சத்தம் கேட்பதற்கு முன்பே எழுந்து அலாரத்தை OFF செய்பவரா நீங்கள்? அறிவியல் கூறும் காரணமென்ன?

நாம் தூங்கும் போது கூட நம் உடல்கள் விழித்திருக்கும் நேரத்தை உணரக் கூடிய சென்ஸ் உள்ளது. ஆனால் அலாரம் அடிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நமது தூக்கம் ஏன் கலைகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
 Alarm அடிப்பதற்கு முன்பே எழுந்திருப்பவரா நீங்கள்?
Alarm அடிப்பதற்கு முன்பே எழுந்திருப்பவரா நீங்கள்? Twitter
Published on

அலாரம் அடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு கண்ணை மூடிக்கொண்டு அதிகாலையில் உங்கள் ஃபோன் அல்லது படுக்கைக்கு அருகில் உள்ள கடிகாரத்தைப் பார்ப்பது ஒரு விசித்திரமான பழக்கம். ஆனால் நம்மில் பலருக்கு அந்த பழக்கம் இருக்கும்.

நாம் தூங்கும் போது கூட நம் உடலுக்கு விழிக்கும் நேரத்தை உணரக் கூடிய சென்ஸ் உள்ளது. ஆனால் அலாரம் அடிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நம் தூக்கம் ஏன் கலைகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே எழுந்திருப்பதற்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.

தூக்க நிபுணர்களின் கூற்றுப்படி,

நமது உடல், ஹைபோதாலமஸில் உள்ள மூளையின் ஒரு சிறிய பகுதியான suprachiasmatic nucleus அல்லது nuclei (SCN) எனப்படும் நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதற்கு முன் SCN பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ் இரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.

பகலில் நீங்கள் தூக்கம் வருவதையும் விழித்திருப்பதையும் உணரும்போது suprachiasmatic நியூக்ளியஸ் ஒரு சிக்னலை எடுத்துக்கொள்ளும்

 Alarm அடிப்பதற்கு முன்பே எழுந்திருப்பவரா நீங்கள்?
"தூக்க மாத்திரை எடுத்துகொள்வது ஒரு escapism தான்" - உளவியலாளர் Dr அபிலாஷா சொல்வதென்ன?

SCN ஆனது நமது தூக்கத்தையும் விழிப்பையும் தூண்டலாம். தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சி PER எனப்படும் புரதத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதையும் மறுநாள் காலையில் அதே நேரத்தில் எழுந்திருப்பதையும் வழக்கமாகப் பின்பற்றும்போது சுழற்சி மிகவும் சீரானதாக மாறும்.

ஒரு நாளின் PER புரதத்தின் அளவு உயர்கிறது மற்றும் குறையவும் செய்கிறது. குறைந்த அளவு PER குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது இரவில் நம்மை தூங்க வைக்கிறது. அதேபோல், அதிக அழுத்தம் நம்மை விழித்திருப்பதை உணர வைக்கிறது.

sleep
sleeptwitter

சிறந்த தூக்க சுழற்சி

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவில் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் சரியான நேரத்தில் உறங்கினால், உங்கள் PER அளவை மாற்றிக்கொள்ள பழகிக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அலாரத்திற்கு முன் எழுந்திருக்கும் பழக்கம் பெரும்பாலும் நிலையான தூக்க அட்டவணையைக் கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது.

அதாவது ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதையும் மறுநாள் காலையில் அதே நேரத்தில் எழுந்திருப்பதையும் வழக்கமாகப் பின்பற்றும்போது இந்த சுழற்சி நடைபெறுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 Alarm அடிப்பதற்கு முன்பே எழுந்திருப்பவரா நீங்கள்?
இரவு உணவு : இரவில் சாப்பிடவே கூடாதவையும், சாப்பிட வேண்டியையும் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com