Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?
Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?canva

Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சரியான அளவு உறக்கம் நமக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. சரியாக தூங்கவில்லை என்றால் நம் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்?
Published on

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் அவசியமாகிறது. நம் வயதுக்கு ஏற்றார்போல் இவ்வளவு மணி நேர தூக்கம் தேவை என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சரியான அளவு உறக்கம் நமக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. சரியாக தூங்கவில்லை என்றால் நம் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்?

Blood Sugar Level

தேவையான அளவு உறக்கம் பெறவில்லை என்றால் உடலில் இன்சுலின் லெவல்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் சமநிலை பாதிக்கப்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டுகிறது

இதய நோய்

20 வயதினை கடந்தவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அதுவும் இரவில். அப்படி இல்லாமல் போனால், இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். ரத்த கொதிப்பின் அளவும் அதிகரிக்கிறது

டிப்ரஷன்

தூக்கமின்மை சில சமயத்தில் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். ஒரு வேளை நாம் டிப்ரஷனால் பாதிக்கப்பட்டிருந்தால், மன உளைச்சலை அது இன்னும் அதிகமாக்கிவிடும்

சரும பிரச்சினைகள்

முகத்தில் பரு, கரும்புள்ளிகள் அதிகமாக வரலாம். சரியான நேரத்திற்கு தேவையான அளவு உறங்கி தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் இந்த சருமம் தொடர்பான நோய்களை தவிர்க்கலாம்

Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?
பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன?

உடல்நலம்

பகல் முழுவதும் உழைக்கும் உடலும் அதன் பாகங்களும், இரவில் தான் அதற்குறிய வேலையையே செய்கிறது என்பதை நாம் கேட்டிருப்போம். இரவில் அந்தந்த உறுப்புகள் அதன் வேலையை செய்தால் தான், உடல் தன்னை தானே சரிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலை பெறுகிறது

நினைவாற்றல்

தேவையான அளவு உறக்கம் நம் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது கிடைக்காத பட்சத்தில் மறதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது

Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?
Health: இந்த வேர் காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

உடல் எடை

தாமதமாக உறங்கினாலோ, அல்லது சரியாக தூங்காவிட்டாலோ, உடல் எடை அதிகரிக்கும். குறைந்தது 6 மணி நேரமாவது உறங்கவேண்டும்

Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?
Health: ஒரு மாதத்துக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com