தேன் இனிப்பு சுவை கொண்டிருப்பதால் பெரும்பாலானோருக்கு தேன் பிடிக்கும். தேன் மருத்துவக் குணம் உடையது. தேன் அனைவரும் சாப்பிட ஏற்றது மற்றும் முக்கியமாக தேன் கெடாது.
இது உண்மையென்றால் எத்தனை நாட்கள் வரை தேன் கெட்டுப்போகாது? தேனை நமக்கு முன் வாழ்ந்த மக்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்? வெறும் உணவாகவா? தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான தேன் கெட்டுப்போவதே கிடையாது. ஆனால், கலப்படத் தேன் கெட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கலப்படமற்ற தேன் பல நூற்றாண்டுகள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பாய்ஸ்டம் நகரில் புதைபொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ஒரு கல்லறையிலிருந்து பிணத்துடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட ஒரு தேன் குடுவையையும் கிடைத்துள்ளது. ஆய்வு செய்த போது, அந்த குடுவை 2500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்தக் குடுவையில் இருந்த தேன் சிறிதளவும் கெடாமல் இருந்துள்ளது, அவர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.
தேனை, குடுவையில் வைத்தால்தான் கெட்டு போகாது என்றில்லை. தேன் எதில் சேமித்து வைக்கப்பட்டாலும் கெடாது.
மேலும் முக்கியமாக தேனுடன் சேர்த்து எதை வைத்தாலும் கெட்டு போவதில்லை எனச் சொல்கிறார்கள். தேனில் மூழ்கடிக்கப்பட்ட எதுவும் கெட்டு போகாது என்கிறார்கள்.
எகிப்து நாட்டில் தோண்டி எடுக்கபட்ட ஒரு குழந்தையின் உடல் ஒரு பாத்திரத்தில் தேனில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. அந்த தேனும் கெடாமல் இருந்தது. தேனால் மூழ்கடிக்கப்பட்ட அந்தக் குழந்தையின் உடலும் கெடாமல் இருந்திருக்கிறது. இது 3500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது எனத் தெரியவந்தது.
கிரேக்க அரசர் அலெக்சாதர் இறந்த போது, அவரது உடலை அந்நாட்டின் மாஸிடோனியாவுக்கு எடுத்து செல்வதென்பது கொஞ்சம் சவாலான காரியமக இருந்தது. காரணம் ஈராக் பாபிலோனியாவில் உடலை மாஸிடோனியாவுக்கு எடுத்துச் செல்ல பல மாதங்கள் ஆகும். அந்தப் பயணத்தில் உடல் கெடாமல் இருக்க வேண்டும் எனச் சொல்லி அவர்கள் பயன்படுத்தியது இந்த முறையைத்தான். அலெக்சாந்தரின் உடலை தேனில் மூழ்க வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
4000 ஆண்டுகளுக்கு முன்னே பாடம் (taxidermy) செய்யப்பட்ட மம்மிகள் இன்றும் கெடாமல் இருப்பதற்கு காரணம், சுத்தமான தேன்தான்.
இலங்கையில் உள்ள பழங்குடியினர் சிலர் இறைச்சியைத் தேனில் ஊரவைத்து உயரமான மரப்பொந்துகளில் வைத்து மூடிவிடுவார்களாம். ஒரு ஆண்டுக் கழித்து மீண்டும் அதை எடுத்து உண்ணும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இறைச்சி கெட்டே போகாமல் இருக்குமாம். மேலும் இவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட இறைச்சி கூடுதல் சுவையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வளவு ஆதாரங்கள், ஆய்வுகள் இருந்தும் விஞ்ஞானம் மேலும் சில ஆய்வுகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. பாலைப்போலத் தேனும் நோய் கிருமிகளை உடையதாக இருக்கும் எனச் சொல்லி விஞ்ஞானம் சில ஆய்வுகளை மேற்கொண்டது.
காலரா, டைபாய்டு, காச நோய் எனும் டிபி போன்ற 40க்கும் மேற்பட்ட நோய்களை ஏற்படுத்தும் மோசமான 25 விதமான கிருமிகளைத் தேனில் விட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அவர்களைத் திகைக்க வைத்தது. அவர்கள் போட்ட அத்தனை வகை கிருமிகளும் ஓரிரு நாட்களிலேயே பெருகாமல் அழிந்து போயின. அவர்கள் நினைத்தது தேன் இனிப்பானது. எனவே எல்லாக் கிருமிகளும் பெருகி இருக்க வேண்டும் என்றுதான். ஆனால், ஆய்வின் முடிவு நினைத்ததற்கு எதிரானது.
உயிருள்ள செல்கள் வளர்ந்து பெருக தேவையான புரதம், மாவு சத்து, விட்டமின், தாது உப்புகள், எலக்ட்ரோலைட்ஸ் போன்றவை தேனில் உள்ளன. தேன் நைப்புத் தன்மை கொண்டது. அதாவது எளிதில் நீரை உறிஞ்சிக்கொள்ளும். கிருமிகள் பல்கி, பெருக இத்தனை பாதகமான சாத்தியக்கூறுகள் இருந்தும் தேனில் கிருமிகள் அழிந்து, போவதற்கும் தேன் கெடாமல் இருப்பதற்கும் காரணம் இதுதான்
தேனில் உள்ள ஏராளமான செரிமான பொருட்கள் - (‘என்ஸைம்ஸ்’) குறிப்பாக, தேனில் குளுக்கோஸ் ஆக்ஸிடஸ் என்ற பொருளின் வேதிவினையால் ஏற்படும் குளுகோனிக் ஆக்ஸிட் என்ற பொருள் உருவாக்கும் ஹைட்ரஜன் போராக்ஸைட் என்ற பொருள் கிருமிகளை எதிர்த்து அழிப்பதில் வல்லமை பெற்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust