மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?

பொதுவாக பருவ மழை முடியும் காலத்தில் மெட்ராஸ் ஐ தொற்று அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு பருவமழைக் காலம் நீடித்திருப்பதனால் தொற்றும் அதிகரித்து வருகிறது. என்னதான் மெட்ராஸ் ஐ 5 நாட்களில் சரியாகக் கூடிய தொற்று தான் என்றாலும் சிலருக்கு கண் பார்வையிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?
மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?Twitter
Published on

சென்னையில் மெட்ராஸ் ஐ என்பபடும் கண் பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. கடந்த சில நாட்களில் கண் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் 20% பேர் மெட்ராஸ் ஐ -யால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நகரில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கண்பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளே இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மெட்ராஸ் ஐ என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி எனக் காணலாம்.

மெட்ராஸ் ஐ என்பது என்ன?

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ’.  இந்தப் பாதிப்புள்ளவர்களுக்குக் கண்ணில் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் நீர் சுரந்துகொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ மூன்று வகையில் ஏற்படுகிறது. ஒன்று பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை. இது தூசி, புகை உள்ளிட்டவற்றால் ஏற்படும். இரண்டாவது நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளால் ஏற்படுவது. மூன்றாவது ஷாம்பு, அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் ஏற்படும்.

பொதுவாக பருவ மழை முடியும் காலத்தில் மெட்ராஸ் ஐ தொற்று அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு பருவமழைக் காலம் நீடித்திருப்பதனால் தொற்றும் அதிகரித்து வருகிறது.

கண் சிவந்துபோயிருந்தால் அது `மெட்ராஸ் ஐ’ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். ஆகவே, கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அது எந்த வகையான பிரச்னை என்பதை அறிய முடியும்.

`மெட்ராஸ் ஐ’ -க்கு சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்கும் நிச்சயம் தவறானது . மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பிறகு, பிரச்னை தீவிரமானதும் கண் மருத்துவர்களை நாடும் போக்கு இருக்கிறது. இவர்கள் செய்யும் தாமதத்தால் அந்த நோய் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவிவிடுகிறது.

என்னதான் மெட்ராஸ் ஐ 5 நாட்களில் சரியாகக் கூடிய தொற்று தான் என்றாலும் சிலருக்கு கண் பார்வையிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தத் தொற்று ஏற்பட்டால் சில நேரங்களில் கண்ணீரோடு சேர்ந்து சிறிய அளவில் ரத்தக்கசிவு ஏற்படலாம். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கண்ணில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, கருவிழிக்கு வெளியே சுற்றி வெள்ளையாக இருக்கும் பகுதியில் ஜவ்வு (Membrane) உருவாகும். இதனால்தான் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதற்கு கண் மருத்துவரின் பரிந்துரை பெற்று, மருந்து போட்டால் சரியாகிவிடும். உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக குணமடைய ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்கள் ஆகும்

மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?
குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Glutathione- உணவுகள் மூலம் பெறுவது எப்படி?
  • `மெட்ராஸ் ஐ’யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய சுகாதாரம் மிகவும் அவசியம்.

  • கண்ணில் மருந்து போட்டுக்கொண்டாலோ, கண்ணில் கை வைத்தாலோ உடனடியாக கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?
உணவில் பாலை தவிர்ப்பது நல்லதா? நிபுணர் கூறுவதென்ன?
  • கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது நொய்த்தொற்று எளிதாகப் பரவும் என்பதால் பிறருக்குத் தங்களுடைய துண்டு, கைக்குட்டை போன்றவற்றைப் பகிரக்கூடாது.

  • `மெட்ராஸ் ஐ’ பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்ப்பதால் நோய் பரவும் என்பது தவறான கருத்து. ஆனால் மூடிய இடங்களான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் இந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி?
பஜ்ஜி, வெங்காய போண்டாவுக்கு நோ! மழை நேரத்தில் சூடாக என்ன சாப்பிடலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com