பெரியார் ஏரி முதல் வோல்டா வரை : உலகெங்கிலும் நீரில் மூழ்கிய காடுகள் குறித்து தெரியுமா?
கடல் மட்ட உயர்வால் சில காடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தற்போது அவற்றின் எச்சங்கள் தான் தென்படுகின்றன.
அடர்ந்த காடுகள் கடல் மட்ட மாற்றத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக சேறு அல்லது மணலில் புதைக்கப்பட்டு விட்டன.
அப்படி உலகெங்கிலும் உள்ள நம்பமுடியாத நீரில் மூழ்கிய காடுகள் குறித்து இங்கே காணலாம்.
Lake Kaindy, Kazakhstan
கைண்டி ஏரி கஜகஸ்தானில் உள்ள 400 மீட்டர் நீளமுள்ள ஏரியாகும். இது அல்மாட்டி நகரத்திலிருந்து 129 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கைண்டி ஏரிக்கான பாதையானது சத்தி பள்ளத்தாக்கு, சிலிக் நதி பள்ளத்தாக்கு, இதன் வழி முழுவதும் பல அழகிய காட்சிகளைக் கொண்டுள்ளது.
நீரில் மூழ்கிய Picea schrenkiana மரங்களின் தண்டு மட்டுமே மேற்பரப்பில் தெரிகின்றன. இது ஒரு பெரிய நிலச்சரிவின் விளைவாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Lake Bezid, Romania
ருமேனியாவின் திரான்சில்வேனியா பகுதியில் அமைந்துள்ள பெசிட் ஏரியானது, பெசிட் கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய பிறகு செயற்கையாக உருவாக்கப்பட்டது.
ஏரியின் அடிப்பகுதியில் உள்ள வீடுகளை தவிர உள்ளூர் தேவாலய கோபுரம் மற்றும் மரங்கள் மட்டுமே இன்னும் காணப்படுகின்றன.
ஆற்றுப் பள்ளத்தாக்கில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அணை கட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த கிராமத்தில் வசித்தவர்கள் தங்கள் வீடுகள் நீரில் மூழ்கியபோது வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.
Lake Periyar, India
கேரளாவின் மிகவும் பிரபலமான ஏரிகளில் ஒன்று பெரியாற்றில் உள்ளது. பெரியாறு ஏரி பெரும்பாலும் தேக்கடி ஏரி என்றும் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், பெரியார் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்குள் அதன் தெளிவான இடம் பெரியார் ஏரி என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறது.
தற்போது ஏரியானது, தண்ணீரில் இருந்து எழுந்து நிற்கும் மரங்களை கொண்டுள்ளது. 55 கிமீ² பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, பெரியாறு ஆற்றின் மூலமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக சுரங்கப்பாதை வழியாக தமிழ்நாட்டின் வைகை நதிக்கு நீர் வழங்குகிறது.
Lake Volta, Ghana
கானாவின் வோல்டா ஏரியிலிருந்து எண்ணற்ற பட்ட மரங்கள் வெளிப்படுகின்றன. இது வேறு எந்த நீர்த்தேக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது.
நாட்டின் பெரும்பகுதிக்கு மின்சாரத்தை வழங்கும் அகோசோம்பா நீர்மின் அணையால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
Lake Caddo, Texas
கேடோ ஏரி 25,400 ஏக்கர் கொண்டு டெக்சாஸ் மற்றும் லூசியானா இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ளது.
இந்த ஏரியை அற்புதமான சைப்ரஸ் மரங்கள் ஆக்கரமித்துள்ளன. அவற்றின் பிம்பங்கள் நீரில் விழுவதால் தண்ணீரே பச்சை நிறமாக பிரதிபலிக்கின்றன.
இது உலகின் மிகப்பெரிய சைப்ரஸ் காடுகளின் தாயகமாக கொண்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

