கணிதத்தின் தந்தையான பித்தகோரஸ், அணுக்கொள்கையின் தந்தையாகிய டெமோகிரிடஸ், மருத்துவத்தின் தந்தையாகிய இப்னு சினா, ஹிப்போகிரட்ஸ், அறிஞர்களாகிய பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஆசிரியரான பிளினி போன்றோர் நீண்ட ஆயுளோடு திடகாத்திரமாக வாழ்ந்தவர்கள். சிலர் 90-105 வயது வரை வாழ்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே தேன் சாப்பிடுபவர்கள். இவர்கள் சொன்னது, “நீண்ட ஆயூளோடு வாழ தேன் சாப்பிடுங்கள்” என்று…
குகை மனிதர்களின் காலத்தொட்டே தேன் உணவாக, மனிதர்களின் பயன்பாட்டில் உள்ளது. ‘தேனை நோய்களின் எதிரி’ என்கிறார்கள். தடுக்காத, தீர்க்காத நோய்களும் இல்லை எனப்படுகிறது. யூனானி, ஹோமியோ, ஆயுர்வேதம், அலோபதி, சித்த வைத்தியம், சீன வைத்தியம் ஆகியவை தேனை போற்றுகிறது. தேனைப் புகழாத மருத்துவம் இல்லை.
ரோமிலியஸ் என்ற அறிஞரிடம் ஜூலியஸ் சீசர், “தாங்கள் 100 வயது வாழ்வதன் ரகசியம் என்ன?” எனக் கேட்டதற்கு, நான் தினமும் தேன் சாப்பிட்டு வருகிறேன் என்றார். ரஷ்யாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 100 வயது அதற்கு மேற்கொண்டு வாழ்ந்தவர்கள் அனைவரும் தேன் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். தேனீ பண்ணைகளில் வேலைச் செய்பவர்களாக இருந்தார்களாம்.
நோய் வந்த பிறகுதான் தேன் சாப்பிட வேண்டும் என்றில்லை. தேனை தினமும் அனைவருமே சாப்பிடலாம். அவரவருக்கு ஏற்ற அளவில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தேன், பாலைவிடப் பேரீச்சம் பழத்தைவிட அதிகமான சக்தியைக் கொடுக்கிறது. 50 கிராம் தேன், இரண்டு முட்டைக்கு சமம், 400 கிராம் அசைவத்தில் இருந்து கிடைக்கின்ற சக்திக்குச் சமம்.
தேன், ரத்தத்தில் சேரும் விஷப்பொருட்களைச் சுத்தம் செய்கிறது. புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மூட்டு இணைப்புகளை வலிமைபடுத்துகிறது. பார்வை கூர்மையாகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். செரிமானத்தைச் சீராக்கி பசியை உண்டாக்கும். முதுமை அடைவதைத் தாமதப்படுத்தும். வாயுவை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்கும். வயிற்றில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். நுரையீரல் நோய்களைத் தடுக்கும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். இயற்கையிலே தேன் ஒரு கிருமி நாசினி. பற்சிதைவு, எகிறு வீக்கம், ரத்தக்கசிவு வராமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
உலகக் குத்துசண்டை வீரர் முஹம்மது அலி அவர்கள், பார்கின்ஸன் சிண்ட்ரோம் என்ற நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டார். மருந்து மாத்திரைகளில் குணம் ஏற்படவில்லை. தினமும் தேன் கலந்த நீர் அருந்தி நோன்பிருந்தார் 75% சதவிகிதம் குணமடைந்தார். மராத்தான் ஓட்டபந்தய வீரர்கள், 6 நாட்கள் ஓட்ட வேண்டிய சைக்கிள் பந்தய ஓட்டுநர்கள், ரைனர் என்ற மலையேறும் போட்டியாளர்கள் தேன் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.
