இளம் வயதினர் உட்பட பலருக்கும் இதய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு நவீன வாழ்க்கை முறை, துரித உணவு என பல காரணங்கள் கூறுகின்றனர். அப்படி இதய பிரச்னைகளை குறிக்கும் அறிகுறிகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
மார்பக பகுதியின் இரு புறங்களிலிருந்து கை முதுகு வரை ஒரு அசெளகரியமான உணர்வு ஏற்பட்டால் அது இதய பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருந்தால் அது இதய பிரச்னையை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மூச்சுத் திணறல் மற்றொரு எச்சரிக்கையாகும். இதனை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு, மருத்துவரை அணுக வேண்டும். நீங்களே ஆஸ்துமாவாக அல்லது சுவாச பிரச்சனையாக இருக்கலாம் என்று முடிவு எடுத்து விடக்கூடாது.
சீரற்ற இதயத்துடிப்பும் இதயப் பிரச்னைக்கு மற்றொரு அறிகுறி ஆகும். அவ்வாறு நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கணுக்கால் அல்லது வயிற்றில் ஏற்படும் வீக்கம் இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். அந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தை கண்காணிப்பது மிக மிக அவசியமாகும்.
இயல்பான சோர்வுக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான சோர்வு மற்றொரு எச்சரிக்கை அறிகுறி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews