Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!

ஒரு சில ‘வெள்ளை நிற உணவுகள்’ சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன உணவுகள்?
Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!
Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!canva
Published on

மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, உணவு பழக்கங்களில் கணிசமான மாற்றங்களை நாம் மேற்கொண்டுவருகிறோம்.

தற்போது வெள்ளை நிறமுடைய உணவு வகைகளை (சர்க்கரை, அரிசி) உட்கொள்வதை குறைத்துகொள்ள அல்லது தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக சிறுதானிய வகைகளை, கோதுமை போன்ற உணவுகளை, காய்கறிகளை சேர்த்துக்கொள்ள அறிவுரைக்கின்றனர்.

ஆனால், ஒரு சில ‘வெள்ளை நிற உணவுகள்’ சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன உணவுகள்?

பன்னீர்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் புரதச் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல புரோட்டீன் சோர்ஸ். மேலும் கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ, டி நிறைந்ததும் கூட

காளான்

உண்ணக்கூடிய காளான்களில் வைட்டமின் டி, ரிபோஃப்ளேவின், செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. இதனால் மஷ்ரூம் சாப்பிட்டால் சருமம் மற்றும் உடல் நலம் மேம்படும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இவை இதயம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காக்கிறது

garlic
garlicTwitter

பூண்டு

நம் தினசரி உணவுகளில் பூண்டை சேர்த்துக்கொள்வதால் வாய்வு தொல்லை இருக்காது. மேலும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!
Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!

வெங்காயம்

இம்யூனிட்டி அதிகரிக்கும். இதிலுள்ள அலிசின் மற்றும் அலீன் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும், கெட்ட கொழுப்பு நீக்க உதவும். பச்சையாக சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது

Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!
Health: ஒரு மாதத்துக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

காளிஃபிளவர்

காளிஃபிளவரை விரும்பாத ஆள் இல்லை. இதன் மணம் சற்றே நம்மை முகம் சுழிக்கவைத்தாலும் இவற்றில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் சி மற்றும் கே, மற்றும் நாற்சத்தும் உள்ளது.

சன்னா கடலை

கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட கொண்டைக்கடலைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். வெள்ளை கடலைகளில் நாற்சத்து இருக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவு, கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துக்களும் கிடைக்கின்றன.

உங்கள் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளுங்கள். உணவே மருந்து, மருந்து உணவல்ல!

Health: இந்த வெள்ளை நிற உணவுகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது!
Health: காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com