உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்

குளியல் கலாச்சார ரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாகக் குளிப்பது ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்
உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்Twitter
Published on

மனித உடல், இன்று வரை மனித இனத்தாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அதிசய கருவி. இது இறைவன் கொடுத்ததா, இயற்கை படைத்ததா, பரிணாம வளர்ச்சி அடைந்ததா என்பதையே இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் மனிதர்களால் இந்த அளவுக்குத் தான் சாதிக்க முடியும் என்று இருந்தால், அந்த இலக்கு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு விளையாட்டுத் துறையைச் சொல்லலாம். சில தசாப்தங்களுக்கு முன் வரை 100 மீட்டரை 10 நொடிக்குள் ஓடவே முடியாது என்கிற நிலை மாறி, இன்று ஒலிம்பிக்கில் ஓடும் பெரும்பாலானவர்கள் 10 நொடிக்குள் ஓடுபவர்களாக இருக்கிறார்கள்.

அப்பேர்பட்ட மனித உடல், மனிதர்கள் தங்களுக்கே தெரியாமல் செய்யும் பல தவறுகளால் சிதைகிறது. உதாரணத்துக்கு மனிதர்கள் தினமும் குளிப்பதைச் சொல்லலாம். மேற்கத்திய நாடுகளில் நிலவும் கடும் குளிரை முன்னிட்டு குளிப்பது அவர்கள் நாகரிகத்தில் ஒரு கட்டாயமாக்கப்படாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் குளியல் என்பது தினசரி விஷயங்களில் ஒன்று.

அது கலாச்சார ரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாகக் குளிப்பது ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் நம் இஷ்டத்துக்குச் சாப்பிட்ட பிறகு குளிப்பது, அதிக வெப்பமான  நீரில் குளிப்பது போன்ற தவறுகள் நம் உடலில் உள்ள செரிமான மண்டலம் கடுமையாகப் பாதிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் டிம்பிள் ஜங்டா என்பவர், குளியல் தொடர்பாக சில முக்கிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

1. குளிப்பதற்கு முன் நீர் குடிப்பது: ஒரு குவளை மிதமாகச் சூடுபடுத்தப்பட்ட நீர் அல்லது அறை வெப்பநிலையில் (Room temperature) உள்ள நீரைக் குடித்துவிட்டுக் குளிக்கச் செல்வது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறார்.

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரைக் குடிப்பது உடலின் உட்புறத்தில் உடலைச் சூடுபடுத்தும், அது ரத்தக் குழாய்கள் விரிவடையச் செய்யும். இதனால் ரத்தம் நன்றாக உடல் முழுக்க பரவும். இதே போலத் தான் உடல் மீது நீர் படும்போது ரத்தக் குழாய்கள் விரிவடைந்த ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே முதலில் நீரைக் குடித்துவிட்டால் அது உடலுக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்த மாதிரி ஆகிவிடும். அதோடு ரத்த அழுத்தமும் குறையும் என்கிறார்.

2. வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு குளிக்காதீர்: இதை நம் ஊரில் உள்ள பெரியவர்கள், அப்பத்தாக்கள், அம்மம்மாக்கள், நம் அம்மாக்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம். அப்படிச் சாப்பிட்ட பிறகு குளித்தால், அது நம் செரிமான மண்டலத்தில் உள்ள வெப்ப ஆற்றல் மந்தமடைந்து, செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவு மூலம் கிடைக்கும் இயற்கையான நுண் சத்துக்கள் கிடைக்காது, உடலும் உறிஞ்சிக் கொள்ளாது என்கிறார் டிம்பிள் ஜங்டா.

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு நம் உடலில் உள்ள கணிசமான ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் செல்கிறது. அந்த நேரம் பார்த்துக் குளித்து விட்டால், உடல் சருமத்துக்கு நம் உடலில் உள்ள ரத்தம் திசை மாற்றப்படுகிறது. எனவே சாப்பிட்ட பின் குளிப்பதற்குப் பதிலாக, சாப்பிடுவதற்கு முன் குளிப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார் மருத்துவர் டிம்பிள்.

மாலை சூரியன் மறைந்த பின் குளிக்க வேண்டாம்: மனித உடல் இயற்கையாகவே மாலை சூரியன் மறைந்த பின் குளிர்வித்துக் கொள்ளத் தொடங்கும். அப்படி ஏற்கனவே குளிர்ந்து கொண்டிருக்கும் உடல் மீது நீர் ஊற்றிக் குளித்துவிட்டால், உடலில் உள்ள போர்ஸ் என்றழைக்கப்படும் சிறு துளைகள் மூடிக் கொள்ளும். அது உடலின் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் உறக்கம் பாதிக்கப்படும் என்கிறார் டிம்பிள் ஜங்டா.

உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்
காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?

குளிக்கும் போது, உடலில் இதயத்துக்குக் கீழ் மிதமான சூடுள்ள நீரையும், இதயத்துக்கு மேல் உள்ள பாகங்களுக்கு அறை வெப்பநிலையில் உள்ள நீரையும் பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் என்கிறார் மருத்துவர் ஜங்டா. 

வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள் மிதவெப்ப நீரைக் குளிக்கப் பயன்படுத்தலாம் என்கிறார்.

உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்
இவற்றை சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் - அறிவியல் சொல்லும் 6 உணவுகள்!

குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது ஐஸ் பாத் என்றழைக்கப்படும் பனிக்கட்டிகள் போட்டுக் குளிர்விக்கப்பட்ட நீரில் குளிப்பது எல்லாம் விபத்து ஏற்பட்டு உடல் நலம் தேறி வருபவர்களுக்கு நல்ல பலனைத் தரும். பொதுவாக இப்படிக் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் உள்ள வீக்கங்கள், உடலில் லாக்டிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். ரத்த நாளங்களை இறுகச் செய்ய உதவும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்டா. அதே போல உடலில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து கொள்வது போன்றவைகளை குளிப்பதற்கு முன் செய்து கொள்வது நல்லது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்டா.

உங்கள் குளியல் முறை ஆபத்தானதாக இருக்கலாம்- ஆரோக்கிய குளியலுக்கு ஆலோசனை செல்லும் மருத்துவர்
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? - உங்களுக்கு இந்த மனநல பிரச்னை இருக்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com