உணவில் பாலை தவிர்ப்பது நல்லதா? நிபுணர் கூறுவதென்ன?

பிசிஓடி மற்றும் தைராய்டு உள்ளவர்கள், மாதவிடாய் நின்றவர்கள் அல்லது கர்ப்பமாக இருப்பவர்கள் தொடர்ந்து பால் சாப்பிடலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
Milk
MilkCanva
Published on

தினமும் பால் குடிக்கலாமா? என்ற கேள்வியும் சந்தேகமும் பலருக்கு இங்கு உள்ளது.

பால் உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் பி மற்றும் டி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் பால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாகவும் இருக்கிறது.

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் "பால் தவிர்ப்பது" பற்றி பேசினார்.

Milk
MilkTwitter

அன்றாட உணவில் பால் மற்றும் பால் பொருட்களின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், பால் பொருட்களுக்கு ஒவ்வாமை இல்லாவிட்டால், அதை முழுவதுமாக தவிர்க்கக்கூடாது என்று கூறினார்.

"இந்தியாவில் உள்ள பல உணவு வகைகளில் பால் மற்றும் பால் பொருட்கள் முக்கியமானவை. வயிற்றைச் சுத்தப்படுத்த தயிர் உதவுகிறது. பெருங்குடலைச் சுத்தப்படுத்த மோர் உதவுகிறது. பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் பல ஆண்டுகளாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, என்று டாக்டர் ருஜுதா திவேகர் கிளிப்பில் கூறினார்.

Milk
அடிக்கடி தலைவலியால் அவதிபடுகிறீர்களா? இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

பிசிஓடி மற்றும் தைராய்டு உள்ளவர்கள், மாதவிடாய் நின்றவர்கள் அல்லது கர்ப்பமாக இருப்பவர்கள் தொடர்ந்து பால் சாப்பிடலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பிசிஓடி மற்றும் தைராய்டு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு தேவை, அவர்கள் சரியான நேரத்தில் தூங்க வேண்டும், அவர்களின் தொழில் மற்றும் பொழுதுபோக்கு வாழ்க்கையில் சமநிலையை அடைய வேண்டும் என்று அவர் கூறினார்.

Milk
Water fasting : தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com