இரவில் ஆடையின்றி தூங்குபவரா நீங்கள்? - இந்தக் கட்டுரையை படித்துவிடுங்கள்

பெரும்பாலானோருக்கு வயிறு பிரச்சனை இருக்கும். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக்கூட வாயு காற்று ஆசனவாயில் வெளியேறுவது இயல்பு, இயற்கையான விஷயம். உடலின் காற்றுக் கழிவு வாயு காற்றாக வெளியேறுகிறது.
Sleep
SleepCanva

ஆடையில்லாமல் தூங்குவது சிலருக்கு ரொம்பவே பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காமலும் இருக்கும். ஆடையின்றித் தூங்குவதால் சில பலன்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஆடையின்றித் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றித் தெரியுமா… ஆடையின்றித் தூங்குவதற்கு முன் உங்கள் முடிவை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது…

நிச்சயமாக, நமக்குத் தூங்குவதில் வெவ்வேறு பழக்கங்கள் இருக்கலாம். நம்மில் சிலர் தூங்கும் போது சிறிது வெளிச்சமாவது வேண்டும். இருளாக இருந்தால் பயம் என்பார்கள். சிலர் இருட்டாக இருக்கும்போதுதான் தூக்கம் வரும் என விரும்புவார்கள். சிலருக்குக் காலுறையுடன் தூங்குவது பிடிக்கும், முழு ஆடையோடு தூங்குவார்கள். சிலருக்குத் தூங்கும் போது எதையும் அணியவே பிடிக்காது.

தூக்க நிபுணர் ஒருவர் சொல்கிறார், ஆடையின்றித் தூங்குவது ஆரோக்கியமற்றது என்று….

பெரும்பாலானோருக்கு வயிறு பிரச்சனை இருக்கும். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக்கூட வாயு காற்று ஆசனவாயில் வெளியேறுவது இயல்பு, இயற்கையான விஷயம். உடலின் காற்றுக் கழிவு வாயு காற்றாக வெளியேறுகிறது.

சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 15 முதல் 25 முறை வாயு காற்றை வெளியேற்றுவார்கள் என நிபுணர்கள் சொல்கிறார்கள். நீங்கள் தூங்கும் போதுகூட இது நிகழலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆசனவாய் வழியாக வாயு காற்றை வெளியேற்றும் போது நீங்கள் சிறிய அளவு மலத்தைத் தெளிக்கிறீர்கள். அதாவது வாயு காற்றோடு சிறிது மணித்துளிகளும் வெளியேறும் என ஓர் ஆய்வு சொல்கிறது.

ஆடையோ, உள்ளாடையோ அணிந்திருந்தால் இந்த மலக்கற்று நீங்கள் தூங்கும் படுக்கை, போர்வை மீது படாது. உங்களது ஆடைகளிலே இந்த மலக்கற்று பட்டுவிடும். ஆனால், நீங்கள் ஆடையின்றித் தூங்கினால் உங்களது மலக்கற்று படுக்கை, போர்வைகளில் பட, தெளிக்க வாய்ப்புகள் அதிகம்.

Sleep
சிறுநீரில் அதிகரிக்கும் துர்நாற்றம் - நோய்களுக்கான அறிகுறியா ? | Nalam 360

எனவே, அடிப்படையில் நீங்கள் உங்கள் உள்ளாடைகளை அணியவில்லை என்றால், உண்மையில் படுக்கையைச் சுற்றி சிறிய மலத்துகள்களைத் தெளிக்கிறீர்கள் என அர்த்தம். மலத்துகள்கள் உள்ள படுக்கையில் தூங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். ஐயோ! அது எவ்வளவு சுகாதாரமற்றது.

இப்படி உங்களை அறியாமல் உங்களது மலத்துகள்கள் உங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, எப்போதும் ஆடையை அணிந்திருப்பது நல்லது. ஆடைகளை நன்றாகத் துவைத்துச் சுகாதாரமாகப் பராமரியுங்கள்.

Sleep
கனவுகள் மரணத்தை எப்படி அறிவிக்கும்? கனவு மூலம் புரிந்துகொள்ள வேண்டியவை

ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, ‘ஆடையின்றி உறங்குவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அதிக அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை'. எனினும், இப்படி வாயு வெளியேறுகையில் மலத்துளிகள் கலந்து வெளியேறுவது அசுத்தமான இடங்களாக மாற்றத்தான் செய்யும். எனவே, ஆடை முக்கியம், தூங்கும்போது…


நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, பெரியவர்கள் குறைந்தது இரவில் ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும். தூங்காமல் இருப்பது இதய நோய், உடல் பருமன், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, அனைவருமே தூங்கும்போது ஆடையுடன் தூங்குங்கள். அதுவே சுகாதாரமானது.

Sleep
முக்கியமான சுரப்பு எந்த நேரத்தில் வரும்? இரவு தூக்கத்தில் நாம் செய்யும் தவறுகள்..!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com