வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?

பிற ஆல்கஹால் மதுபானங்களைக் குடிப்பவர்களுக்கு கூட வைன் குடித்தால் தலைவலி வருவதன் அறிவியல் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.
வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?
வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?Twitter
Published on

வைன் அருந்துவது என்பது உலகில் பல கலாச்சாரங்களில் கலந்த ஒன்று. ஒரு நல்ல விருந்து வைன் இல்லாமல் நிறைவடையாது.

ஆனால் வைன் அருந்துவதில் சிலருக்கு பிரச்னைகள் இருப்பதைப் பார்க்கலாம். வைன் குடித்தால் தலைவலி ஏற்படும் என சிலர் குற்றம் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த தலைவலி கொஞ்சமாக வைன் அருந்தினால் கூட வந்துவிடும். 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரைக் கூட இந்த தலைவலி நீளலாம்.

ரெட் வைன் அருந்தினால் சிலருக்கு தலைவலி ஏற்படுவது ஏன் என்பதை அறிவியல்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பிற ஆல்கஹால் மதுபானங்களைக் குடிப்பவர்களுக்கு கூட வைன் குடித்தால் தலைவலி வருவதன் அறிவியல் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.

ரெட் வைனில் இயல்பாக காணப்படும் ஃபிளவனோல் என்ற பொருள் வழக்கமாக ஆல்கஹாலால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவே தலைவலி ஏற்பட காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குவெர்செடின் என்ற ஃபிளவனோல் திராட்சை உள்ளிட்ட பெர்ரி பழங்களிலும் இன்னும் சில காய்கறி பழங்களிலும் காணப்படும். இது சூரிய ஒளியால் உருவாகக்கூடியது.

இயல்பாக இது ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்ற நிறமிதான். ஆனால் ஆல்கஹாலுடன் வளர்சிதை மாற்றமடையும் போது மோசமானதாகிறது.

வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?
நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?

இது இரத்தத்தில் குவெர்செடின் குளுகுரோனைடு என்ற வடிவத்தை அடைகிறது. இதனால் ஆல்கஹாலின் வளர்சிதை மாற்றம் பாதிப்படைகிறது.

இறுதியில் அசிடால்டிஹைடு என்ற நச்சுப்பொருள் உருவாகிறது. இதுதான் தலைவலிக்கு காரணமாக அமைகிறது. எனவே இப்படி தலைவலியை அனுபவிப்பவர்கள் வைன் அருந்துவதை குறைக்கலாம்.

வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?
கூர்க் : கர்நாடகாவில் ஒரு Wine Hub - வீட்டிலேயே தயார் செய்யப்படும் வைன் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com