நம் உடல்நலத்தை பாதுகாக்க பலவிதமான டயட்டுகளை நாம் மேற்கொள்கிறோம். அதில் ஒன்று தான் Intermittent Fasting என்பது.
இதன் பொருள் என்ன? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் காணலாம்
இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது, இடைப்பட்ட உண்ணாவிரதம், அதாவது ஒரு குறிப்பிட்ட நேர கெடுவுக்குள் சாப்பிடுவது, மற்ற நேரத்தில் சாப்பிடாமல் fast செய்வது. இதற்கு நேர அளவுகோள்கள் இருக்கின்றன.
இதுவும் ஒரு வெயிட் லாஸ் டெக்னிக் தான்.
இந்த நேர அளவுகோளை விண்டோ (Window) என்று சொல்கின்றனர். இது 6, 8, 10, 12 மணி நேரம் என்று மாறுபடுகிறது.
உதாரணமாக நீங்கள் காலை முதல் உணவை 8 மணிக்கு எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மாலை 8 மணியுடன் உங்கள் கடைசி உணவை சாப்பிட்டுவிட வேண்டும். இது 12 மணி நேர விண்டொ.
சிலர் ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் மறுநாள் நன்றாக சாப்பிடுவார்கள். அடுத்த நாள் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த Intermittent Fastingஆல் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
இவர்களின் ஆய்வு படி, 10 மணி நேர விண்டொவில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். இது உடலின் ஆற்றலை மேம்படுத்தி, நமது மூட் (உணர்வுகள்) மற்றும் பசியை மெயின்டெயின் செய்ய உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
எடை இழப்பு
வகை 2 நீரிழிவு நோய்க்கான குறைந்த ஆபத்து
மேம்பட்ட இதய ஆரோக்கியம்.
மேம்பட்ட மூளை ஆரோக்கியம்.
புற்றுநோயின் ஆபத்து குறைகிறது
மேலும் தவறாமல் இந்த நேர கெடுவை கடைப்பிடிப்பவர்களில் இன்னும் அதிகமான நன்மைகளை கண்டுள்ளனர்.
Intermittent Fastingஐ பிரபலப்படுத்துவோர் 6 மணி நேர விண்டோவை கடைப்பிடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தினாலும்,
ஆய்வின் தரவுகள் 10 மணி நேர விண்டோ,நமது மூட், ஆற்றல் மற்றும் பசியில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மொத்தம் 37,545 பேர் மூன்று வாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல் வாரத்தில் வழக்கம் போல சாப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் 10 மணி நேர விண்டோ பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கம் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தவே, இவர்களில் 36,000 பேருக்கும் மேல், கூடுதல் வாரத்திற்கு இந்த பழக்கத்தை நீட்டித்தனர். இவர்களில் 27,371 பேர் அதிக ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களாக வகைப்பட்டனர்.
இந்த 27,371 பேரில் 78 சதவிகிதம் பெண்களே!
ஆராய்ச்சியாளர், டாக்டர் சாரா பெர்ரி கூறுகையில், 10 மணி நேர விண்டோ பலருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மற்றும் விட்டு விட்டு இந்த ஃபாஸ்டிங் செய்தவர்களை விட, தொடர்ச்சியாக மேற்கொண்டவர்களில் நேர்மறையான விளைவுகள் இருந்தது என்றார்.
நமது உடலுக்கு தேவையான சத்து சரியான உணவில் மட்டுமில்லை, சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்வதிலும் இருப்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இவ்வாறு செய்வதால், சுகாதாரமான, ஆபத்தற்ற வெயிட் லாசும் செய்யலாம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust