எகிப்தியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவார்கள். காலை, மாலை, தியானம், காதல், போர், மருத்துவம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நறுமணப் பொருள். சில மூலிகைச் செடிகளைத் தற்செயலாகத் தீயில் எறிந்தபோது அவற்றின் புகை மனதிற்கு இன்பம் தருவதாகவும் தனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தை ஆண்ட ‘கிளியோபாத்ரா’ தனது காதலன் மார்க் ஆண்டனியைக் கவர்ந்தது பேரழகால் அல்ல, மனதை மயக்கும் வாசனைத் திரவியங்களால் எனச் சொல்லப்படுகிறது.
இந்திய ராஜா ஒருவர், தன் மகளின் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தினார். கொண்டாட்டத்தில் ஓர் அம்சமாகக் கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் அகழியை ரோஜாக்களால் நிரப்பச் செய்தார். கொண்டாட்டம் முடிந்ததும், அகழி நீரின் மீது படலம் உருவாகி இருந்தது. அதன் ருசியிலும் மணத்திலும் ரோஜாவின் சாரம் இருந்தது. இப்படித்தான் ‘ரோஜா தைலம்’ உற்பத்தி தொடங்கியது.
அப்போதைய காலத்தில் இருந்த பிளேக் நோய் ரொம்பவும் அஞ்சத்தக்கதாக இருந்தது. நோய்த் தொற்றில் இருந்து விடுபட நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தலாம் எனச் சில மக்கள் அறிவுறுத்தினர். நோயாளிகள் வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால், அந்தத் திருடர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை. காரணம் என்ன? என்று வியந்தனர். திருடர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மூலிகைக் கஷாயம் கலந்த மதுவைக் குடித்துவிட்டு கொள்ளையிடச் சென்றது தெரிய வந்தது. அவர்கள் தயாரித்த கஷாய முறையை வெளியிடுமாறும் அதற்குப் பிரதியாக அவர்களுடைய தண்டனை குறைக்கப்படும் என்றும் அரசாங்கம் பேரம் பேசியது. அதன் பிறகு மக்கள் இந்தத் தயாரிப்பு முறையை உபயோகிக்கத் தொடங்கினார்கள். பிளேக் நோய் தாக்கிய காலங்களில் பைன், ஸேடார், ஸைப்ரஸ் மரத்துண்டுகளை எரித்துப் புகைக்கச் செய்தார்கள். அந்தப் புகை மூட்டத்தில் நோய்க்கிருமிகள் அழிந்துபோகும் என்று நம்பப்பட்டது.
நறுமணச் சிகிச்சையின் நவீனத் தந்தை டாக்டர் ரெனிமாரிஸ் கடேஃபாஸ், இவர் ஒரு ஃபிரெஞ்சு வேதியியல் நிபுணர். ஒருநாள் மருந்து கலவை வெடித்து அவருடைய கைமோசமாகக் காயம் அடைந்தது. உடனே அருகில் இருந்த லாவண்டர் எண்ணெயில் கையை விட்டார் ரெனி. வியக்கத்தக்க விதத்தில் வலி உடனே குறைந்தது. எவ்விதத் தழும்பும் இன்றிக் காயம் ஆறிப்போனது. அந்த அனுபவம் அவரது மனதில் ஆழமாய்ப் பதிந்திட, அவரால்தான் ‘அரோமாதெரபி’ (Aromatherapy) என்ற வார்த்தையே உருவானது. இரண்டாம் உலகப்போரில் காயமுற்றவர்களுக்கு இயற்கை எண்ணெய்க் கலவைகளை அழுகல் (Antiseptic) தடுப்பானாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர். இயற்கை எண்ணெய்களின் ஆன்டிசெப்டிக் குணங்கள் பல பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணெய்கள் மனோரீதியாக ஏற்படுத்தும் பலன்களை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்று நறுமணத் தைல சிகிச்சை பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில முக்கிய எண்ணெய் வகைகளைத் தண்ணீரில் கலந்து குளித்தால் களைப்பும் இறுக்கமும் நீங்கும். சருமத்தையும் தசைகளையும் இளகச் செய்யும் சக்தி அவற்றுக்கு உண்டு. லெமல் ஆயிலுடன் பெப்பர்மென்ட் ஆயிலை கலந்து பயன்படுத்த பாதங்களில் உள்ள வலி குணமாகும்.
