சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

சத்துகளும் பலன்களும் மிக அதிகம் இருக்கும் இந்த உணவு, இந்தியாவில் அதிகப் பயன்பாட்டில் இல்லை. அதனைப் பற்றிப் பார்ப்போம்…
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான்
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான்Pexels
Published on

அதிகப் பேரால் சாப்பிடாதப்படாத ஒரு சத்தான உணவு… பெரிதும் மக்களுக்குப் பழக்கப்படாத உணவு. ஆனால், சத்துகளும் பலன்களும் மிக அதிகம். இதைச் சாப்பிடத் தொடங்கிவிட்டால், இதை மார்கெட்டில் விற்கும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

எப்படிச் சிறுதானியங்களைச் சாப்பிடத் தொடங்கி மார்கெட்டை அதிகரித்தோமோ அதேபோல இது மாதிரியான உணவு வகைகளையும் சாப்பிடத் தொடங்கினால் விரைவில் பெரும்பாலான கடைகளில் வெங்காயம், தக்காளியை விற்பதுபோல இதையும் விற்கத் தொடங்குவார்கள்.
சீன உணவுகளில் அதிகளவில் இடம் பெறும் உணவு இது.

ஆனால், இந்தியாவில் அதிகப் பயன்பாட்டில் இல்லை. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்…

பலன்கள் அதிகம் உள்ள தாமரைத்தண்டு

குளத்தின் நீர் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்குத் தாமரைத்தண்டுகள் உயர்ந்து வளர்ந்து இருக்கும். பூ, இலை வாடினாலும் தண்டு வாடாது. மறுபடி மழை பொழிந்தால் உடனே அதில் இருந்து பூ, இலை வளரும். அந்தளவுக்கு உறுதியானது.
சீன உணவுகளான சூப், சாலட் மற்ற உணவு பண்டங்களில் தாமரைத்தண்டை சேர்க்கின்றனர்.


தாமரைத்தண்டை வெட்டி பார்த்தால் சக்கரம் போன்ற வடிவத்தில் தெரியும். தாமரை தண்டு வத்தலை சாப்பிட ரத்தம் உற்பத்தியாகும் எனச் சித்த மருத்துவம் சொல்கிறது. வத்தல் குழம்பு போலச் செய்து சாப்பிடலாம். அனைவரும் சாப்பிட ஏற்றது.


தாமரை பூவின் இதழ்கள் போலத் தாமரைத்தண்டு அதிகச் சத்துக்கள் கொண்டவை. மாவுச்சத்து, புரதசத்து, மினரல்கள், விட்டமின்கள், இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளன.
இந்தத் தண்டை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம் எனச் சொல்கிறார்கள்.


மலச்சிக்கல் தீர்க்கும். குடலில் உள்ள மலத்தை நகர்த்தி வெளி செல்ல உதவும்.


விட்டமின் பி சத்து இருப்பதால், பைரிடாக்ஸின் எனும் காம்பவுண்ட் மூளைக்குச் சென்று மன அழுத்தம், எரிச்சல் மனநிலை, தலைவலி ஆகியவற்றை நீக்கும்.


அழகான சருமமும், அடர்த்தியான முடியும் பெற தாமரைத்தண்டை அவசியம் சாப்பிட வேண்டும்.

தாமரைத்தண்டை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி தாங்குவதால், மீண்டும் மீண்டும் பசி எடுக்காது. ஆதலாம், உடல் எடையை குறைக்கலாம்.


சிறுநீரில் உள்ள சோடியம் உப்பை வெளிதள்ளும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாகும்.


தாமரைத்தண்டை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. 66 உணவு வகைகளை வைத்து ஆராய்ந்ததில் இந்தத் தாமரைத்தண்டு முக்கிய இடத்தில் உள்ளது.
நீருக்கு அடியில் இந்தத் தாமரை தண்டு வளர்வதால் குளிர்ச்சி தன்மையுடையது. உடல் சூட்டால் அவதிபடுபவர்கள் தாமரைத்தண்டை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.


விட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
எலும்பு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சாப்பிட எலும்புகள் ஆரோக்கியமாகும்.

சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான்
தவளை கால் முதல் செவ்வெறும்பு வரை: இந்தியாவிலிருக்கும் 10 வித்தியாசமான உணவுகள்


சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.


வயிற்றில் ஏற்படும் வெப்பம், ரத்தத்தில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கும்.


குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்க தாமரைத்தண்டை சாப்பிடலாம்.
வயிற்றுப் புண், குடல் புண், வாய் புண், ரத்த வாந்தி, ரத்த கழிச்சல் தொல்லை இருப்பவர்களும் தாமரைத்தண்டை சமைத்து சாப்பிட்டு வரலாம்.


ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கத் தாமரைத்தண்டு சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை சாப்பிடலாம்.
ரத்தம் கலந்த கழிச்சலை சரியாக்க தாமரைத்தண்டை வெல்லத்துடன் சேர்த்துப் பச்சையாகச் சாப்பிட கொடுக்கின்றனர் சீனர்கள். இது சீனர்கள் பயன்படுத்தும் சீன மூலிகை மருத்துவ முறை.

சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான்
ஒரு பிளேட் french fries விலை 15,800 ரூபாய் - ஏன் தெரியுமா?

தாமரைத்தண்டை வாங்கும், சுத்தம் செய்யும் முறை


இரு புறமும் மூடியிருக்கும் தண்டை தேர்ந்தெடுக்கலாம். ஒருபுறம் திறந்திருக்கும் தண்டாக இருந்தால் சேறு உள்ளே சென்று இருக்கலாம். நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.
இரு முனைகளையும் நறுக்க வேண்டும். பின்னர்த் தோலை பீலரால் உரிக்கவும்.


தோலை உரித்த பின்னர் நன்கு கழுவவும். தண்டின் துளைகளில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கழுவவும்.
தாமரைத்தண்டை சாய்வான கோணத்தில் வைத்து வெட்டவும். வெட்டிய துண்டுகளை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவவும்.


பின்னர், விருப்பத்துக்கு ஏற்ப சமைக்கலாம்.

சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான்
சீனா: நூற்றாண்டு பழமையான 3800 டன் எடை கட்டடம் நகர்த்தப்பட்ட அதிசயம்- எப்படி சாத்தியமானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com