கல்லீரல் நோய்: இந்த அறிகுறிகளை கவனித்திருக்கிறீர்களா? | Nalam 360

நோய்த்தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், கல்லீரலின் அடிப்படை செயல்பாடுகளான ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரித்தல், பித்த உற்பத்தி, ரத்த பிளாஸ்மாவுக்கான புரதங்களின் உற்பத்தி, பிற முக்கிய உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறாமல் பாதிக்கப்படும்.
liver
liverTwitter
Published on

அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரலுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்

பல காரணங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. அவற்றில் முதன்மையானது, அதிகப்படியான மது அருந்துதல் பழக்கம். ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய், பொதுவாக ARLD என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் குடிப்பதால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு. இதனால் சிரோசிஸ் எனப்படும் கடுமையான கல்லீரல் நோயால் பாதிக்க நேரிடும்.

கல்லீரல் நோய் எதனால் ஏற்படுகிறது?

மது அருந்துதல், உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறைப் பழக்கங்கள் கல்லீரலின் செயல்பாட்டுத் திறனைக் கெடுக்கின்றன. வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளும் கல்லீரலின் அசாதாரணச் செயல்பாட்டுக்குக் காரணமாகின்றன.

பல ஆண்டுகளாக மது அருந்துவது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது சிரோசிஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.

நோய்த்தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், கல்லீரலின் அடிப்படை செயல்பாடுகளான ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரித்தல், பித்த உற்பத்தி, ரத்த பிளாஸ்மாவுக்கான புரதங்களின் உற்பத்தி, பிற முக்கிய உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறாமல் பாதிக்கப்படும்.

மது
மதுTwitterர்

ARLD சிக்கலைக் குறிக்கும் பொதுவான அறிகுறி என்ன?

இதயம், மூளை போன்ற முக்கிய உடல் உறுப்புகளுடன் தொடர்புடைய மற்ற எல்லா நோய்களையும் போலவே, கல்லீரல் நோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதானது அல்ல. அவர்கள் தனித்துவமான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.

இருப்பினும், இந்த நோய்கள் உடலில் உருவாகத் தொடங்கியவுடன் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் சில விளைவுகள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் இந்த அறிகுறிகளின் விளைவு பெரியதாக இருக்காது. நம்மால் பெரியதாக உணர முடியாது. கவனிக்கப்படாமல் போகும், நம்மால் கவனிக்க முடியாது.

குழப்பமானவராக மாறலாம். குழப்பமான காலங்கள், பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்த இயலாமை, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் - மூட் ஸ்விங்ஸ், மோசமான மனநிலை, சிந்தனை முடிவெடுப்பதில் சிக்கல் ஆகியவை கல்லீரல் பிரச்சினைக்கான சில அறிகுறிகளாகும்.

நீங்கள் மனநிலை மாற்றங்களை அனுபவித்து அதாவது மூட் ஸ்விங்ஸ் தொடர்ந்து இருந்து, அன்றாட நடவடிக்கைகளில்கூட கவனம் செலுத்த முடியாவிட்டால், உங்கள் வாழ்க்கை முறை பழக்கத்தில் அதிகமாக மாறுபாடுகள் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை கேட்பது முக்கியம்.

liver
உடலில் கொழுப்பு சேராத, எடையை அதிகரிக்காத 9 டேஸ்டியான ஸ்நாக்ஸ்

கல்லீரல் நோய்க்கான மற்ற அறிகுறிகள்

சோர்வு

விவரிக்க முடியாத எடை இழப்பு, திடீரென உடல் எடை குறைவது

கணுக்கால்களில் வீக்கம்

வயிறு வீக்கம்

பசி இல்லாமை

மஞ்சள் நிற கண்கள் மற்றும் தோல்

தூக்கம் இல்லாமை

ரத்த வாந்தி

மலத்தில் ரத்தம் வருதல்;

மலம் வெளியேற்றுவதில் சிக்கல்

கல்லீரல்
கல்லீரல்Twitter

கல்லீரல் நோய்க்கான ஆபத்தான காரணங்கள் என்னென்ன?

வைரஸ் தாக்குதல்

உடல் பருமன்

உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது

அதிகமாகச் சாப்பிடுவது

மரபியல்

ஆட்டோ இம்யூன் நோய்

கல்லீரலில் கொழுப்புப் படிந்திருப்பது, சேருவது

புகை, குடிப் பழக்கம்

இரவு தூங்காமல் இருப்பது

liver
கல்லீரல், குடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கும் 4 பானங்கள்

கல்லீரல் நோய்களுக்கான தீர்வு என்ன?

மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அறிகுறிகளை அலட்சியம் செய்ய கூடாது.

வாழ்வியல் மாற்றங்களை அவசியம் செய்ய வேண்டும். உணவுப் பழக்கத்தைச் சீர் செய்து கொள்வது நல்லது. இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. தாமதமான தூக்கம் கல்லீரலைப் பாதிக்கும்.

liver
கல்லீரல் : ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com