Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?

5 டிகிரிக்கும் குறைந்த வெப்பநிலையில் 30 வினாடி முதல் சில நிமிடங்கள் வரை முங்கி குளிக்கவோ நீந்தவோ செய்வது நார்டிக் டிப். உடலை வருத்தி செய்யும் காரியமாக தெரிந்தாலும் இதில் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.
Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?
Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?Twitter
Published on

ஒரு பனிப்பொழிவு மிகுந்த குளிர்பிரதேசத்துக்கு பயணம் செய்யும் போது எப்படி உடை அணிந்திருப்போம்? 3 சட்டைகளுக்கு மேலே ஜெர்கினும் 4 பேண்ட்களுக்கு கீழே ஷூவும் போட்டு குல்லா, கிளவுஸுடன் மொத்த உடலையும் மறைத்துக்கொண்டு தான் ஊர் சுற்றுவோம். 

ஒருவர் அந்த பனிக்கு மத்தியில் துளையிட்டு எலும்பை  உறையவைக்கும் குளிரில் குளிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்? சமீபத்தில் நடிகை ரகுல் பிரீட் சிங் இப்படிதான் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.  அந்த வீடியோ வைரலானது.

இப்படிக் குளிப்பதற்கு பெயர் தான் நார்டிக் டிப்பாம். வீடியோவைப் பார்க்கையில் அது வேடிக்கையான ஒன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

நார்டிக் டிப் குறித்து தெரிந்துகொள்ள முயலும் போது இது பல நார்டிக் நாடுகளில் உள்ள மக்களின் கலாச்சாரத்தின் பகுதியாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இதனைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

5 டிகிரிக்கும் குறைந்த வெப்பநிலையில் 30 வினாடி முதல் சில நிமிடங்கள் வரை முங்கி குளிக்கவோ நீந்தவோ செய்வது நார்டிக் டிப்.

இப்படி குளிரில் குளிப்பதனால் உடலுக்கு இரத்த ஓட்டம் மேம்படுத்துதல், நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுத்துதல் மற்றும் மனச்சோர்வு குறைதல் உள்ளிட்ட நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

நார்டிக் டிப்பை குளிர்கால நீச்சல் அல்லது ஐஸ் நீச்சல் என்றும் அழைக்கின்றனர். உடலை வருத்தி செய்யும் காரியமாக தெரிந்தாலும் இது புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சிகிச்சைப் போல இருப்பதாகவும் அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.

Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?
நார்வே: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்?

இதனை நிரூபிக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் குறைவு தான் என்றாலும், குளிர்ந்த நீரில் மூழ்கி குளிப்பது மன அழுத்தத்தில் இருந்து நம்மைக் காக்கும் என்றும் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதையும் சில ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?
வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா?

என்ன இருந்தாலும் இதுபோன்ற விஷயங்காளில் ஈடுபடுவதற்கும் முன்னர் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது அவசியம். ஏனெனில், நீரில் மூழ்கவோ, இதயபாதிப்பு ஏற்படவோ அல்லது உடல் உஷ்ணம் குறையவோ வாய்ப்பு இருக்கிறது.

ஐரோப்பிய நாடான டென்மார்கில் இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறது. பல சந்ததிகளாக மக்கள் இப்படிக் குளித்து வருகின்றனர்.

Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா?
மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com