Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?

முலாம்பழங்கள் சீசன் பழங்கள். ஏப்ரல் மே மாதங்களில் 50, 60 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். இவை அதிக கிராக்கியாக இருந்தாலும் 100 ரூபாய்க்குள் தான் விற்கப்படும். ஆனால் இந்த முலாம்பழத்தின் விலையில் நாம் ஒரு காரே வாங்கிவிடலாம்.
Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?
Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?Twitter

பழங்கள் எல்லாம் உடலுக்கு சக்தி கொடுப்பவை என்பதை நாம் அறிவோம். பழங்களை எப்போதும் உறித்து சாப்பிட முடியாது என்பதனால் நாம் ஜூஸ் போட்டுக் குடித்துக்கொள்வோம்.

அப்படி அதிகமாக நாம் ஜூஸ் போட்டுக்குடிக்கும் பழங்களில் ஒன்று முலாம்பலம். முலாம்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமிருக்கிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு இதனை உண்பது நல்லது.

பொதுவாக சந்தைகளில் 100 ரூபாய்க்குள் நம்மால் முலாம்பழங்களை வாங்கிவிட முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வகை முலாம்பழம் லட்சங்களில் விற்கப்படுகிறது.

முலாம்பழங்கள் சீசன் பழங்கள். ஏப்ரல் மே மாதங்களில் 50, 60 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். இவை அதிக கிராக்கியாக இருந்தாலும் 100 ரூபாய்க்குள் தான் விற்கப்படும். ஆனால் இந்த முலாம்பழத்தின் விலையில் நாம் ஒரு காரே வாங்கிவிடலாம்.

Yubari King என்று அழைக்கப்படும் இந்த முலாம்பழம் தான் அது. இவை ஜப்பானில் யுபாரி என்ற பகுதியில் மட்டுமே வளர்கின்றன. உலகிலேயே விலையுயர்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நகரின் காலநிலையில் மட்டுமே இந்த முலாம்பழங்களை வளர்க்க முடியும். இதுதான் இந்த பெயருக்கான காரணமும் கூட.

யுபாரி பகுதியின் பகல் மற்றும் இரவு வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் தான் அதன் தனிச்சிறப்பு மிக்க இனிப்பு, புளிப்பு சுவைக்கு காரணமாக இருக்கிறது. குறைந்த அளவிலேயே இதனை சாகுபடி செய்வதனால் யூபாரி கிங் பழங்களை விற்பது இல்லை. மாறாக ஏலத்தில் விடுகின்றனர்.

Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?
உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?

இந்த பழங்களை கடந்த 2022ம் ஆண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம்விட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 18 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?
சலாலா : 3 மாதம் மட்டும் மழைக்காடாக மாறும் பாலைவனம் - ஓமன் அதிசய காடு பற்றி தெரியுமா?

யுபாரி கிங் பழத்தில் பொட்டாசியம். வைட்டமின் சி, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Yubari King: 20 லட்சம் விலைக்கு முலாம்பழங்கள் - எங்கே விளைகின்றன தெரியுமா?
பாவோபாப்: தண்ணீரை சேர்த்து வைக்கும் ஆப்பிரிக்காவின் அதிசய மரங்கள் - தமிழகம் வந்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com