6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்

மன அழுத்தம், உடல் செயல்பாடுகளுக்கான உந்துதல் குறைதல் மற்றும் மோசமான உணவுத் தேர்வுகள் போன்ற இதயத்துக்கு பாதிப்பு விளைவிக்கும் பழக்கங்கள் உருவாக தூக்கமின்மை அல்லது இன்ஸோம்னியா காரணமாக அமையலாம்
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்Twitter

தூக்கமின்மை இன்றைய காலக்கட்டத்தில் பரவலாக இருந்து வரும் நோயாக உள்ளது. ஆனால் இது இதய கோளாறு உள்ளிட்ட மோசமான பிரச்னைகளை உருவாக்கக் கூடியது.

உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றுக்கு தூக்கமின்மை வழிவகுக்கும்.

2021ல் செய்யப்பட்ட ஆய்வு, மன அழுத்தம், உடல் செயல்பாடுகளுக்கான உந்துதல் குறைதல் மற்றும் மோசமான உணவுத் தேர்வுகள் போன்ற இதயத்துக்கு பாதிப்பு விளைவிக்கும் பழக்கங்கள் உருவாக தூக்கமின்மை அல்லது இன்ஸோம்னியா காரணமாக அமையலாம்.

ஒவ்வொரு இரவும் 7 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்கும் பெரியவர்களுக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்படும். மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் தோன்றி இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

தொடர்ந்து சரியாக தூங்காமல் இருப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதய செயலிழப்பு, சிறுநீரக பிரச்னைகளை உருவாக்கும்.

ஒரு வளர்ந்த நபர் ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வலியுறுத்துகிறது.

6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்
இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?

எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதுடன் நன்றாக தூங்குகிறோமா என்பதும் முக்கியம். ஏனென்றால் தூக்கத்தின் போது தான் நம் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும்.

உங்கள் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் தூக்கத்தின்போது ஒழுங்குபடுத்தப்படுகின்றன. தினசரி 7 மணி நேரத்துக்கு அதிகமான தூக்கம் இல்லாமல் போனால் மன அழுத்தம் உருவாகும் ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்யும். இது இரத்த நாளங்களைச் சுருக்கி இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா? உங்கள் இதயத்தில் இந்த பிரச்னைகள் இருக்கலாம்
உறங்கும் போது வாசனை தெரியாது, தும்மல் வராது: தூக்கம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com