முக்கியமான சுரப்பு எந்த நேரத்தில் வரும்? இரவு தூக்கத்தில் நாம் செய்யும் தவறுகள்..!

மனித கண்களுக்கு விலங்குகளைப் போன்ற ஒளிரும் பச்சை கண்கள் இல்லை. இதுதான் நமக்கும் சில விலங்குகளுக்கும் இயற்கை கொடுத்திருக்கும் வேறுபாடு. இந்த ஒளி இல்லாத கண்கள்தான் மனிதர்கள். இது இரவு தூங்க வேண்டிய இனம் என்பதற்கான இயற்கைத் தந்த அறிகுறி.
Sleep

Sleep

Twitter

தூக்கம் இல்லை என்று சொல்பவர்கள் அதிகம். தூக்க மாத்திரையோடு தூங்கும் சிலரும் உண்டு. தூக்கம் இல்லாமல் இருப்பதால் நாம் இழப்பவை ஏராளம். அதை ஒரு பதிவிலே சொல்லி முடிக்க முடியாது. அந்தளவுக்குத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியமான தேவை. புத்துணர்வு தருவதும் தூக்கம்தான். நம் கழிவுகளை நீக்கும் வேலை செய்வதும் தூக்கம்தான். தூங்குகின்ற நேரத்தில் உடலில் பல கழிவு நீக்கங்கள் நடைபெறும். தூங்காத உடலில் என்ன நடக்கும்? தூங்கிய உடலுக்கும் தூங்காத உடலுக்கும் மிக மிக அதிக வேறுபாடுகள் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி என்ற பலத்தைத் தூக்கம் அதிகமாகக் கொடுக்கும். உலகில் மொத்த ஹார்மோன் மருத்துவர்கள் கூடி உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைத்தாலும் உங்கள் உடலுக்கு அது பெரிய நன்மைகளைத் தராது. ஆனால், உங்களது தினசரி தூக்கம் உங்களது வாழ்வையே ஆரோக்கியத்தையே செம்மையாக்கிவிடும்.

ஒருவேளை யாருக்காவது இரவு 7 மணிக்கோ 8 மணிக்கோ உறக்கம் வந்தாலும் தூங்கச் செல்ல வேண்டும். இரவு 10 மணிக்குள் மேல்தான் தூங்க வேண்டும் எனக் காத்திருத்தல் கூடாது. தூக்கம் வந்தால் தூங்கிவிட வேண்டும். தூக்கத்தின் விதி மீறி வேலைகளைச் செய்வது உடலுக்குக் கெடுதி.

நாம் செய்யும் தவறுகள்

1. சமதளத் தரையிலோ மரக்கட்டில் அல்லது பாயிலோ அல்லது கார்பெட் போன்ற விரிப்பிலோ மட்டும் படுக்கையாகக் கொள்வது நல்லது. உள்ளே அமுங்கி ஏறத்தாழ இருக்கும் படுக்கை முதுகுவலியைக் கொடுக்கும்.

2. மெத்தையில் ரப்பர் மெத்தைகள் கெடுதி. உடலுக்குச் சூட்டைத் தரும். புண்கள் வரும்.

3. உடைக்கு எப்படிச் சுத்தம் பார்ப்போமோ அதுபோலப் படுக்கையும் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை சுத்தம் மிக அவசியம்.

4. உறங்கும் இடத்தில் சிறிதளவாவ்து காற்றோட்டம் இருக்க வேண்டும். மொத்தமாக மூடிக்கொண்டு தூங்குவது. வெளியில் விடப்பட்ட சுவாசத்தை மீண்டும் மீண்டும் சுவாசிக்க நேரிடும்.

5. போர்வையைத் தலை முதல் கால் வரை போர்த்தித் தூங்கினால், மூச்சுக்காற்றுத் திரும்பத் திரும்ப அதே காற்றைச் சுவாசிக்கும் நிலை வரும். இது அத்தநாள் உடல் மனச்சோர்வைத் தரும். அத்தநாள் தலைவலியும் வரலாம். குளிருக்கு தக்கபடி போர்த்தலாம். ஆனால் முகம் மூடி பழைய காற்றைச் சுவாசிக்கக் கூடாது.

