உடல் ஆரோக்கியமாகவும், தேவையான எதிர்ப்பு சக்தியுடனும், ஆற்றலுடனும் இருக்க முறையான ஊட்டச்சத்துடன் இருக்கும் உணவை நாம் உட்கொள்வது அவசியம்.
ஆனால், நிற்காமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம், கிடைத்தவற்றை சாப்பிட்டு கொண்டு.
இதனால், எந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பது தெரிவதில்லை. பெரும்பாலும் இன்ஸ்டன்ட் உணவுகளை தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் நம் தினசரி உணவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காய்கறி வகைகளில் ஏதாவது ஒன்றை நிச்சயம் சேர்த்து கொள்ளவேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்
இவற்றில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டியாக்சிடன்ட்ஸ் நிறைந்து இருக்கிறது. இதனால் நம் உடலில் இம்ம்யுனிட்டி மேம்படுகிறது. பல நோய்கள் வராமல் தவிர்க்க உதவுகிறது
வேர் காய்கறிகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறி வகை இந்த டர்னிப். இதில் மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மேலும், சுவாசக் கோளாறுகளை தடுக்க உதவுகிறது
இஞ்சி நம் வீட்டில் இருக்கும் ஒரு லிட்டில் டாக்டர் என்றே கூறலாம். காய்ச்சல் முதல், சளி இருமல் போன்ற பிரச்னைகள் வரை இஞ்சி ஒரு சிறந்த மருந்து. வலி, எரிச்சல் போன்றவற்றை குறைக்க உதவும், மேலும், வாந்தி போன்ற உணர்வுகளுக்கு சிறந்த தீர்வு
சிலருக்கு இவற்றின் மணம் ஒவ்வாமல் இருக்கலாம். மேலும் இது வாய்வு ஏற்படுத்தும் என்பதாலும் பலர் இதனை தவிர்ப்போம். ஆனால் உண்மையில் முள்ளங்கியில் அடங்கியிருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது
இதயத்திற்கு நல்லது, கேஸ் பிரச்னை இருந்தால் நல்லது, என நம் வீட்டு சமையலில் உப்பிற்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருக்கும் பூண்டு.
மேங்கனீஸ், வைட்டமின்கள் சி மற்றும் பி6 இதில் நிறைந்திருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது
பீட்ரூட்டில் போலிக் அமிலம் அளவு அதிகமாகும். இது கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்தாகும். இதை தவிர பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாது. தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்
மஞ்சளை போன்றதொரு சிறந்த கிருமிநாசினி உணவுகளில் வேறெதுவும் இல்லை. நம் இந்திய பாரம்பரிய சமையலில் நிச்சயம் மஞ்சள் சேர்க்கப்படுவதற்கான காரணமும் இது தான். இவை எரிச்சல், குறைந்த கொலஸ்டிரால் அளவை எதிர்க்க உதவுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust