர்களாகிய நாமே திணறி வரும் போது குழந்தைகள் நிலை என்ன?

வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானால் நோய்களின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றிலிருந்து நம் குழந்தைகளைக் காக்க அவர்களுக்காக ஸ்பெஷல் கேர் எடுப்பது பெற்றோர்களின் கடமை. சூரியனின் தீவிர தக்குதலில் இருந்து நம் வீட்டு பிஞ்சுகளைக் காக்க சில எளிய வழிமுறைகளைக் கடைப் பிடிக்கலாம்.

தோல் நோய்கள்

  • வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு 'போட்டே டெர்மடைட்டிஸ்' எனப்படும் சூரிய ஒளி ஒவ்வாமை நோய் ஏற்படலாம்.

  • வியற்குரு பிரச்சனை வரலாம்

  • வியற்வையால் முடியின் வேர்ப் பகுதியில் பாக்டீரியா தங்கி கொப்புளம் ஏற்படலாம்.

குழந்தைகள்
Tooth Decay : குழந்தைகள் கை சப்புவதை நிறுத்தலைன்னா என்ன நடக்கும்? - DR. M S Saravana Kumar
வெப்பம்
வெப்பம்Twitter

வெயிலை எதிர்கொள்வது எப்படி?

  • குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்காதீர்கள். காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை வெளியில் வரவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

  • அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும்

  • வீட்டை வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • வீட்டில் அனல் அடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

  • குழந்தைகளுக்கு இயற்கையான - மெல்லிய நறுமணம் கொண்ட லோஷன்கள், சந்தனம், பவுடர்களைப் பயன்படுத்தலாம்.

  • லோஷன், பவுடர்களை தேர்ந்தெடுக்கும் போது அதன் மூலம் அலர்ஜி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் அலர்ஜி ஏற்பட்டால் இரு மடங்கு அசௌகரியத்தைத் தாங்க வேண்டியிருக்கும்.

  • சரும பிரச்சனைகளைத் தடுக்க குழந்தைகளின் உடலோடு ஒட்டி இருப்பது போன்ற இறுக்கமான ஆடைகளைப் பயன் படுத்தாமல் இருப்பது நல்லது. தளர்வான பருத்தி ஆடைகளே சிறந்தது.

Food
FoodTwitter
குழந்தைகள்
வெயில் தாக்கத்தால் வரும் பாதிப்புகளைக் குறைக்க உதவும் பானங்கள்!

உணவுப் பழக்கம்

  • காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்துள்ள காய்கறிகள்

  • எண்ணெயில் பொரித்த உணவை கொடுக்க வேண்டாம்.

  • சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை முடிந்த அளவு குறைத்துக்கொள்ளலாம்.

  • ஜூஸ் கொடுப்பதாக இருந்தால் வீட்டில் தயாரித்துக் கொடுக்கவும்

  • வெயிலில் அலையாவிட்டாலும் வெப்பம் காரணமாக வியர்வை, நீரிழப்பு ஏற்படும். இதனால் சரியான அளவு தண்ணீர் பருகி நீர்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள்
Summer Skin Care: சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லதா? எப்படி பயன்படுத்துவது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com