அறுசுவைகளில் இனிப்பும் ஒன்று. பலருக்கு இனிப்பு வகைகள் பிடிக்கும். பலர் இனிப்பு வகைகளை அறவே தவிர்த்துவிடுவார்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்து இனிப்பை தவிர்ப்பவர்கள் இருக்கின்றனர். இடையில் அதாவது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள், இனிப்பு வகை உணவுகளை தவிர்ப்பார்கள்.
சர்க்கரையை படிப்படியாக குறைப்பது ஒரு ரகம், முற்றிலும் அதனை தவிர்ப்பது ஒரு ரகம் அப்படி சர்க்கரையை முற்றிலும் தவிர்த்தால் உடலுக்கு என்ன ஆகும்?
நமது உடலில் இனிப்புச் சத்து என தனியே ஒன்றும் கிடையாது என்கின்றனர் நிபுணர்கள். எந்த உணவை சாப்பிட்டாலும் அது செரிமானமாகி கடைசியாக குளுக்கோஸ் ஆக மாறுகிறது. குளுக்கோஸ் இல்லாமல் மூளையால் இயங்க முடியாது.
அதற்காக குளுக்கோஸை நேரடியாக சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அர்த்தம் அல்ல, அதே மாதிரிதான் இனிப்பு சத்தும். இனிப்பு சாப்பிட்டால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை.
கார்போஹைட்ரேட் எனர்ஜி கொடுக்கும் எரிபொருள். இது மாவுச்சத்தானது அரிசி, கோதுமை உணவுகளில், சிறுதானியங்களில், கிழங்கில் இருக்கிறது. இப்படி தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust