மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் சாதியம் என்பது மிக மிக குறைவே. ஆண் - பெண் பாகுபாடு பற்றிய புகார்களும் இல்லை எனலாம். இந்த மாநிலத்தைப் பார்த்து பிற மாநிலங்கள் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?
மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?Twitter
Published on

ராஜேஷ் கே பில்லானியா, குருகிராமில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தில் மூலோபாய பேராசிரியர் ஆவார்.

இவர் நடத்திய ஆய்வின் மூலம் மிசோரம் தான் இந்தியாவின் மகிழ்ச்சியான் மாநிலம் என கூறப்படுகிறது.

இந்த ஆய்வு மிசோரம் ஏன் இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்கிறது என்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளதது.

வேலைப் பளு, குடும்பம் மற்றும் உறவுகள், சமூக பிரச்னைகள், கருணை, கோவிட் 19-ன் தாக்கம், சமயம் அத்துடன் உடல் மற்றும் மனநலம் ஆகிய 6 கூறுகளின் அடிப்படையில் மகிழ்ச்சியை ஆராய்ந்துள்ளனர்.

12 லட்சம் மக்கள் வாழும் வடகிழக்கு இந்தியாவின் 7 சகோதரி மாநிலங்களில் ஒன்றான மிசோரம் ஏன் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்கிறது என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

படிப்பறிவு

இந்தியாவின் இரண்டாவது அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம் மிசோரம். 91-100% மக்கள் படித்தவர்களாக இருக்கின்றனர்.

மேலும் எந்த சூழலிலும் மாணவர்கள் தாங்கள் விரும்புவதைப் படிக்கவும், தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் இருப்பதை மாநில அரசு உறுதிப்படுத்துகிறது.

கலெக்டர் ஷாசன்கா
கலெக்டர் ஷாசன்காtwitter

முன்னேற்றத்துக்கான முயற்சிகள்

மிசோரம் நீண்ட காலமாக தங்களது சமூகத்தை முன்னேற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

உதாரணமாக, அங்குள்ள லாங்ட்லாய் மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.

அங்கு பணியாற்ற வந்த ஐஏஎஸ் அதிகாரி ஷாசன்கா ‘Kan Sikul, Kan Huan' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.

குழந்தைகள் மிகவும் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாடுவதனை ஆட்சியர் அறிந்தார். அசாமில் இருந்து வரும் காய்கறிகள் உள்ளூர் மக்களை சென்றடையும் போது அழுகிய நிலையில் வருவது தான் பெரிய பிரச்னையாக இருந்தது என்பதனை கண்டறிந்தார்.

இதற்கு தீர்வுக்கான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நாடினார் கலெக்டர் ஷாசன்கா. பள்ளிகளின் வழியாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளை மாணவர்களுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றினார்.

இளைஞர்களும் பாலியல் சமத்துவம்

மிசோரம் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்க முக்கியக் காரணம் அங்குள்ள இளைஞர்களே. இளைஞர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மிசோ சமூகத்தில் உள்ள இளைஞர்கள், அவர்களின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து பணிகளையும் சமமாக கருதுகின்றனர்.

ஆண்களானாலும் பெண்களானாலும் சிறு வயதிலிருந்தே நிதி சுதந்திரத்தை (ஃபினாசியல் இண்டிபெண்டன்ஸ்) அடைய முனைகிறார்கள்.

பாலியல் பாகுபாடு குறித்த புகார்கள் அங்கு மிகவும் குறைவே. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது மிசோரம்.

சமூக அழுத்தம்

குழந்தைகளை வளர்க்கும் முறை மிசோரம் மாநிலம் மகிழ்ச்சியாக இருப்பதில் பெரும் பங்காற்றுகிறது. அங்கு சாதிய பாகுபாடுகள் மிகவும் குறைவு.

பெற்றோர்கள் கல்வியிலும் சரி, பணம் சம்பாதிப்பதிலும் சரி குழந்தைகள் மீது அதிக அழுத்தத்தை திணிப்பது கிடையாது.

மேலும் மாணவர்கள்-ஆசிரியர் உறவும் இங்கு மிகவும் நல்ல முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?
மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!

மிசோரம் மாநிலத்துக்கு போறீங்களா?

மிசோரம் மாநிலம் மிக உயர்ந்த மலைகள், அழகிய ஏரிகளால் நிறைந்திருக்கிறது. ஒரு முறை அங்கு சென்று சுற்றிப்பார்த்து வருவது உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமான மாறும்.

மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?
மிசோரம் : உங்கள் பயணத்திற்கான பெர்ஃபெக்ட் இடம் - இந்த ஜூன் மாதம் திட்டமிடுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com