6. சிலர் குறுக்கி முடக்கிப் படுப்பார்கள். இது சுவாச அளவை குறைக்கும். இடதுபுறமாகப் படுப்பது நல்லது. வலப்புறம் படுப்பதைக் குறைக்கலாம்.

7. சவாசனம் போலப் படுத்து உறங்குவதும் நல்லது. கை, கால்களை மடக்காமல் நீட்டித் தூங்குவது இன்னும் நல்லது. சிலர் கை மடக்கி கழுத்து திருப்பி இப்படியெல்லாம் டிசைன் டிசைனாக தூங்குவார்கள். இது சரியான நிலை அல்ல.

8. தூக்கம் வராவிட்டால் படுத்துக்கொண்டே ஆழ்ந்த சுவாசத்தைப் பயிற்சியாகச் சில நிமிடங்கள் செய்திடத் தூக்கம் வரும்.

9. அவசியம் இருக்கும்போது மட்டுமே கண்களுக்கும் அடிவயிற்றுக்கும் ஈரத்துணிப்பட்டியை லேசாகப் போட்டுக் கொள்வது நல்லது. இதனால் கண் எரிச்சல் நீங்கும். வயிறுத் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

10. இரவு உணவுக்கும் உங்கள் தூக்கத்துக்கும் குறைந்தது 2 - 2 ½ மணி நேரம் இடைவெளி இருப்பது மிக மிக அவசியம். வயிற்றில் உணவு செரிக்கையில் படுத்துத் தூங்கச் செல்லக் கூடாது. சாப்பிட்டவுடனே படுக்கவும் கூடாது.

11. ஆலம் விழுது, கருவேலங்குச்சி, அறுகம்புல், மா, கொய்யா இலை ஆகியவற்றில் ஏதோ ஒன்றைக்கொண்டு பற்களைத் துலக்கி வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகே தூங்க செல்வது சரியான முறை என இயற்கை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

12. உறங்கும்போது தளர்ச்சியான மெல்லிய ஆடைகளை அணிவது நல்லது. அதுவும் காற்றோட்டம் உள்ள இடத்திலே தூங்குவது சரியானது.

13. உறங்கும் முன்னரே நமக்கு நாமே சில நிமிடங்கள் வரை நீவிவிட்டுக் கொள்வது நன்மையை மிகுதியாகத் தரும். இதை செல்ஃப் மசாஜ் என்பார்கள். இது தூக்கத்தையும் வரவைக்க உதவும்.

14. உறங்கச் செல்லும் முன்னும் தூக்கத்திலிருந்து எழுந்திருத்த உடனேயும் சில நிமிடங்கள் தியானிப்பது நல்ல பலன்களைத் தரும். மனம் அமைதியாக இருக்கும்.

15. மதியம் சாப்பிட்டுத் தூங்குவது சரியான பழக்கம் அல்ல. தூக்கமாக இல்லாமல் ஓய்வாக அமைத்துக்கொள்ளலாம். அதாவது சமதளத் தரையில் சில நிமிடங்கள் படுத்து ஓய்வெடுக்கலாம். ஆனால், உணவு உண்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகே படுக்கும் நிலையில் ஓய்வெடுக்கலாம். அவசியம் ஓய்வெடுக்க வேண்டுமெனில் உட்கார்ந்துகொண்டே ஓய்வெடுக்கலாம்.

16. ஒருவேளை யாருக்காவது இரவு 7 மணிக்கோ 8 மணிக்கோ உறக்கம் வந்தாலும் தூங்கச் செல்ல வேண்டும். இரவு 10 மணிக்குள் மேல்தான் தூங்க வேண்டும் எனக் காத்திருத்தல் கூடாது. தூக்கம் வந்தால் தூங்கிவிட வேண்டும். தூக்கத்தின் விதி மீறி வேலைகளைச் செய்வது உடலுக்குக் கெடுதி.

