இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமே ராமருக்கு கோவில்கள் எழுப்பப்பட்டு அவரை வழிபடுவது தான் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ராவணனுக்கு கோவில் கட்டி வழிபடும் சில இடங்களும் இருக்கின்றன. எங்கெல்லாம்? இந்த பதிவில் பார்க்கலாம்
இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?
இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?twitter

இந்தியாவில் அதிகமாக பரவியிருக்கும் இந்து மதத்தின் முக்கிய இதிகாச நூல்களில் ஒன்று தான் ராமயாணம். இதன் கதையை நாம் சிறுவயதில் இருந்து கேட்டும், நாடகங்களாக பார்த்தும் வளர்ந்திருப்போம்.

இந்த கதையில் வரும் , ராவணன் என்ற கதாபாத்திரத்தை பற்றி நமக்கு தெரியும். பத்து தலை கொண்ட ஒரு ராட்சனாக, காண்பிக்கப்படும் ராவணனை தசரா சமயத்தில் கொல்வது போன்ற சடங்குகள் இந்தியாவில் பிரபலம்.

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமே ராமருக்கு கோவில்கள் எழுப்பப்பட்டு அவரை வழிபடுவது தான் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ராவணனுக்கு கோவில் கட்டி வழிபடும் சில இடங்களும் இருக்கின்றன.

எங்கெல்லாம்? இந்த பதிவில் பார்க்கலாம்

தஷனன் கோவில், கான்பூர்

கான்பூரில் அமைந்திருக்கும் இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமையானது. தஷனன் என்ற சொல், பத்து தலை கொண்ட ராவணனை குறிக்கிறது.

ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டும் தான் இந்த கோவில் திறக்கப்படுகிறது. தசரா சமயத்தில், இந்த கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. அந்த நாளில் ராவணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

தகவல்களின் அடிப்படையில், 1890ஆம் ஆண்டு ராஜா குரு பிரசாத் சுக்லா என்பவர் இந்த கோவிலைக் கட்டினார். அறிவில் சிறந்த ஞானியாகவும், சிவனின் பக்தனாகவும் உள்ளதால், ராவணன் போற்றப்படுவதாக கூறப்படுகிறது

ஜோத்பூர், ராஜஸ்தான்

ஜோத்பூரின் பல இடங்களில் தினசரி ராவணனை வழிபடும் வழக்கம் உள்ளது. கதைகளின் படி, ராவணன் மண்டோதரி என்ற பெண்ணை மணந்திருந்தார்.

அந்த சமயத்தில் இவர்களது அரண்மனை, சரஸ்வதி நதியின் கரைகளில் தான் அமைந்திருந்தது. இப்போது ஜோத்பூர் பகுதியில் வாழும் ராவணனின் வம்சத்தினர், அவரை கடவுளாக வழிபடுகிறார்கள். தசரா சமயத்தில் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் சடங்கிலும் இவர்கள் கலந்துகொள்வது இல்லை

ராவண்கிராம் ராவண கோவில், விதிஷா

இந்த கோவில் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ராவண கிராமத்தில், இலங்கை அரசன் ராவணனுக்கு பிரத்தியேகமாக ஒரு கோவில் உள்ளது. ராவணனின் மனைவி மண்டோதரி இந்த விதிஷா என்ற இடத்தை சேர்ந்தவர். ஆகையால் இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு உள்ளது, பக்தர்கள் இவரை தரிசிக்க வருகின்றனர்.

இந்த கோவிலில் ராவணனுக்கு சுமார் 10 அடியில் சிலை பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டிருக்கிறது

திருமணம் போன்ற முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக தசரா சமயத்தில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கிறது.

காங்கரா, இமாச்சல பிரதேசம்

ராவணன் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்தார் என்று புராணங்கள் சொல்லுகின்றன. இவரது கடுந்தவத்தினால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இவருக்கு வரங்களை அளித்தார்.

அப்படி, ராவணன் தவமிருந்து சிவனிடம் வரம் பெற்ற தலம் தான் இந்த காங்கரா.

இதனால் இங்கு ராவணன் போற்றப்படுகிரார். தசரா சமயத்தில் இங்கு ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதில்லை

இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?
அயோத்தியில் ராமர் கோவில் தவிர பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

ராவண மந்திர், பிஸ்ரக், உ.பி.

இலங்கையை ஆண்ட லங்கேசன் என்ற ராவணன் இந்த ஊரில் தான் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ராவணக் கோவில் இந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும்.

இதனால் இந்த பிஸ்ரக் நகரத்தில், நவராத்திரி ஒன்பது நாட்களும் ராவணனுக்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ராமரை பூஜிப்பவர்களுக்கும், ராவணனை வழிபடுபவர்களுக்கும் இங்கு அவ்வப்போது சண்டைகள், சச்சரவுகளும் வருகிறது

காக்கிநாடா ராவண கோவில், ஆந்திரா

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராவணனுக்கு ஒரு புகழ்பெற்ற கோவில் இருக்கிரது. சிவ பக்தரான ராவணன், சிவனுக்கு கோவில் ஒன்று எழுப்ப விரும்பியதாகவும், அதற்கு இந்த காக்கிநாடா என்ர இடத்தை அவர் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில் சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கோவில் இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று மற்றும், ஆந்திராவில் உள்ள ஒரே ராவணக் கோவிலாகும்

இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?

மண்ட்சார், எம். பி

ஜோத்பூரை போலவே இங்கும் ராவணனை வழிபடும் ஒரு சமூகம் இருக்கிறது. இவர்கள் ராவணனுக்கு கோவில் கட்டியெழுப்பி அவரை வழிபட்டு வருகின்றனர்.

புராண்க்களின் அடிப்படையில், ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இந்த ஊரில் தான் திருமணம் நடந்தது. இந்த கோவிலில் நாம் நிறைய பெண் தெய்வங்களையும் காணமுடிகிறது.

தவிர, ஹரப்பன் நாகரிகத்தின் பழங்கால எழுத்துஆதாரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன. இதனால் இந்த கோவில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது.

காட்சிரோலி, மகாராஷ்டிரா

இங்கு வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனை வழிபடுகின்றனர். அதுமட்டுமல்லாது, ராவணனின் மகனான மேகானந்தாவையும் இந்த மக்கள் கும்பிடுகிறார்கள். ஃபால்குண் என்ற பண்டிகையின்போது இங்கு ராவணனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?
யம தர்மராஜாவுக்காக கட்டப்பட்ட கோவில் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com