டீ குடிப்பவர்களுக்கு ஆயுள் கெட்டியா? - ஆய்வாளர்கள் கூறியது என்ன?

அதிகமாக தேநீர் குடிப்பது இருதய நோய், இஸ்கெய்மிக் (ரத்த ஓட்டம் குறைந்த) இதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்து காப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tea
teacanva

உழவனின் நண்பன் மண்புழு என்பது போல தொழிலாளர்களின் நண்பனாக இருந்து வரும் ஒன்று டீ. வேலை பளுவுக்கு இடையில் உடலோ மனமோ சோர்ந்து போனால் சுட சுட உற்சாகத்தை அளிக்கும் அந்த தேர்வாமிர்தம் குறித்து புதிய தகவலை கூறுகிறது ஆய்வு ஒன்று.

ஆய்வின் படி, தினசரி தேநீர் பருகும் பழக்கமுள்ளவர்களுக்கு மற்றவர்களை விட ஆயுள் அதிகம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் முக்கிய பானமாக இருப்பது டீ.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நமது தினசரி பழக்கமான தேநீர் பருகுதல் எந்த அளவுக்கு இறப்புடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிய ஓர் விரிவான் ஆய்வினை நடத்தினர்.

அந்த ஆய்வில் தினமும் ப்ளாக் டீ குடிப்பவர்களுக்கு இறப்புக்கான ஆபத்து 9 முதல் 13 விழுக்காடு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் நிறுவனம் இந்த ஆய்வினை நடத்தியது. ஆய்வின் முடிவுகள் கடந்த காலத்தில் கிரீன் டீ பற்றிய ஆய்வுகளிலிருந்து கவனம் பெற்றது.

அதிகமாக தேநீர் குடிப்பது இருதய நோய், இஸ்கெய்மிக் இதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்து காப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tea
தேநீர் வரலாறு : இதுதான் டீ-யின் கதை |History of Tea

இந்த ஆய்வில் 40 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களுமாக 4,98,043 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 89 சதவிகிதம் நபர்கள் பிளாக் டீ அருந்துவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் 2006 முதல் 2010 வரையில் கேள்விகளுக்கு பதில் வாங்கப்பட்டது. பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

"ஒரு நாளுக்கு இரண்டு கப் டீ குடிப்பது இறப்பதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்கிறது. அதிகாமக் தேநீர் பருகுவது டயட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என ஆய்வு கூறியுள்ளது.

இனி உங்கள் நண்பர் காபியா? டீயா? எனக் கேட்டால் தயங்காமல் டீ என பதிலளியுங்கள். அதில் சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை குறித்து கவனமாக இருங்கள்!

tea
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com