Sleep

Sleep

Facebook

ஆழ்ந்த நிலை

பலர் 11 மணிக்கு மேலே தூங்குகிறார்கள். பொதுவாகத் தூக்கம் 9 மணிக்கே இருக்க வேண்டும். 11- 3 மணி வரை கோல்டன் ஹவர்ஸ் ஆஃப் ஸ்லீப் என்பார்கள். அதாவது கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கான நேரம் அது. இந்த நேரத்தில் இவ்வித உறுப்புகள் மிக மிகத் துரிதமாக வேலை செய்யும். உங்களது கழிவை நீக்கிக் கொண்டிருக்கும். உடலில் ரிப்பேர்கள் நடைபெறும். புதுப்பொலிவு செய்யும். களைப்பைப் போக்கும். இப்படி நிறைய வேலைகளை இந்த நேரத்திலே செய்யும். ஆதலால், இரவு 11-3 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் உங்களுக்கு முக்கால் வாசி நோய்கள் வராது. ஹார்மோன் தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் மருந்துகளே இல்லாமல் வெறும் தூக்குதலே சரியாகும். ஆழ்ந்த தூக்கம் 11 மணி வரவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் 9 மணிக்குத் தூங்கச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். 10 மணிக்குத் தூங்கச் சென்றால் ஆழ்ந்த நிலை வர 12 மணிக்கு மேல் ஆகும். தூக்கம் போதாமை நிலை வரும்.

மெலொடொனின் சுரப்பு

இந்த மெலொடொனின் சுரப்பு இரவு 11-3 மணியளவில் மட்டும்தான் சுரக்கும். அதுவும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தால் மட்டுமே. 11 மணிக்குத் தூங்கச் சென்றால், ஆழ்ந்த தூக்கம் வர 1.30 மணியாகும் பிறகு 3 வரை மெலொடொனின் சுரக்கலாம். ஆனால், இந்தச் சுரப்பு உடலுக்குப் போதாது. உடலுக்குத் தேவையான சுரப்பு 11-3 மணி வரை சுரக்க வேண்டும். இது இயற்கை விதி. இது சரியாகச் சுரந்தால் அவருக்குத் தன் வாழ்நாளில் புற்றுநோயே வராது. மேலும் பல நோய்கள் எட்டிகூடப் பார்க்காது. இந்தச் சுரப்பு மிக மிக உயர்ந்த மருந்து. இது உணவுகளில் கிடைக்காது. தூக்கத்தில் மட்டுமே கிடைக்கும்.

தூக்கம்

தூக்கம்

Twitter

முடி - நரைமுடி

இரவு மிகத் தாமதமாகத் தூங்குவோருக்கு உடல் எடை அதிகரிக்கும். தொப்பை இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். தலைவலி, கண் எரிச்சல் இருக்கும். தலைமுடி அதிகமாக உதிரும். மிக முக்கியமாக நரைமுடி மிகச் சீக்கிரம் வந்துவிடும். இரவு தூக்கம்தான் மனிதனின் மிக மிக அவசியமான மருந்து.

விலங்குகள் - மனித இனம்

நாய், பூனைக் கண்களைப் பாருங்கள். பளிச்சென ஒரு ஒளி தெரியும். இதுபோல மனித கண்களுக்கு இல்லை. இதுதான் நமக்கும் சில விலங்குகளுக்கும் இயற்கை கொடுத்திருக்கும் வேறுபாடு. இந்த ஒளி இல்லாத கண்கள்தான் மனிதர்கள். இது இரவு தூங்க வேண்டிய இனம் என்பதற்கான இயற்கைத் தந்த அறிகுறி. மனித இனம் இரவு தூங்கும் இனம். விலங்குகளைப் போல ஒளி மின்னும் கண்கள் நமக்குக் கிடையாது. எனவே இரவு தூக்கம் இயற்கையின் விதி. இதை மீறுவோருக்கு உடலில் நோய்கள் வரும்.

Sleep

மலச்சிக்கலை நீக்கிக் காலை வேளையை எளிதாக்கும் வைத்தியம் !

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com