இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்க சில வழிமுறைகளைக் காணலாம்.
உணவு முறை :
தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதால் உடலின் நீரிழப்பு சீர் செய்யப்படும்.
எலுமிச்சை பழத்தில் ஜூஸ் போட்டுக் குடியுங்கள். அது உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கும்.
சராசரியாக நாம் குடிக்கும் அளவை விட அதிகமான அளவில் தண்ணீர் அருந்துங்கள். அனல் காற்று காரணமாக ஏற்படும் வியர்வையால் உடலில் நீர் சத்து குறையும். ஆகையால் அடிக்கடி நீர் அருந்திக்கொண்டே இருங்கள்.
காரமான உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், அத்துடன் அதிக மசாலாக்கள் கலந்த உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது.
நீர் சத்து அதிகமாக உள்ள நீர்மோர், இளநீர், பனை நுங்கு, தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.
வாழ்க்கை முறை
வெயில் பாதிக்காமலிருக்க சன் கிளாஸ்'அணிந்துகொள்வது நல்லது. நீண்டநேரம் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் உடலில் படுவதால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வெயிலில் வெளியே செல்வதற்குமுன் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவிக் கொள்ளலாம்.
கோடைக்காலத்தில், குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை அனைவரையும் வதைக்கும் முக்கியப் பிரச்னை வியர்க்குரு. இதைத் தடுக்க, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.
கோடையில் ஏற்படும் சரும வறட்சியால் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்கத் தினமும் இரவில் பாதங்களைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்ட்ரைசர் கிரீமை பயன்படுத்தலாம்
உடலில் ஈரம் தங்காத அளவுக்கு வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. அதனால் சருமத்தில் வியர்வை தங்கி அரிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
முக்கியமான தேவை இல்லாத பட்சத்தில் சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu