இந்தியா கோவிட்-19 XE variant : என்னென்ன அறிகுறிகள்?

XE என்பது ஓமிக்ரான் வேரியன்ட். மற்ற ஒமிக்ரான் மியூட்டேஷனைவிட 10 சதவிகிதம் அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. உலகச் சுகாதார அமைப்பு (WHO) XE recombinant (BA.1-BA.2) ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது என்று கூறியது.
கோவிட்-19 XE variant
கோவிட்-19 XE variantNewsSense
Published on

இந்தியாவில் ஒருவர் XE variant கோவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்தான் முதல் பாதிப்பாளராக மும்பையில் பதிவாகியுள்ளார். BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டும் ஓமிக்ரான் ஹைபிரிட்கள். பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நகரத்திற்குச் சென்ற 50 வயதுப் பெண்ணிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது என்று பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நோயாளிக்கு வைரஸ் பாதித்தற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வைரஸ் பாதித்ததாகக் கண்டறியப்பட்டு, இவர் பின்னர்த் தனிமைப்படுத்தப்பட்டதாக BMC தெரிவித்துள்ளது.

XE என்பது ஓமிக்ரான் வேரியன்ட். மற்ற ஒமிக்ரான் மியூட்டேஷனைவிட 10 சதவிகிதம் அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. உலகச் சுகாதார அமைப்பு (WHO) XE recombinant (BA.1-BA.2) ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது என்றும் அதன்பின்னர் 600 க்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியது.

கோவிட்-19 XE variant
மீண்டும் கொரோனா : இதுதான் சீனாவின் இப்போதைய நிலை - கள தகவல்கள்

எவ்வாறாயினும், தற்போதைய சான்றுகள் இது கோவிட் -19 இன் 'XE' variant என்று கூறவில்லை என்று அதிகாரிகளின் வட்டாரங்கள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தன. "XE வேரியன்ட் எனக் கூறப்படும் மாதிரியை, INSACOG-இன் மரபணு நிபுணர்களால் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன" என்று தெரியவந்துள்ளது.

XE வேரியன்ட் தாய்லாந்து மற்றும் நியூசிலாந்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மியூட்டேஷன் குறித்து இன்னும் விரிவான தகவல்களைத் தருவதற்கு மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன என WHO கூறியுள்ளது.

XE வேரியன்ட் மிகவும் ஆபத்தானது எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை அனைத்து ஓமிக்ரான் வகைகளும் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது.

கோவிட்-19 XE variant
Morning News Tamil : மும்பையில் ஒருவருக்கு புதிய Covid Variant XE - மத்திய அரசு விளக்கம்
Covid Variant XE
Covid Variant XENewsSense

Omicron XE இன் அறிகுறிகள் என்னென்ன?

அறிகுறிகள் சிலருக்கு லேசானதாகவும் மற்றவர்களுக்குக் கடுமையானதாகவும் இருக்கலாம். புதிய வேரியன்ட் வேகமாகப் பரவுகிறது.

தடுப்பூசி போடபட்டவரின் உடல்நிலை மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, கோவிட்-19 வைரஸின் அறிகுறிகளும் தீவிரமும் நபருக்கு நபர் மாறுப்படும்.

காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை அரிப்பு எடித்தல், இருமல் மற்றும் சளி, தோல் எரிச்சல் மற்றும் நிறமாற்றம், இரைப்பை குடல் பாதிப்பு போன்றவை கவனிக்கப்பட வேண்டிய சில அறிகுறிகளாகும்.

கடுமையான நோய்களின் சில அறிகுறிகளாக இதய நோய், படபடப்பு, சில சமயங்களில் வைரஸ் கடுமையான நரம்பு தொடர்பான நோய்களையும் ஏற்படுத்தலாம்.

சோர்வு மற்றும் தலைச்சுற்றல் சில ஆரம்ப அறிகுறிகளாகும். அதைத் தொடர்ந்து தலைவலி, தொண்டை புண், தசை வலி மற்றும் காய்ச்சலும் வரலாம்.

ஆனால், இந்தப் புதிய ஒமிக்ரான் வேரியன்ட்டில் முன்பு இருந்த கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகளாக இருந்த வாசனை மற்றும் சுவை இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் இந்த ஒமிக்ரான் வேரியன்ட்டில் பெரிதாகக் காணப்படவில்லை. இந்தப் பொதுவான அறிகுறிகள் சிலரிடம் மட்டுமே மிக அரிதாகக் காணபட்டுள்ளது.

கோவிட்-19 XE variant
இலவசங்களால் இந்தியாவில் இலங்கை போன்றதொரு நிலை வருமா? - Analysis

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com