விரல்களில் சொடக்கிடுவது நம்மில் பலருக்கு தவிர்க்க முடியாத பழக்கமாக இருக்கும். ஒரு வேலையை செய்து முடித்த பின்னர் விரலில் சொடக்கு போட்டால் தான் சிலருக்கு நிறைவாக இருக்கும்.
உண்மையில் சொடக்கு அந்த விரலுக்கு அல்லது மூட்டுக்கு மட்டுமின்றி மூளைக்கும் கொஞ்சம் ரிலாக்ஸான உணர்வைக் கொடுக்கும்.
சிலருக்கு அந்த சொடக்கு சத்தம் பிடித்திருக்கும். டிக், டக், டப் என்ற ஓசைகளை கேட்பதில் அப்படி என்ன ஆனந்தமோ?
25% - 45% வரை இப்படி சொடக்கிடுவது உடலுக்கு கேடு விளைவிக்காது. ஆனால் தொடர்ந்து செய்வது மூட்டுகளை பலவீனப்படுத்தலாம்.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். என்றாவது இந்த சத்தம் எப்படி, எங்கிருந்து வருகிறது என யோசித்திருக்கிறீர்களா?கண்டிப்பாக குழந்தையாக இருந்த போதே எலும்பில் இருந்து என முடிவு செய்திருப்பீர்கள் ஆனால், அது தவறு!
நம் மூட்டுகள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டால் அதிக தேய்மானம் ஏற்படும். வலியும் இருக்கும். இவற்றைத் தவிர்ப்பதற்காக மூட்டுகளுக்கு நடுவில் ஒரு திரவம் இருக்கும்.
இதற்கு மூட்டு திரவம் அல்லது சைனோவியல் திரவம் என்று பெயர். இந்த திரவத்தில் வாயுக்களும் கலந்திருக்கும்.
மூட்டு திரவம் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் தான் நாம் சொடக்கிடுவோம். உதாரணமாக மணிக்கட்டு மூட்டு.
மூட்டு திரவத்தில் இருக்கும் காற்று குழி அல்லது காற்று அறை தான் இந்த சத்தத்துக்கு காரணம். நாம் சொடக்கிடும் போது எலும்புகளுக்கு இடையிலான இடைவெளி அதிகமாகும், அதிக நேரம் வரை ஒரே பகுதியில் பொருந்தியிருந்த மூட்டு திரவம் வேகமாக அந்த இடைவெளிக்கு வெடித்து நகருவதால் சத்தம் ஏற்படுகிறது.
தசை நாண் மற்றும் தசை நார்களும் இந்த சத்தத்துக்கு காரணமாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust