உலக இதய தினம்: உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்

மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதயத்தை பாதிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய பழக்கவழக்கங்களை தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளபோகிறோம்.
உலக இதய தினம் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்
உலக இதய தினம் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்Twitter

பரபரப்பான வாழ்க்கையின் மத்தியில், நமது இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியமானதாகும். சமீப நாட்களாக இளைஞர்கள் பலர் இதய நோய் மற்றும் மாரடைப்பிற்கு ஆளாகின்றனர்.

மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதயத்தை பாதிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய பழக்கவழக்கங்களை தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளபோகிறோம்.

ஆரோக்கியமான உணவு

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், கொழுப்புகளை நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும். நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

சுறுசுறுப்பாக இருங்கள்

ஆரோக்கியமான இதயத்திற்கு உடல் செயல்பாடுகள் அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சியை கட்டாயம் பின்பற்றுங்கள்.

நேரம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறையாவது நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவும்.

Depression
Depressioncanva

மன அழுத்ததை குறைக்கவும்

நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் இதயத்தை பாதிக்கலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா அல்லது இயற்கையில் நேரத்தை செலவிடுதல் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்களை பாதுகாக்க மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.

pexels

நல்ல தூக்கம் வேண்டும்

ஒரு நல்ல இரவு தூக்கம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். குறைந்த அளவிலான தூக்கம் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும், இவை அனைத்தும் இதய நோய்க்கான காரணிகளாகும்.

உலக இதய தினம் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்

இரத்த அழுத்ததை சரிபார்க்கவும்

உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கண்காணிக்க வழக்கமான சோதனைகள் அவசியம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு உங்கள் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

உடல் எடையை பராமரிக்கவும்

அதிக எடை அல்லது பருமனாக இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சீரான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும்.

உலக இதய தினம் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்
Health: 30 வயதை கடந்துவிட்டீர்களா? இந்த சோதனைகள் மேற்கொள்வது அவசியம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com