பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள் - தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

வனப்பகுதிக்கு வரும்போது மிகப்பெரிய காடுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள்!
பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள்!Twitter

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் கடற்கரையோரத்தில் உள்ள தனித்துவமான சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை இந்தியாவின் காடுகள் பரந்த அளவிலான வாழ்விடங்கள் மற்றும் தாவரங்கள், விலங்கினங்களை உள்ளடக்கியுள்ளது.

புலிகள், யானைகள், சிங்கங்கள் மற்றும் காண்டாமிருகம் போன்ற பல்வேறு வகையான வனவிலங்குகள், எண்ணற்ற பிற விலங்கினங்கள் உட்பட இந்திய காடுகளில் பல விஷயங்கள் உள்ளன.

வனப்பகுதிக்கு வரும்போது சில இந்திய மாநிலங்கள் விதிவிலக்கானவை. மிகப்பெரிய காடுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேசம் இந்தியாவிலேயே மிகப்பெரிய வனப்பகுதியைக் கொண்டுள்ளது. மொத்தம் 94,689 சதுர கிமீ வனப்பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பில் 30.7% ஆகும்!

அருணாச்சல பிரதேசம்

ஏறத்தாழ 83,743 சதுர கி.மீ வனப்பகுதியுடன், அருணாச்சல பிரதேசம் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழமையான காடுகளுக்கு பெயர் பெற்ற அருணாச்சல பிரதேசம், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் சபால்பைன் காடுகள் உட்பட விரிவான காடுகளைக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா, மொத்தம் 61,907.08 சதுர கி.மீ வனப்பகுதியைக் கொண்டுள்ளது. வெப்பமண்டல இலையுதிர் காடுகள், முள் காடுகள், சதுப்புநிலக் காடுகள் உள்ளிட்ட பல்வேறு வன சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஒடிசா

வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்புநிலக் காடுகள் உட்பட தோராயமாக 61,204.17 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்த காடுகளுடன், ஒடிசா இயற்கை அனுபவங்களுக்கு வருகை தரும் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள்!
Kenya: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள் - கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் என பரந்த காடுகளின் தாயகமாக உள்ளது. மாநிலத்தில் தோராயமாக, 59,772 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனப்பகுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா

43,382 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பதிவு செய்யப்பட்ட வனப்பகுதியுடன், கர்நாடகாவில் ஐந்து புலிகள் காப்பகங்கள், 30 வனவிலங்கு சரணாலயங்கள், 15 பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் 1 சமூக காப்பகங்கள் உள்ளன. கர்நாடக காடுகள் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம் வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் என தோராயமாக 37,258 சதுர கிமீ பரப்பளவில் வனபகுதியை கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கும் காடு, கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும்.

அசாம்

அசாமின் மொத்த பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 26,832 சதுர கிமீ ஆகும். இது மாநிலத்தின் புவியியல் பரப்பளவில் 34.21% என கூறப்பட்டுள்ளது.

பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள்!
பெரியார் ஏரி முதல் வோல்டா வரை : உலகெங்கிலும் நீரில் மூழ்கிய காடுகள் குறித்து தெரியுமா?

ஜார்கண்ட்

மொத்தம் 23,605 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஜார்கண்ட் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. ஜாம்ஷெட்பூரின் சரண்டா காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடு என்பது உங்களுக்குத் தெரியுமா? மிகவும் சுவாரஸ்யமாக, ஜார்கண்ட் என்ற பெயர் காடுகளால் சூழப்பட்ட நிலம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெரிய காடுகளைக் கொண்ட 10 இந்திய மாநிலங்கள்!
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 22,877 சதுர கிமீ ஆகும். இது மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பில் 17.59% ஆகும். கிழக்கு தொடர்ச்சி மலையின் ரத்தினமான நீலகிரி மலைத்தொடரை இங்கு காணலாம். தமிழ்நாட்டின் காடுகள் இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் காண சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com