இதயத் தசை இடைவிடாது இயங்குகிறது. அதனால் இழக்கும் சக்தியை சரி கட்டி சரியாக இயங்க குளுகோஸ் வேண்டும். தேனில் அபரிவிதமான அளவு குளுகோஸ், விட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால் 1901-ல் உடல் இயல்நிபுணர்களுக்கான மாநாட்டில் இதயத்தின் மீது குளுகோசின் அவசியத்தை நிருபிக்க ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டது. ஒரு பிராணியின் இதயத்தே வெளியே எடுத்து மிகவும் சிறிதளவு 0.1% குளுக்கோஸ் கரைசலில் போடப்பட்டது. அந்த இதயம் நான்கு தினங்கள் அந்தக் கரைசலில் துடித்துக் கொண்டிருந்தது. இதயம் சம்பந்தப்பட்ட எந்த நோயாகட்டும் தேனும் மாதுளம் பழமும் உண்டு வந்தால் தீரும் என்கிறார் மருத்துவத்தின் தந்தையாகிய இப்னு சினா.
ஏனென்றால் தேன் உடலை அமைதிப்படுத்தும். உடலில் பாஸ்பரஸ் அளவை குறைத்து கால்சியத்தை அதிகப்படுத்தி ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 70 கிராம் தேனை இரண்டு மாதம் அருந்தி வந்தால் ரத்தத்தின் தன்மை உடம்புக்கு ஏற்ற வகையில் மாறுகிறது. ரத்த நாளங்கள் சீராகிறது. இதயக் குழாய், தசைகளின் முறையான இழுவிசையை அதிகரிக்கச் செய்கிறது எனப் பேராசிரியர் கொளம்புவின் ஆய்வுகள் கூறுகிறது.
நெஞ்சு வலி, ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளுக்குச் சிறிய வெங்காயத்தின் சாறும் தேனும் கலந்து சாப்பிடுவது நல்லது. நெஞ்சு தொடர்பான நோய்களுக்கு, குப்பைமேனி தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட குணமடையும். துளசிசாறும் தேனும் கலந்து சாப்பிட நெஞ்சுவலி சரியாகும். வெண்தாமரை இதழோடு தேன் கலந்து சாப்பிட இதயம் பலம் பெரும்.
காலரா, காச நோய், டைஃபாயிடு, வயிற்றுப்போக்கு போன்ற 25-க்கும் மேற்பட்ட கிருமிகளைத் தேனில் விட்டு நோக்கினர். அனைத்து கிருமிகளும் ஓரிரு நாட்களில் பெருகாமல் அழிந்து போயின. தேன் ஒரு ஈரம் உறிஞ்சியாகும் (Hygroscopic). எனவே, அது கிருமிகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கிருமிகளைக் காயவைத்து சாகடிக்கும். தேனில் நீர் செயல்பாடு மிகவும் குறைவு. கிருமிகள் வளர AW - Water activity 0.94-0.99 வரை இருக்க வேண்டும். ஆனால் தேனிலோ AW - Water activity 0.56-0.62தான் உள்ளது. மேலும், தேனில் உள்ள அமிலத்தன்மை கிருமிகளை வளரவிடாமல் செய்து விடுகிறது. எனவே, கிருமிகளை அழிக்கத் தேன் சிறந்தது. புண்களில் உள்ள கிருமிகளையும் தேன் அழிக்கும்.
பிறந்த ஒரு மாதமே ஆன குழந்தைகளின் புண் மீது ஆயிண்மென்ட் தடவி பார்த்தார்கள். புண் ஆறவில்லை. தேன் தடவினார்கள் புண் ஆறியது. புண்கள் மீது கோதுமையும் தேனையும் அடைபோல் ஆக்கி புண்கள் மீது அப்பினால் குணமடையும் என்று மருந்துவத் தந்தை இப்னுசினா அவர்கள் கூறுகிறார். துளசி சாறும் தேனும் கலந்து தடவினால் தீப்புண் ஆறிவிடும். புங்கை மரவேரை எடுத்து தெஎங்காய் போல் துருவி பால் எடுத்து தேன் கலந்து தடவினாலும் ஆறாத புண்கள் ஆறும்.
மிளகை தூள் செய்து, தேன் கலந்து சாப்பிட செரிமானக் கோளாறு நீங்கும். தேங்காய்ப் பாலில் தேன் கலந்து சாப்பிட வாய்ப் புண், வயிறு புண் சரியாகும்.
வாயு வெளியேற துளசியும் தேனும் சிறந்தது.இஞ்சி சாறும் தேனும் பசி கொடுக்கும். இரைப்பை புண் இருப்பவர்கள், உணவுக்கு முன் ஒன்றரை மணி நேரம் முன்பு நீரில் தேன் கலந்து குடிக்கவேண்டும். புண் சரியாகும். குப்பைமேனி செடியின் வேரை இடித்துக் கசாயமாக்கி தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புழுக்கள் வெளிவரும்.
கல்லீரல் நோய்க்கு, தேன், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சிறந்த நிவாரணம் அளிக்கும். வெண்ணெய், கோதுமை கஞ்சி, பார்லி, ஆப்பிள் ஆகியவற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் கல்லீரலுக்கு நல்லது. கருத்துளசி சாறு, ஆட்டுப்பால், தேன் கலந்து குடிக்க ஈரல்நோய் குணமாகும். தக்காளி ஜூஸூடன் தேன் கலந்து குடிக்கக் கல்லீரல் நலமாகும்.
எலுமிச்சை சாற்றோடு சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தூக்கம் வரும். இரவில் அதிகத் தேன் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தூக்கத்தைக் கெடுக்கும். சிறிதளவு சாப்பிட தூக்கம் வரும். அதிகம் சாப்பிட்டால் கிளர்ச்சி உண்டாகும்.
வில்வ பூக்களைக் காயவைத்து தூளாக்கி தேன் கலந்து சாப்பிடவும். மாம்பழ சாறோடு கேரட்டை வேகை வைத்து தேன் கலந்து அருந்தினால் நரம்பு வலிமை பெறும். நன்னாரி வேரில் கஷாயம் தயாரித்துத் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகளின் வெப்பம் நீங்கி நரம்புகள் உறுதியாகும்.
அன்னாசி பழச்சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். உடல் சூட்டால், சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டால் அதிமதுர சூரணத்தை தேனில் கலந்து சாப்பிட சரியாகும்.
திராட்சை சாற்றில் சிறிது தேன் கலந்த குடிக்கலாம். வெண்தாமரை இதழில் கஷாயம் செய்து தேன் கலந்து அருந்தலாம். பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது மூளைக்கு நல்லது. பாதாமை அரைத்து சிறிது நெய் சேர்த்து தேன் கலந்து சாப்பிடவும். கருத்துளசி சாற்றில் கற்கண்டும் தேனும் கலந்து பருக மூளை சுறுசுறுப்பாகும். தினமும் காலையில் சிறிதளவு தேன் பருக ஞாபக சக்தி கிடைக்கும். வல்லாரை சாற்றில் சிறிது தேன் கலந்து குடிக்க மூளைக்கு நல்லது.
பன்னீர் ரோஜா, ஏலக்காய், தேன் கலந்து சாப்பிட சூடு தணியும். ரோஜாவை தேனில் ஊற வைத்து சாப்பிட சூடு குறையும். இளநீரில் தேன் கலந்து அருந்த சூடு தணியும்.
எலுமிச்சைச் சாறு தேனுடன் கலந்து குடிக்கத் தலைவலி தீரும். சாப்பாட்டுக்கு பிறகு சிறிது தேன் அருந்த ஒற்றைத் தலைவலி வராது. தலைவலிக்கும் போது, நெற்றிப்பொட்டில் தேனை தேய்த்தால் தலைவலி நீங்கும்.
குறைந்தளவு அரிசி சோறு நிறையக் காய்கறிகள் சாப்பிட்டு, காபி, டீ பால் சர்க்கரை சாப்பிடாமல் வெறும் தேனை கலந்து நீரைக் குடித்து நடைப்பயிற்சி செய்திட உடல்பருமன் குறையும்.