நகத்தில் வெள்ளை புள்ளிகள் விழுவது அதிர்ஷ்டமா? நோய் அறிகுறியா? நகங்கள் பற்றி தெரியுமா?

நகங்களின் நிறம் மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள், தொற்றுகள் அல்லது வேறு உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மஞ்சள் நிறத்தில் நகங்கள் காணப்பட்டால்...
உடல்நல பிரச்னையை அப்படியே சொல்லும் நகங்கள் - எப்படி தெரியுமா?
உடல்நல பிரச்னையை அப்படியே சொல்லும் நகங்கள் - எப்படி தெரியுமா?canva

நகங்கள் அழகியல் அம்சம் மட்டுமல்ல, உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதற்கான பிரதிபலிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். இது 'ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது.

ஆரோக்கியமான நகங்கள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நுனியில் லேசான வளைவு இருக்கும். நிறம் மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள், தொற்றுகள் அல்லது வேறு உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சரியான ஊட்டச்சத்து இல்லாமல், நகங்கள் உடையக்கூடியதாக மாறும். அப்படி நகங்கள் காட்டும் நோய்க்குறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அசாதாரண நக வடிவங்கள்

நுனியில் எதிர் திசையில் வளைந்த நகங்கள் நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையைக் குறிக்கலாம். நகத்தின் நுனிகளில் சுருண்டிருப்பது சுவாசம் அல்லது இதயப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

கெரட்டின் பாதுகாப்பு அடுக்குகள் சேதமடையும் போது நகங்களில் உரித்தல் ஏற்படுகிறது.

இந்த நிலை பெரும்பாலும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் குறைபாட்டைக் குறிக்கிறது. வால்நட்ஸ், ஆளி விதைகள், பாதாம், பருப்புகள், சூரியகாந்தி விதைகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வளர்ச்சி குறைப்பாடு உள்ள நகங்களை மேம்படுத்தலாம்.

மஞ்சள் நிறமாக இருப்பது

மஞ்சள் நிற நகங்கள் நீரிழிவு, சுவாசம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் போன்ற பல்வேறு உள் கோளாறுகளின் ஆரம்ப அறிகுறிகளாகும். நகங்களில் மஞ்சள் புள்ளிகள் அல்லது தடிப்புத் தோல் அழற்சியின் குறியீடாக இருக்கலாம்.

உடையக்கூடிய தன்மை

உடையக்கூடிய நகங்கள் பல பெண்களிடையே ஒரு பொதுவான புகாராகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

உடையக்கூடிய நகங்கள் ஈரப்பதம் இல்லாமல், எளிதில் உலர்ந்து, விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான மீன், இலைக் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் முட்டைகளைச் சேர்ப்பது நகங்களின் வலிமையை மேம்படுத்த உதவும்.

உடல்நல பிரச்னையை அப்படியே சொல்லும் நகங்கள் - எப்படி தெரியுமா?
வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?

வெள்ளைப் புள்ளிகள்

நகத்தின் மீது அல்லது குறுக்கே வெள்ளைக் கோடுகள் இருப்பது காய்ச்சல், கல்லீரல் அல்லது இதய நோய், சிறுநீரக கோளாறுகள் அல்லது உங்கள் உணவில் இரும்பு, துத்தநாகம் இல்லாததன் அறிகுறியாக இருக்கலாம்.

துத்தநாக அளவை அதிகரிக்க, உலர்ந்த பீன்ஸ், முந்திரி, தயிர், திராட்சை, கொண்டைக்கடலை, பால் பொருட்கள், பாதாம், பட்டாணி ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

உடலின் மற்ற பாகங்களைப் போலவே உங்கள் நகங்களின் ஆரோக்கியமும் முக்கியமானது என்கின்றனர் நிபுணர்கள்.

உடல்நல பிரச்னையை அப்படியே சொல்லும் நகங்கள் - எப்படி தெரியுமா?
கர்ப்பம் ஆகாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? எப்படி சாத்தியம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com