சப்பாத்தியா? அரிசியா? உடல் எடை குறைக்க எது சிறந்தது?

சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுகிறார்கள், சிலர் சாதம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியுமா? டையட்டில் இருக்கும் போது சாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
Roti Or Rice: What's Best For Weight Loss?
Roti Or Rice: What's Best For Weight Loss?Twitter
Published on

இன்றுள்ள நவீன வாழ்க்கை முறை, உடல் பருமன் என்பதைப் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னையாக மாற்றிவிட்டது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது. சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுகிறார்கள், சிலர் சாதம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியுமா? டையட்டில் இருக்கும் போது சாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி பலனளிப்பதாக கருதுகின்றனர். சிலர் எடை இழப்புக்கு அரிசி அவசியம் என்று நினைக்கிறார்கள்.

உணவியல் நிபுணர்கள் கூற்றுப்படி, அரிசி மற்றும் ரொட்டி இரண்டின் ஊட்டச்சத்து மதிப்பிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்களுக்கு சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரொட்டி மற்றும் அரிசி இரண்டையும் சாப்பிடலாம். அதே சமயம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்னியாக இருக்கக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Roti Or Rice: What's Best For Weight Loss?
Stress ஏற்படுத்தும் உணவுகள் - மனநலத்துக்கு ஆபத்தாகும் உணவுகள் எவை?

ஜாவர், ராகி மற்றும் தினை ஆகியவற்றால் செய்யப்பட்ட ரொட்டி எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. ஜாவர், ராகி ஆகியவற்றில் செய்யப்பட்ட ரொட்டியில் சத்தும் உள்ளது, எடை குறைக்கவும் உதவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசியை விட ரொட்டி சாப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

எடை இழப்புக்கான முக்கிய குறிப்புகள்

  • நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும், தினசரி 40 கிராம் நார்ச்சத்து உட்கொள்ளலாம்.

  • தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • உங்கள் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

  • சரியான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.

Roti Or Rice: What's Best For Weight Loss?
ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com