ஜல்லிக்கட்டு : சிந்து சமவெளி நாகரிகம் முதல் அலங்காநல்லூர் வரை - ஒரு முழுமையான வரலாறு

ஜல்லிக்கட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்டது. சிந்துவெளியில் காளை முத்திரை பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைக்கிறதென்றால், அதற்கு முன்பே காளையை மையப்படுத்திய விளையாட்டு இருந்துள்ளது என்றுதான் பொருள் என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்.
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Twitter

ஜல்லிக்கட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்டது. சிந்துவெளியில் காளை முத்திரை பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைக்கிறதென்றால், அதற்கு முன்பே காளையை மையப்படுத்திய விளையாட்டு இருந்துள்ளது என்றுதான் பொருள் என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்.

ஜல்லிக்கட்டு

"கபே காபி டே" - யார் இந்த மாளவிகா? ஒரே ஆண்டில் 4000 கோடி கடனை அடைத்து சாதித்த பெண்!

புலிமான் கோம்பை நடுகல்

புலிமான் கோம்பை நடுகல்

Twitter

"தமிழ்நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே மிகவும் பழமையானது தேனி மாவட்டத்தில் உள்ள புலிமான் கோம்பையில் கிடைத்த நடுகல். அசோகர் காலத்திற்கு முந்தைய நடுகல் அது. காளையை கவர வரும் வீரர்களை தடுத்தது பற்றி விவரிக்கிறது அந்த நடுகல். அதாவது, ஆநிரைகள், காளைகள்தான் அப்போது செல்வத்தின் குறியீடாக இருந்தது. ஓர் இனக்குழுவை வீழ்த்துவதற்கு அவர்கள் ஆநிரையை கவர்தல் என்பது ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது."

செல்வமாக மதிக்கப்பட்ட காளைகளை மையப்படுத்திய பண்பாட்டு செயல்பாடு மிக விரிந்த அளவில் இருந்திருக்கிறது. அதிலிருந்துதான் `ஜல்லிக்கட்டு` என்று அழைக்கப்படும் 'ஏறுதழுவல்' பிறந்திருக்கிறது"

"வேளாண் சமூகத்தின் ஆதி பழக்கமான இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, யாரும் மாடு பிடிபட வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் காளை முனியாண்டி கோயிலின் காளை. அந்த காளையை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடும்போது, `இந்த வருஷம்... குத்து நிறைய விழ வேண்டும்` என்றுதான் வேண்டிக் கொள்வார்கள். மாடுபிடிபட வேண்டும் என்று யாரும் வேண்டிக்கொள்ளமாட்டார்கள். ஜல்லிகட்டு நடத்துபவர்களின் நோக்கம் மாடு பிடிப்பது அல்ல.இதற்கு என்ன காரணமென்றால், நிறைய குத்தப்பட்டால் நிறைய ரத்தம் சிந்தும். ஒரு சுத்த வீரனின் ரத்தம் நிலத்தின் சிந்தினால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகமாகும் என்பது நம்பிக்கை. இது ஆதி நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சிதான் இன்றுவரை தொடர்கிறது. அதாவது ஜல்லிக்கட்டு என்பது காளையை அடக்கும் விழா அல்ல... வீரனை அடையாளப்படுத்தும் விழா." என்று விளக்குகிறார் வெங்கடேசன்.

சங்க இலக்கிய சான்றுகள்

சங்க இலக்கிய சான்றுகள்

Newssense

சங்க இலக்கிய சான்றுகள்

ஜல்லிக்கட்டு முந்தைய காலத்தில் எப்படி நடந்தது என்று விவரிக்கும் போது, சங்கப் பாடல்களை சான்றாகக் கூறுகிறார் சு.வெங்கடேசன்.

"முல்லைக்கலியின் முதல் ஏழுபாடல்கள் சங்க காலத்தில் எப்படி ஏறுதழுவல் நிகழ்வு நடந்தது, அதில் பங்கெடுத்த காளைகள் எந்த நிறத்தில் இருந்தன, ஆண்கள் அணிந்திருந்த பூக்களின் வகை என்ன, அந்த நிகழ்வை பார்க்க கூடி இருந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்... என்று மிக விரிவாக விவரிக்கிறது."

"ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று காலம் தொட்டே எளியமக்களின் ஒரு பண்பாட்டுக் கூறாகத்தான் இருந்து வருகிறது. ஆகம விதிப்படி அமைந்த எந்த கோயில் விழாவின் பகுதியாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதில்லை. நாட்டார் கோயில்களின் விழாவின் பகுதியாகதான் ஜல்லிக்கட்டு அமையும். பெரும் மதங்களுக்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கும் இருக்கும் முரணாக இதை நாம் பார்க்கலாம். இது மக்களுடைய ஒரு விளையாட்டாக, மக்களின் வழிபாட்டு முறையாக, மக்களின் பண்பாட்டுத் தொடர்சியாக இது உள்ளது என்றும் புரிந்துக் கொள்ளலாம்.

மேலும் அவர், வளமான காவிரி படுகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு பெரிதாக நடைபெறுவதில்லை. ஆனால் மதுரை போன்ற தென்மாவட்டங்களில் அது உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று யோசிக்கும் போது, காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகையில் நில உடைமை அதிகமாகி, உழைப்பாளிகள் முழுக்க முழுக்க அடிமை நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதனால், சுதந்திர உணர்வு கொண்ட இந்த விளையாட்டின் தொடர்ச்சி அங்கு அறுபட்டுள்ளது," என்று கூறுகிறார் வெங்கடேசன்.

ஜல்லிக்கட்டில் சாதிய ஆதிக்கம் இருக்கிறதா என்பது குறித்து விவரித்த அவர், இவ்வாறாக சொல்கிறார், "ஜல்லிக்கட்டு விமர்சையாக நடக்கும் மூன்று முக்கிய பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் எந்த குறிப்பிட்ட சாதியும் காளைகள் எடுத்து வரக் கூடாது அல்லது எந்த குறிப்பிட்ட சாதியும் பங்கெடுக்கக் கூடாது என்ற எந்த தடையும் இல்லை. சொல்லப்போனால், அலங்காநல்லூர் காளையை வளப்பதே தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான். சாதி கட்டமைப்புக்குள் அது கிடையாது. ஆனால், இன்றைக்கும் இந்திய கிராமங்கள் சாதிய பிடிக்குள்தான் உள்ளன. அதனுடைய தன்மைகள் மற்ற எந்த விளையாட்டிலும் பிரதிபலிப்பதைபோல ஜல்லிக்கட்டிலும் பிரதிபலிக்கும். இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்." என்கிறார்.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம், புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

பெயர்க்காரணம்

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சலிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ’ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு

Newssense

வேலி ஜல்லிக்கட்டு

வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

மஞ்சுவிரட்டு

மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு. "மஞ்சி" என்பது தாளை வகை கற்றாலை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். "மஞ்சி கயிற்றால்" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பபு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் "மஞ்சி" என்ற சொல் மருவி "மஞ்சு விரட்டு" ஆனது.

மஞ்சு விரட்டு விளையாட்டு, பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் "மஞ்சு விரட்டு தொழு" அமைக்கப்பட்டு அந்த தொழுவில் இருந்து காளைகள் கண்மாய் பகுதிக்குள் திறந்து விடப்படும். ஓடும் காளைகளை வீரர்கள் விரட்டிசென்று மஞ்சி கயிற்றில் கட்டியுள்ள பரிசுகளை எடுப்பர்.

புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல்

Newssense

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்

ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல தரத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.

மெரீனாப் புரட்சி

மெரீனாப் புரட்சி

Facebook

மற்ற நாடுகளில் காளைப்போர்

ஸ்பெயின், போர்ச்சுகள், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

சில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.

இந்தத் தடைக்கு எதிர்த்து மக்கள் போராடியதன் விளைவாக இப்போட்டி தொடர ஒரு புதிய சட்டம் 2017-இல் இயற்றப்பட்டது. அன்றிலிருந்து ஜல்லிக்கட்டு தடையின்றி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழிகாட்டுதல்களுடனும், பல்வேறு நிறுவனங்களின் ஸ்பான்சருடன் ஜல்லிக்கட்டு முன்பை விட பிரபலமாக இருப்பதோடு, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருவோரையும் ஈர்த்திருக்கிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com