குரங்கு அம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. கனடா மற்றும் அமெரிக்காவிலும் இந்த நோய்த்தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த நோய்த்தொற்று முதன் முதலாக 1958ல் கண்டறியப்பட்டது. இது குரங்குகளால் பரவும் தொற்று அல்ல. இது ஒரு வைரஸ் தொற்று. பாக்ஸ்வைரிடே (poxviridae) குடும்பத்தைச் சேர்ந்தது. டெங்கு வைரஸ் இந்த குடும்பத்தைச் சேர்ந்தது தான்.
இந்த வைரஸ் பரவ பல காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலும் தொடுதல் மூலமாகவே பரவுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடும் போது இந்த வைரஸ் தொற்று ஏற்படலாம். அத்துடன் இருமல் மற்றும் தும்மல் மூலமாகவும் வைரஸ் பரவுகிறது.
சின்னம்மை நோயைப் போல கொப்புளங்கள் ஏற்படும். காய்ச்சல், சளி, தலைவலி, சோர்வு மற்றும் தசைவலி ஆகியவை குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்கா பகுதிகளில் இந்த நோய் பரவலாகக் காணப்படும். மே மாத தொடக்கத்தில் நைஜீரியா சென்று வந்த ஒரு நபரால் இங்கிலாந்தில் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவுக்குப் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயின், போர்ச்சுகள் நாடுகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு இது வரை தொற்று ஏற்பட்டிருக்கிறது. கனடாவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
குரங்கு வைரஸ் நோய் எளிதாகத் தடுக்கப்படக் கூடியது தான் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகள் கேட்டுக்கொண்டன.
நோய்த்தொற்று வெளிப்பட்ட 4 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust