குழந்தைகள் நீல நிற கண்களுடன் பிறக்க என்ன காரணம்? மருத்துவர்கள் சொல்வதென்ன?

அனைத்து குழந்தைகளும் நீல நிற கண்களுடன் பிறக்கின்றன என்பது கட்டுக்கதை என கூறுகின்றார். அதாவது ஒருவரின் கண்ணின் நிறத்தை அவர்களின் கருவிழியின் நிறம் தீர்மானிக்கிறது.
Know Your Body: Are babies always born with blue eyes?
Know Your Body: Are babies always born with blue eyes?Canva
Published on

பிறந்த குழந்தைகளின் கண்கள் எப்போதுமே அழகுதான், ஆனால் சில குழந்தைகளின் கண்கள் பிறந்து பல மாதங்கள் ஆகியும் நீல நிறத்திலேயே இருக்கும். இதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மருத்துவர்கள் உண்மையில் குழந்தைகள் நீல நிற கண்களுடன் பிறக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

மருத்துவர் கிறிஸ்டினா லான் கருத்தின் படி நீல நிற கண்களுடன் பிறக்கும் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து வரக்கூடிய மரபணுக்களைப் பொறுத்தது,பிறக்கும் போது ​​பெரும்பாலான குழந்தைகளுக்கு நீலக் கண்கள் இருப்பதாக கூறியுள்ளார் . மற்றொரு காரணம் குழந்தை பிறக்கு போது அதன் உடலில் இருக்கும் நிறமி மெலனின்.

இந்த நிறமி புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்களில் இருக்கும். இது பெரும்பாலும் பிறப்புக்குப் பிறகு முழுமையாக டெபாசிட் ஆகி பூமியில் உள்ள ஒளியின் வெளிப்பாட்டின் மூலம் கருமையாகிவிடும், பின்னர் குழந்தையின் உண்மையான கண் நிறமான கருமையான நிறம் வரும் என கூறியுள்ளார்.

இது சில நேரங்களில் தாமதம் ஆவதால் பல நாட்கள் குழந்தைகளின் கண்கள் நீல நிறமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் டாக்டர் மென்டோன்கா கருத்தின் படி அனைத்து குழந்தைகளும் நீல நிற கண்களுடன் பிறக்கின்றன என்பது கட்டுக்கதை என கூறுகின்றார். அதாவது ஒருவரின் கண்ணின் நிறத்தை அவர்களின் கருவிழியின் நிறம் தீர்மானிக்கிறது,இதற்கு முக்கிய காரணமாக மெலனின் என்ற நிறமி உள்ளது மிகக் குறைவான நிறமியுடன் பிறக்கும் குழந்தைகள் வெளிர் நீலம்/பச்சை நிற கண்கள் இருக்கும்.

அதே சமயம் உடலில் உள்ள மெலனோசைட்டுகளால் அதிக நிறமி உற்பத்தி செய்யப்படுவதால் குழந்தைகளின் கண்களில் சில வருடங்களிலே கருமை நிறம் வந்து விடும் என கூறியுள்ளார். சில குழந்தைகள் பிறக்கும் போது நீல நிறத்தில் உள்ள கண்களுடன் பிறந்தால் கவலை வேண்டாம் என கூறும் மெண்டோன்கா பிறந்த குழந்தைகளின் கண்களில் மஞ்சள் நிற தோற்றம் இருந்தால் அது மஞ்சள்காமலையின் அறிகுறியாக இருக்கலாம் ஆகவே குழந்தை பிறந்தவுடன் அவர்களை கவனிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Know Your Body: Are babies always born with blue eyes?
தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com