சுய இன்பம் செய்ததால் ஐசியு-வில் சேர்க்கப்பட்ட இளைஞர் - நடந்தது என்ன?

அதிக முறை சுய இன்பம் செய்வதோ பரிட்சிய முயற்சிகளில் ஈடுபடுவதோ நிச்சயம் தீங்கு விளைவிக்கும். அப்படியான தீங்கினால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த அந்த இளைஞர்.
Youngster
YoungsterTwitter
Published on

இளைஞர்கள் தூக்கமின்மை, சட்டென கிடைக்கும் மகிழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களுக்காக சுய இன்பம் எனும் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இதில் ஈடுபடுபவர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகவும் வாய்ப்பிருக்கிறது. சுய இன்பம் செய்வது மிகச் சாதாரணமான பாதிப்பில்லாத பழக்கம் தான். அது நம் கட்டுக்குள் இருக்கும் வரை!

அதிக முறை சுய இன்பம் செய்வதோ பரிட்சிய முயற்சிகளில் ஈடுபடுவதோ நிச்சயம் தீங்கு விளைவிக்கும். அப்படியான தீங்கினால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் சுச்சர்லாந்தை சேர்ந்த அந்த இளைஞன்.

20 வயதாகும் அவர் ஆக்ரோஷமாக சுய இன்பம் செய்ததால் ஸ்பான்டனியஸ் நிமோமீடியஸ்டம் spontaneous pneumomediastinum -ஆல் பாதிக்கப்பட்டார். இதனால் அதிக நெஞ்சுவலியையும் மூச்சு திணறலையும் அனுபவித்த அவர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்.

Youngster
தாம்பத்திய உறவு போரடிக்கிறதா? செக்ஸாலஜிஸ்ட் தரும் இந்த ஆலோசனையை முயற்சித்து பாருங்கள்
ICU
ICUTwitter


மருத்துவமனையில் அவர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் மூலம் மூச்சு விட வசதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியுவிலிருந்து சாதாரண படுக்கைக்கு மாற்றப்பட்டார். அவரின் முகம் லேசாக வீங்கியது, உடல் முழுவதையும் நசுக்குவது போன்ற வலி ஏற்பட்டது, அவருக்கு வலி நிவாரணிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்பான்டனியஸ் நிமோமீடியஸ்டம் என்பது நுரையீரலிலிருந்து காற்று கசிந்து விலா எழும்வுகளுக்கு இடையில் தங்கும் மிக அரிதான நோயாகும். இது 20களிலிருக்கும் ஆண்களை அதிகம் பாதிக்கிறது. முதல் முதலாக சுய இன்பத்தினால் ஸ்பான்டனியஸ் நிமோமீடியஸ்டம் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் போதை பொருட்கள் உபயோகத்தினாலோ, கலவிக்கு பிறகோ இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

மிக ஆக்ரோஷமாக அல்லது பல முறை சுய இன்பம் செய்வதைத் தவிர்க்க மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சுய இன்பம் செய்வதில் பிரச்சனைகளோ சந்தேகங்களோ வந்தால் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறவும் தயங்கக் கூடாது.

Youngster
ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com