மத்திய பிரதேசம் : உதயகிரி முதல் பாக் வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய வரலாற்று குகைகள்

இது வரலாற்றின் மீதான உங்கள் ஆர்வத்தை மேலும் தூண்டும். சிற்பங்கள் மற்றும் குகை ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கடந்த காலங்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகின்றன.
10 Caves to Explore in Madhya Pradesh by Road
10 Caves to Explore in Madhya Pradesh by RoadTwitter
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் அதன் வளமான வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது.

மத்தியப் பிரதேசம், மயக்கும் குகைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த மாநிலத்தில் குகைகள் ஆய்வு செய்வது ஒரு தனித்துவமான அனுபவமாகும்.

இது வரலாற்றின் மீதான உங்கள் ஆர்வத்தை மேலும் தூண்டும். சிற்பங்கள் மற்றும் குகை ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள், சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கடந்த காலங்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகின்றன.

அப்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்த புகழ்பெற்ற குகைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.

பாக் குகைகள்

மத்திய பிரதேசத்தின் விந்தியா மலைத்தொடரில் அமைந்துள்ள பாக் குகைகள் பாறையில் இருந்து செதுக்கப்பட்ட ஒன்பது நினைவுச்சின்னங்களின் தொகுப்பாகும்.

முன்னதாக, இந்த குகைகள் துறவிகளின் மடங்களாக இருந்தன. மேலும் பல சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இருந்தன.

ஐந்தாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டதாக நம்பப்படும் தூண்களின் எண்ணிக்கை இன்றும் பிரமிக்க வைக்கிறது.

10 Caves to Explore in Madhya Pradesh by Road
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

பிம்பேட்கா குகைகள்

குகை ஓவியங்களைத் தேடுகிறீர்களானால், பிம்பேட்கா குகைகளை பார்க்கலாம்.

பிம்பேட்கா குகைகள் பண்டைய கால கதைகளை வெளிப்படுத்தும் குகை ஓவியங்களுக்கு பிரபலமானது. இந்த குகைகளில் சுமார் 240 பாறை தங்குமிடங்கள் உள்ளன. சில வசீகரமான வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் உள்ளன. பிம்பேட்கா குகைகள் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகும்.

ஆதம்கர் குகைகள்

சிவப்பு மற்றும் வெள்ளை நிற பாறை ஓவியங்களைக் காண ஆதம்கர் குகைகளுக்குச் செல்லலாம், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

இந்த தளத்தில் கிடைத்த தொல்பொருட்கள் கற்காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. வரலாற்று ஆர்வலர்கள் இந்தியாவின் பழங்கால வரலாற்றைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஏற்ற இடம் இது.

சாரு மாரு குகைகள்

சாஞ்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த குகைகளில் பல ஸ்தூபிகள் உள்ளன. அசோகரின் சில கல்வெட்டுகளையும் இங்கே காணலாம்.

அசோகர் இளவரசராக இருந்தபோது இந்த குகைக்கு அவரது குடும்பத்தினர் சென்றதாக நம்பப்படுகிறது. இந்த குகைகளுக்கு உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

10 Caves to Explore in Madhya Pradesh by Road
பூமியின் உட்பகுதியில் ஆச்சரியங்களை அள்ளி தெளிக்கும் சுரங்கம் - விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

உதயகிரி குகைகள்

மத்தியப் பிரதேசத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று உதயகிரி குகைகள். இவை ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்த குகைகளில் இந்து மற்றும் ஜைன மதத்தின் செல்வாக்கு அதிகம் இருப்பதை நீங்கள் காணலாம்.

பிரமாண்டமான நரசிம்மர் சிலையையும், ஆதிசேஷனுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பத்தையும் கண்டு கவருவீர்கள்.

பாந்தவ்கர் பண்டைய குகைகள்

பாந்தவ்கர் தேசிய பூங்காவின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த குகைகள் மத்தியப் பிரதேசத்தில் சாலை வழியாக ஆராய்வதற்கான பிரபலமான குகைகளாகும்.

பிரம்மி எழுத்துக்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளை இங்கு காணலாம்.

மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் சிற்பங்களையும் இங்கு காணலாம். ஒன்பது அறைகள் மற்றும் செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட பாந்தவ்கர் இங்குள்ள மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகும். ஒரு சில குகைகளை தற்போது அணுக முடியாது.

லோஹானி குகைகள்

லோஹானி குகைகள் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இது பாறையில் வெட்டப்பட்ட கோவில்களின் தொகுப்பாகும். அகழ்வாராய்ச்சியின் போது சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் பல இந்து தெய்வங்களின் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

10 Caves to Explore in Madhya Pradesh by Road
இந்திய பாரம்பரிய அடையாளம்: மத ஒற்றுமையின் சாட்சி- எல்லோரா குகைகள் குறித்த ஆச்சரிய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com