இந்திய பாரம்பரிய அடையாளம்: மத ஒற்றுமையின் சாட்சி- எல்லோரா குகைகள் குறித்த ஆச்சரிய உண்மைகள்

எல்லோரா உலகின் மிகப்பெரிய பாறைகளால் வெட்டப்பட்ட இந்து கோவில் குகை வளாகங்களில் ஒன்றாகும். அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த எல்லோரா குகைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
 facts about Maharashtra’s Ellora Caves
facts about Maharashtra’s Ellora CavesTwitter

மகாராஷ்டிராவின் வெருலில் அமைந்துள்ள எல்லோரா, இந்தியாவில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அஜந்தா மற்றும் எல்லோரா என்று நாம் அடிக்கடி கூறினாலும், இவை அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்கள், அவற்றுக்கிடையே சுமார் 103 கிமீ தூரம் உள்ளது.

எல்லோரா உலகின் மிகப்பெரிய பாறைகளால் வெட்டப்பட்ட இந்து கோவில் குகை வளாகங்களில் ஒன்றாகும். அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த எல்லோரா குகைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.

  • எல்லோராவில் மொத்தம் 34 மடங்கள் மற்றும் கோவில்கள் உள்ளன. இக்கோயில்கள் சரநந்திரி மலையில் செதுக்கப்பட்டுள்ளன.

  • எல்லோரா குகைக் கோவிலின் தளம் 2 கிமீ பரப்பளவில் பரவியுள்ளது. இந்த கோவில்கள் இடையறாத வரிசையாக அருகருகே செதுக்கப்பட்டுள்ளன, இது உலகின் மிகவும் சிக்கலான மற்றும் தனித்துவமான கோவில் வடிவமைப்புகளில் ஒன்றாகும்.

  • எல்லோரா குகைகள் பௌத்தம், இந்து மதம் மற்றும் சமண மதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. ஒரே வளாகத்தில் இருப்பது பண்டைய இந்தியாவில் பொதுவான ஒரு வாழ்க்கை முறையை காட்டுகிறது.

 facts about Maharashtra’s Ellora Caves
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்
  • எல்லோராவில் உள்ள பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோவில்கள் 5 மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குகைகள் அனைத்தும் எண்ணிடப்பட்டுள்ளன.

  • மேலும் அங்கு இருக்கும் 1 மற்றும் 12 குகைகள் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இவை புத்த குகைகள் மற்றும் பௌத்த தத்துவத்தின் தடயங்களைக் காட்டுகின்றன.

  • உலகப் புகழ்பெற்ற கைலாச கோவில் அந்த குகைகளின் ஒரு பகுதியாகும் (13-29). கைலாச கோவில், குகை 16 இல் உள்ளது. இது உலகின் மிக அழகான கோவில்களில் ஒன்றாகும்.

  • 30-34 குகைகள் சமண குகைக் கோவில்கள், அவை 9 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தோண்டப்பட்டவை.

 facts about Maharashtra’s Ellora Caves
சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com