மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!

வடகிழக்கிலிருக்கும் இந்த மாநிலங்கள் தான் இந்தியாவிலேயே அழகான பகுதிகள் என அடித்துச்சொல்லலாம். குறிப்பாக மணிப்பூரை இந்தியாவின் அணிகலன் என்று வர்ணிக்கிறார் ஜவஹர்லால் நேரு. பலவிதமான பழங்குடி மக்கள், கலாச்சாரங்கள், பல மதங்கள் என பாரம்பரிய புதிர்களைக் கொண்டிருக்கிறது.
மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!
மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!டிவிட்டர்

இந்தியாவின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ள வட இந்தியா, தென்னிந்தியா என்ற கோணம் போதாதது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பல விதமான கலாச்சார புதிர்களை கொண்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் எப்படி திராவிட நிலமாக பார்க்கப்படுகிறதோ அவ்வாறு இந்த 7 மாநிலங்களை சகோதரி மாநிலங்களாக பார்கின்றனர்.

மேகாலயா, அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களே அந்த சகோதரிகள். இந்தியாவின் வடகிழக்கிலிருக்கும் இந்த பகுதிகள் தான் இந்தியாவிலேயே அழகான பகுதிகள் என அடித்துச்சொல்லலாம். குறிப்பாக மணிப்பூரை இந்தியாவின் அணிகலன் என்று வர்ணிக்கிறார் ஜவஹர்லால் நேரு.

பலவிதமான பழங்குடி மக்கள், கலாச்சாரங்கள், பல மதங்கள் என என பாரம்பரிய புதிர்களைக் கொண்டிருக்கும் இந்த மண் பற்றியும், மக்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்,

சிலிகுரி நடைபாதை (Siliguri Corridor )

இந்திய வரைபடத்தில் மிகவும் சிக்கலான பகுதியாக கருதப்படும் சிலிகுரி நடைப்பாதை இங்கு உள்ளது. வெறும் 22 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பகுதி நாட்டின் வடமேற்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கிறது. இந்த பகுதிக்கு கோழியின் கழுத்து என்றும் பெயர் உள்ளது. கோழியின் தலையை எப்படி உடல் என்ற பெரிய பகுதியுடன் கழுத்து இணைக்கிறதோ அப்படி இந்த பகுதி செயல்படுகிறது

உலகிலேயே மிகப் பெரிய ஆற்றுத் தீவு

கடல் சூழ்ந்திருக்க தீவு இருப்பது போல ஆறு சூழ்ந்திருக்கவும் தீவுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஆற்றுக்கு நடுவிலிருக்கும் தீவுகளில் அசாம் மாநிலத்தில் உள்ள மஜுலி தீவு தான் மிகப் பெரியது. இது பிரம்மபுத்ரா ஆற்றின் நடுவே 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது.

இந்தியாவிலேயே மிக நீளமான பாலம்

கிழக்கு அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் புபென் ஹசாரிக்கா பாலம் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய பாலம். தோலா சதியா என்ற பெயரையும் கொண்டுள்ள இதன் மொத்த நீளம் 9.1 கிலோ மீட்டர்.

உலகிலேயே மிகப் பெரிய நெசவு கிராமம்

அசாமில் உள்ள சால்குச்சி (Sualkuchi) கிராமம் தான் உலகின் மிகப் பெரிய நெசவு கிராமமாக கருதப்படுகிறது. இங்கு பலவிதமான பட்டுத் துணிகள் தயாரிக்கப்படுகிறது. தங்க முகா பட்டுக்கு அசாம் பெயர்பெற்றது.

மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!
Ladakh : சுற்றுலா பயணிகளால் சுடுகாடாகும் லடாக் - தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள்

இந்தியாவில் சூரியன் உதிக்கும் நிலம்!

அருணாச்சல பிரதேசம் தான் இந்தியாவிலேயே முதல் முதலாக சூரியன் உதயமாகும் இடம். நமக்கு சூரியன் உதிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரே அங்கு சூரியன் உதயமாகிவிடும். அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டாங் என்ற இடத்தில் தான் முதன்முதலில் சூரியன் உதயமாகும்.

உலகின் ஒரே மிதக்கும் சரணாலயம்

மணிப்பூரில் உள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இருக்கிறது கெய்புல் லாம்ஜௌ தேசியப் பூங்கா (Keibul Lamjao National Park). இந்தியாவில் புதைந்திருக்கும் வைரங்களுல் இதுவும் ஒன்று. இங்கு மான்களும் பறவைகளும் இருக்கின்றன. லோக்தாக் ஏரியின் (Loktak Lake) ஒரு பகுதி இங்கு இருக்கிறது. இங்கு ஒரு சதுப்பு நிலத்தை விட அதிக தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில் ஒரு ஏரி எனக் கூறிவிடவும் முடியாது.

மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!
உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

உலகிலேயே ஈரமான நிலம்

மேகாலயா மாநிலத்தில் உள்ள மௌசின்ராம் தான் உலகியேயே ஈரப்பதமான நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு 10000 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகிறது.

ஆசியாவிலேயே சுத்தமான ஆறு மற்றும் கிராமம்

ஆசியாவிலேயே சுத்தமான ஆறாக அறியப்படுவது மேகாலயா மாநிலத்தின் உமங்கோட் மாவட்டத்தில் உள்ள டாவ்கி ஆறுதான், இந்த ஆறு இருக்கும் மவ்லிங்க் (Mawlynnong) கிராமம் தான் ஆசியாவிலேயே சுத்தமான கிராமம்.

உயிருள்ள வேர்பாலங்கள்

மேகாலயாவிலிருக்கும் காசி பழங்குடி மக்கள் உயிருள்ள மரங்களின் வேர்களால் உருவான இந்த பாலங்களைப் படைத்துள்ளனர்.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாய்நிலம்

அழிந்து வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு வசிக்கின்றன. உலகில் உள்ள 90% ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் (Kaziranga National Park) தான் இருக்கின்றன.  

போர்கள்

இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கு பெறவில்லை என்றாலும் அசாம் மற்றும் நாகாலந்து மாநிலங்கள் பங்கு பெற்றன.

இந்தியா முழுமையையும் முகலாயர்கள் ஆட்சி செய்த போதிலும் இந்த 7 மாநிலங்களையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அசாமின் மேற்குப் பகுதியில் முகலாயர்கள் உள் நுழைந்தாலும் அஹோம் வீரர்கள் அவர்களை விரைவில் விரட்டியடித்தனர்.

மேகாலயா டு மணிப்பூர்: 7 சகோதரி மாநிலங்கள் பற்றிய 11 வியப்பூட்டும் உண்மைகள்!
Manipur : பெண்களால் இயக்கப்படும் 500 வருட பழைய சந்தை - பாரம்பரியத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com