தடை செய்யப்பட்ட 10 புத்தகங்கள் : சாத்தானின் வாசகங்கள் முதல் இந்துக்கள் மாற்று வரலாறு வரை!
புத்தகங்கள் நம் அறிவை வளர்ப்பவை என்பதை நாம் அறிவோம். இந்த தலைமுறை குழந்தைகள் அதிகமாக புத்தகம் படிப்பது இல்லை என்பது பெரியவர்களின் பெரும் குறையாக இருக்கிறது.
புதினங்களோ ஆவணங்களோ, புத்தகங்கள் மனிதர்களை புதிய ஒருவராக மாற்றும் திறன் படைத்தவை. ஒவ்வொரு புத்தகமும் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதை வாசகர்கள் மட்டுமே அறிவர்.
எல்லா புத்தகங்களும் மனிதர்களுக்கும் சமுகத்துக்கும் நன்மைபயப்பதாகவே இருக்கும் என்றும் கூறிவிட முடியாது. புத்தகம் எழுதப்படும் மொழி, நடை ஆகியவை ஒருதலைபட்சமாக, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அல்லது அரசுக்கு எதிரானதாக இருக்கலாம்.
இப்படிப்பட்ட காரணங்களால் புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பிரபலமான 10 புத்தகங்கள் பற்றிப் பார்க்கலாம்.
Nine Hours to Rama by Stanley Wolpert
காந்தியின் மரணத்துக்கு பின்னிருக்கும் சதி, அவரது பாதுகாப்பு விஷயத்தில் அரசின் திறமையின்மை ஆகியவற்றைக் குத்திக்காட்டி எழுதப்பட்ட புத்தகம் இது. இது வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும் விதத்துக்காக தடை செய்யப்பட்டது.
Shivaji: Hindu King in Islamic India by James Laine
இந்த புத்தகம் சமூக விரோதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களைக் கொண்டிருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு தடை செய்யப்பட்டது.
The Ramayana as told by Aubrey Menen
இந்து மதத்தின் முக்கிய புராணத்தை விளையாட்டுத்தனமாக புனைந்ததற்காக இந்து மத தலைவர்களின் கோபத்துக்கு ஆளானது இந்த புத்தகம்.
The Price of Power by Seymour Hersh
முன்னாள் இந்திய பிரதமரை சிஐஏ தகவலளிப்பவராக சித்தரித்ததற்காக தடை செய்யப்பட்டது.
The Polyester Prince: The Rise of Dhirubhai Ambani by Hamish McDonald
அம்பானி குடும்பத்தின் மீது அவதூறுகள் பரப்பியதாக தடை செய்யப்பட்டது.
The Hindus: An Alternative History by Wendy Doniger
இந்துக்கடவுள்களை நகைச்சுவையாக சித்தரித்ததாக தடை செய்யப்பட்டது.
Such a Long Journey by Rohinton Mistry
கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது இந்த புத்தகம். சிவ சேனா கட்சி மற்றும் மராத்தி பேசும் மக்களை இழிவாக சித்தரித்தற்காக தடை செய்யப்பட்டது.
Lajja by Taslima Nasrin
இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக தடை செய்யப்பட்டது.
Mother India by Katherine Mayo
இந்தியாவின் பெண்கள், தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட மக்கள், விலங்குகள் மற்றும் தேசியவாத அரசியல்வாதிகளின் குணநலன்களைப் பற்றிய கருத்துகளுக்காகவும் இளம் பெண்களின் திருமண பிரச்னைகள் பற்றி பேசியதற்காகவும் தடை செய்யப்பட்டது.
The Satanic Verses by Salman Rushdie
இறைவாக்கினர்களை அவமதிக்கும் கருத்துக்களுக்காக தடை செய்யப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust