Health: நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம்?

என்னதான் இரண்டுமே கரும்பில் இருந்து வந்தாலும், வல்லுநர்கள் பலரும் இன்று வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். ஏன்? இந்த பதிவில்...
Health: நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம்?
Health: நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம்?canva
Published on

வெள்ளை சர்க்கரை, நாட்டுச்சக்கரை இரண்டுமே நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுமே கரும்பில் இருந்து தான் வருகிறது என்றாலும் இவற்றை தயாரிக்கும் விதம் வேறுபடுகிறது.

சர்க்கரைக்கு இயற்கையாக மணமில்லை. ஆனால் நாட்டுச் சக்கரையில் மணம் இருக்கும்.

என்னதான் இரண்டுமே கரும்பில் இருந்து வந்தாலும், வல்லுநர்கள் பலரும் இன்று வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

ஏன்? இந்த பதிவில்...

Health: நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம்?
Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360

வைட்டமின் மற்றும் மினரல்

நாட்டு சர்க்கரையில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறன. இதில் மெக்னீசியம், காசியம், பொடாசியம் உள்ளிட்ட தாதுக்கள் இருக்கின்றன. இது ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

இதுவே வெள்ளை சர்க்கரையில் இனிப்பு தன்மை மட்டுமே உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் இல்லை

உடல் எடை மற்றும் ஆஸ்துமா

வெள்ளை சர்க்கரை உடலில் சீக்கிரம் கரைந்துவிடுகிறது. மற்றும் கலோரிகள் நிறைந்தவை. இதனால் சர்க்கரை நோய் வருவது மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் நாட்டு சர்க்கரை எடுத்துகொள்வது உதவியாக இருக்கும்.

மேலும் ஆஸ்துமா போன்ற மூச்சு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் இது நல்லது. வெள்ளை சர்க்கரையால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது போல இது அதிகரிப்பதில்லை.

மாதவிடாய் மற்றும் செரிமானம்

நாட்டுச் சர்க்கரை கருப்பையின் தசைகளை தளர்வாக்கும், வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கும். எனவே மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது.

மேலும் நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி கூடுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டு சர்க்கரை செரிமானத்துக்கு உதவுகிறது.

உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லத்தை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

நாட்டுச்சர்க்கரை நல்லது என்பதற்காக அதையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்கள் உணவில் சர்க்கரையைச் சேர்ப்பது அதிகப்படியான கலோரிகளைச் சேர்ப்பதற்கு சமம். என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

Health: நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம்?
Health: Intermittent Fasting என்றால் என்ன? இதனால் இவ்வளவு நன்மைகளா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com