இந்த மூலிகை எண்ணெய்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் சேர்த்து பயன்படுத்துவது ஒரு முறையாகும். குளிக்க, முகத்தைக் கழுவ தண்ணீரில் சில துளிகள் விட்டுப் பயன்படுத்தலாம். நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
கீழ்த்திசை நாடுகளில் எப்போதும் பசுமையான ஒரு மரத்தில் இருந்து கற்பூர எஸன்ஸ் கிடைக்கிறது. சுமார் ஐம்பதாண்டு முதிர்ச்சியுள்ள மரத்தில் இருந்தே நாம் அதனைப் பெற முடியும். நெஞ்சு சளி, சுவாச பிரச்சனைகள், வலிப்பு, ஜன்னி, தூக்கமின்மை, சைனஸைட்டிஸ், மூக்கடைப்பு ஆகிய பிரச்சனைகளுக்குக் கற்பூர தைலம் சிறந்தது.
பருவை அகற்றுவதில் அற்புதமாகச் செயல்படும். திசுக்களை உலர செய்யும். எண்ணெய் உறபத்தியை குறைக்கும். இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சர்க்கரையைச் சமன் செய்ய உதவும். காய்ச்சலைக் குணப்படுத்தும்.
லாவண்டர் எண்ணெயை சுவாசிக்க ஒற்றைத் தலைவலி பறந்துவிடும். தலை, கழுத்து, தோள்களில் தேய்த்தால் நீரில் கலந்து குளிக்க மன இறுக்கம், மனச்சோர்வு அகலும்.
ஒரு கிலோ எலுமிச்சை எண்ணெய் எடுக்க சுமார் 3000 எலுமிச்சம் பழங்களைப் பிழிய வேண்டியிருக்கும். பழத்தின் தோலை நசுக்கி எண்ணெய் எடுப்பார்கள். எண்ணெய் பசை சருமம், செரிமானக் கோளாறு, தொற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல், பித்தப்பை சுருங்கிபோதல் ஆகிய நிலைகளில் பலன் தரும்.
ஆரஞ்சு மர பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதை Neroli oil என்பார்கள். இத்தாலிய இளவரசி நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைவலி, குடல் வாயு, உணர்வுத் தடுமாற்றம், தூக்கமின்மை பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும்.
தண்ணீரில் சில துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெய் விட்டுக் கொப்பளிக்கச் சுவாசப் பாதையைச் சீர் செய்ய உதவும். நீரில் கலந்து குளிக்கலாம். நெற்றிப் பொட்டில் தடவ ஒற்றைத் தலைவலி சரியாகும்.
கோபத்தைக் குறைக்கும். சருமம் பராமரிக்க உதவும். மனச்சோர்வு நீங்கும். குளியலிலும் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம். வயிற்று வலி, மலமிளக்கியாகச் செயல்படும்.
நாளமில்லா சுரப்பிகளைப் பலப்படுத்தும். மோக ஊக்கியாகவும் திசுக்களைப் புதுப்பிப்பதாகவும் செயல்படும். மன இறுக்கம் நீங்கும். வாந்தி, குமட்டல் குறையும்.
ஆவேசத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். Sedative தன்மையுடையது. சரும எரிச்சல் போக்கும். மூட்டுவலி, பயம், உறக்கமின்மைக்கு நல்ல பலன் தரும்.
சாந்தப்படுத்தும் குணம் கொண்டது. மாதவிலக்குப் போது ஏற்படும் உபாதை, பயம், கோபம், ஆண்மைக்குறைவு போன்ற கோளாறுகள் சீர்ப்படுத்தும். மோக உணர்வைத் தூண்டும்.
சிறுநீரக உறுப்புகளுக்குப் பலம் தரும். சருமக்கோளாறுகளை நீக்கும். வயிற்றில் ஏற்படும் வலியை சரிசெய்யும்.
அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. விலை அதிகம். தசை, நரம்பு, ஈரல், செரிமான உறுப்புகளுக்கும் ஆற்றலைத் தரும். சுரப்புகள், நிணநீர் மண்டலம் ஆகியவற்றுக்குப் பலன் தரும்.
கிருமி நாசினியாக, சோர்வை போக்க, மோக ஊக்கியாக, மாதவிடாயை ஒழுங்கு செய்ய, காய்ச்சல் குறைக்க, வலி குறைய, முதுகு வலி சரியாகப் பயன்படுத்தலாம்.
மஞ்சள் எண்ணெய்
கிருமித் தடுப்பானாகச் செயல்படும். அஜீரணம் சரியாகும். குறைவான ரத்த ஓட்டம் சீராகும். மூட்டு வலி, சோகை நீங்க… காயங்கள் சரியாகப் பயன்படுத்தலாம்.