டெல்டாகிரான்: புதிய ஹைபிரிட் கொரோனா வைரஸ் - நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

இந்த வைரஸின் பெரும்பாலான மரபணு வரிசை டெல்டாவைப் போலவே இருந்தது. இது கடந்த ஆண்டு உலகளவில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸின் ஒரு பகுதி. அதன் வெளிப்புற கட்டமைப்பு ஒமிக்ரான் போல உள்ளது. இது இரண்டும் கலந்தவைதான் இந்த டெல்டாகிரான்.
Covid 19

Covid 19

NewsSense

Published on

டெல்டா மற்றும் ஒமிக்கிரானின் கலப்பின வேரியன்ட், டெல்டாகிரான். இது இரு வைரஸ்களின் குழந்தை. சமீபத்தில் இந்த 2 வேரியன்ட்கள்தான் உலகையே உலுக்கின. பல நாடுகளில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற பொதுவான உணர்வு உள்ளது. எப்படியாக இருந்தாலும், ஒரு ஆபத்தான புதிய மாறுபாடு தோன்றக்கூடும் என்ற குறிப்பிடத்தக்க கவலை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அதிர்ஷடவசமாக ஒமிக்ரான் பல நாடுகளுக்குப் பரவினாலும் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் ஆதிக்கம் செலுத்தினாலும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உயிரிழப்புகள் அதிகம் இல்லை. ஆனால், இந்த டெல்டாகிரானுக்கு இப்படியான உத்தரவாதத்தை அளிக்க முடியாது. இந்த வேரியன்ட்ஸின் மாறுபாடுகள் தோராயமாக வளரும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் புதிய வைரஸ் முந்தையதை விட ஆபத்தானதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தற்போது டெல்டாகிரான் என்ற பெயரில் இந்தப் புதிய வைரஸ் வந்துவிட்டது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் இந்த இரண்டும் நம்மை உலுக்கி எடுத்த வைரஸ்கள்.

Pexels

இந்த டெல்டாகிரான், கடந்த பிப்ரவரி மாதம் நடுவிலிருந்து தொடங்கியது. பாரிஸில் உள்ள இன்ஸ்டிட்யூட் பாஸ்டரின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மரபணு வரிசையைப் பதிவேற்றியபோது, இது முந்தைய வைரஸ்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு ஃபிரான்சில் ஒரு முதியவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் பார்க்கவும் வித்தியாசமாக உள்ளது.

இந்த வைரஸின் பெரும்பாலான மரபணு வரிசை டெல்டாவைப் போலவே இருந்தது. இது கடந்த ஆண்டு உலகளவில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸின் ஒரு பகுதி. அதன் வெளிப்புற கட்டமைப்பு ஒமிக்ரான் போல உள்ளது. இது இரண்டும் கலந்தவைதான் இந்த டெல்டாகிரான்.

இந்த முறை அமெரிக்காவில், மார்ச் மாதத்திற்குள், மேலும் மூன்று கலப்பின மரபணு வரிசைகள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இப்போது 60க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இவையெல்லாம் வெவ்வேறு டெல்டாகிரான்களாக இருக்கலாம்.

இன்ஸ்டிட்யூட் பாஸ்டரின் விஞ்ஞானிகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள டெல்டாக்ரான் வைரஸ் வேரியன்ட்கள் மற்ற நாடுகளில் காணப்படும் சில வைரஸ்களைவிட தோற்றத்தில் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். டெல்டாகிரானின் இந்த வெவ்வேறு வடிவங்களில் எது என்பதைக் குறிப்பிட்டு சொல்வது கடினமாக உள்ளது.

<div class="paragraphs"><p>Covid 19</p></div>
செளதி அரேபியா அரசு : அராம்கோ எண்ணெய் நிறுவன லாபம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது!

NewsSense 

எப்படி இந்த ஹைபிரிட்ஸ் உருவாகிறது?

இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் ஒரு செல்லைத் தாக்கினால், வைரஸ்கள் தங்களின் பாகங்களைக் கலந்து கலப்பினமாக உருவாவது அசாதாரணமானது அல்ல. இதை ரீகாம்பினேஷன் என்பார்கள். ஒரு வைரஸ் அதன் மரபணு வரிசையின் பகுதிகளை மற்றொரு வைரஸின் பாகங்களுடன் இணைக்கிறது. அந்த வைரஸின் நகல்களை இந்த வைரஸ் கலப்பினமாக்கி சேகரிக்கிறது. இதுபோல உருமாற்றம் பெறும்போது, வைரஸ் சீரற்ற முறையில் நடப்பதாகத் தோன்றுகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஒரு வைரஸ் மாறுபாட்டிலிருந்து மற்றொரு மாறுபாட்டிற்குப் பரிமாற்றம் நடக்கையில், ஒரு மாறுபாடு குறைவாகவும் மற்றொன்று அதிகமாகவும் மாறும். அதாவது இரண்டுமே, இரண்டு வைரஸ்களுமே மக்கள்தொகையில் புழக்கத்தில் உள்ளன. மேலும் அவை ஒரே நேரத்தில் மக்களைத் தாக்கும் வாய்ப்பும் உள்ளது. உலகளவில் அதிக ஆதிக்கம் செலுத்திய டெல்டாவின் வடிவத்தின் உருமாற்றமே ஒமிக்ரான். எனினும் இப்போது இந்த இரண்டும் கலப்பினமாக உருவாகியிருக்கிறது.

இந்தத் தருணத்தில் இந்த டெல்டாகிரான் தனது பெற்றோர்களான டெல்டா மற்றும் ஒமிக்கிரானை எந்தளவுக்கு ஒத்திருக்கும் எனச் சொல்வது கடினம். டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகியவை முற்றிலும் வேறுபட்ட வைரஸ்கள். அவை உயிரணுக்களை எவ்வாறு பாதிக்கின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படித் தாக்கும் எனச் சொல்வது கடினம். டெல்டாகிரானைப் பற்றி இன்னும் எங்களுக்குத் தெரியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அருகிலுள்ள பல நாடுகளில் இது காணப்படுவதால், டெல்டாக்ரான் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும், ஓமிக்ரான் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவலாகப் பரவி வருகிறது, எனவே இப்போது நாம் கவனமாகப் பார்க்க வேண்டிய வேரியன்ட் இதுவாகும். டெல்டாக்ரான் தற்போது ஓமிக்ரானை இடமாற்றம் செய்யுமா? நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்குவதில் டெல்டாக்ரான் எப்படி இருக்கும்? இது கடுமையான நோயை உண்டாக்குமா என்பதைக் காலம்தான் சொல்லும். தற்போது டெல்டாகிரான் பாதிப்பால் வந்தவர்கள் குறைந்த அளவுதான், அதனால் எந்த முடிவுகளும் சொல்ல முடியவில்லை.

<div class="paragraphs"><p>Covid 19</p></div>
இந்தியாவில் நடுவானில் மோதிக்கொண்ட செளதி விமானம் : 1996-இல் நடந்தது என்ன? | பாகம் 2

NewsSense

டெல்டாக்ரானின் பண்புகளைக் கண்டறியும் சோதனைகள் இன்னும் நமக்குத் தேவை. இது எப்படித் தாக்கும்? எப்படிப் பரவும் என இனிதான் சோதனை செய்ய வேண்டும். விஞ்ஞானிகள் இந்தச் சோதனைகளை, செயல்முறையைத் தொடங்கியுள்ளனர். எனவே சரியான நேரத்தில் பதில் கிடைக்கும் என்று நம்பலாம். இதற்கிடையில், நாம் டெல்டாகிரானை கண்காணிக்க வேண்டும். டெல்டாகிரான் எல்லைகளைக் கடந்து பரவியிருக்கலாம் என்பது உண்மைதான். இனி வைரஸ் எவ்வாறு மாறுகிறது? பரவுகிறது? என்பதைக் கண்காணிக்கத் தொடர்ந்து மரபணு கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள். கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவலாகப் பரவி, அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பாதித்து வருவதால், இந்த ரீகாம்பினேஷன் கலப்பின வைரஸூம் பல மாறுபாடுகளில் வெளிவர வாய்ப்புள்ளது.

இருப்பினும், டெல்டாக்ரான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் பட்சத்தில், பிற மாறுபாடுகளுடனான முந்தைய தொற்றில் கண்டுபிடித்த தடுப்பூசியால் நாம்

ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கலாம். எனினும், டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்து ஒரு மோசமான புதிய வைரஸை (டெல்டாகிரான் வைரஸை) உருவாக்கிவிட்டதா என்பதை இனி காலம்தான் பதிலாகச் சொல்லும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com