இறந்த 2 வயது தம்பியின் உடலை கையில் தூக்கி சென்ற 10 வயது அண்ணன் - உ.பி.யில் அவலம் | Video

கோபமடைந்த மனைவி, அந்த குழந்தையை தூக்கி சென்று சாலையில் கடந்து சென்ற வாகனத்தின் முன்பு வீசியுள்ளார். வாகனம் ஏறியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
10 yearold boy carries brother dead
10 yearold boy carries brother dead Twitter
Published on

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த 2 வயது தம்பியின் உடலை 10 வயது சிறுவன் கைகளில் சுமந்து சென்ற அவலம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது

உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த பிரவீண் குமார் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு 2 வயது மற்றொருவருக்கு 10 வயது.

கடந்த வெள்ளி கிழமையன்று குழந்தை இடைவிடாமல் அழுதுள்ளது. இதனால், கோபமடைந்த மனைவி, அந்த குழந்தையை தூக்கி சென்று சாலையில் கடந்து சென்ற வாகனத்தின் முன்பு வீசியுள்ளார். வாகனம் ஏறியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

dead body
dead bodyTwitter

இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் உடற்கூறாய்வு பாக்பத் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது.

குழந்தை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட போது, மருத்துவமனை ஊழியர்கள் மருத்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் தன் தம்பி உடலை அவனது 10 வயது அண்ணன் வெள்ளைத் துணியால் சுற்றி, கைகளில் தூக்கி சென்றுள்ளார்.

10 yearold boy carries brother dead
கணவனை கவனித்துக்கொள்ள புது காதலியை தேடும் மனைவி - என்ன காரணம்?

இதை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, காணொளி நெட்டிசன்கள் மத்தியில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரவீண் குமார் கூறும்போது, ‘இங்கிருந்து எனது வீடு சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. வீடியோ வெளியானது மூலம் தகவல் கிடைத்து பாக்பத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஆம்புலன்ஸ் அனுப்பி விட்டார் என்றார்.

10 yearold boy carries brother dead
கணவரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் மனைவி - என்ன, எங்கே, எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com