தாய்லாந்தில் தனது கணவனை கவனித்துக்கொள்ள வேறொரு பெண்ணை வேலைக்கு எடுத்துள்ளார் ஒரு பெண். இதற்காக அவர் சொன்ன கண்டிஷன்கள் இரண்டு தான். அந்த பெண் அழகாக இருக்கவேண்டும். அவர் படித்திருக்கவேண்டும்.
பாங்காகை சேர்ந்த பத்தீமா சம்னன் என்ற 44 வயதான பெண் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, தான் தன் கணவரை கவனித்துக்கொள்வதற்காக இளமையான, திருமணம் ஆகாத, டிப்ளமா படித்த பெண்ணை தேடுவதாக கூறியிருந்தார்.
அப்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணுக்கு 15,000 பாஹ்த் எனப்படும் தாய்லாந்து பணத்தை சம்பளமாக தருவதாக தெரிவித்தார். அதாவது இந்திய மதிப்பில் இது 33,800 ரூபாய்.
அவர் மொத்தம் 3 பெண்களை தேர்ந்தெடுக்கப்போவதாகக் கூறினார். இருவர் சம்னனுக்கு அலுவலகத்தில் உதவியாளராக இருக்கவேண்டும் என்றும், ஒருவர் தனது கணவரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
தான் தன் கணவருடன் உடலுறவில் ஈடுபடுவதில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். இது சம்னனை ஒரு நல்ல மனைவி இல்லை என நினைக்க வைத்து விடக்கூடாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
தன் கணவரை மிகவும் நேசிப்பதாக கூறிய சம்னன், அவரது கணவர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைப்பதாகவும், இதனால் கணவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைத்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் சொல்லியிருந்தார்.
இதனால் தன் மேல் தவறான அபிப்பிராயத்தை யாரும் கொள்ளவேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், தான் மன உளைச்சலால் பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் தன் கணவருக்கு தேவையானவற்றை தன்னால் செய்யமுடியவில்லை என்று தெரிவித்த சம்னன், தனக்கு உதவி புரியுமாறு அந்த வீடியோவில் கேட்டிருந்தார்.
இந்த பெண்களுக்கு தங்கவும், உணவும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் சொல்லியிருந்தார். அப்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எப்போதும் சண்டை வராது என்றும் சம்னன் உறுதியளித்தார்.
நேர்காணல் முடிந்து ஒரு 33வயது பெண்மணி தங்களது குடும்பத்தில் சேர்வுள்ளதாக தெரிவித்த சம்னன், முதலில் தன் கணவர் இதை கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust